சூர்ப்பணகை (Shurpanakha, சமசுகிருதம்: शूर्पणखा, ப.ச.ரோ.அ: śūrpaṇakhā) என்பவள் இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு பாத்திரம். இவள் அரக்கர் குலத்தைச் சேர்ந்த இலங்கை அரசன் இராவணனின் தங்கை.[1] இவளது ஏனைய சகோதரர்கள் கும்பகர்ணன், விபீடணன், கரன் மற்றும் தூஷணன் ஆவார். 14 ஆண்டு வன வாசத்தின் போது இராமன், சீதை மற்றும் இலட்சுமணன் ஆகியோர் தண்டகாரண்யம் காட்டில் வாழ்ந்து வந்தபோது, சூர்ப்பணகை இராமன் மீது ஆசை கொண்டாள்.[2] சூர்ப்பணகை ராமனை அடையும் பொருட்டு சீதையைக் கொலை செய்ய முயலகையில் அது தடுக்கப்பட்டு இலட்சுமணன் அவளது மூக்கையும், காதுகளையும் வெட்டித் துரத்திவிட்டான். இதனால் கோபமடைந்த சூர்ப்பணகை தனது அண்ணன் இராவணனிடம் முறையிட்டாள். தனது தங்கைக்கு நேர்ந்த நிலையையிட்டுச் சினம் கொண்ட இராவணன், இராமனைப் பழிவாங்க எண்ணிச் சீதையைக் கவர்ந்து கொண்டு வந்து இலங்கையின், அசோகவனத்தில் சிறை வைத்தான்.

Thumb
சூர்ப்பனகையின் மூக்கை அரியும் இலக்குவன்

சூர்ப்பணகையின் அழகு

சூர்ப்பனகை ஒரு அழகான மங்கை என்பது பல இடங்களில் மறைக்கப்படுகிற ஒரு நிகழ்வு. பொதுவாக அவள் அழகில்லாத பெண்ணாகவே இராமாயணத்தில் சித்தரிக்கப்படுகிறாள். அவள் எத்தகைய அழகு மங்கை என்பதை கம்பன் இராமன் வாயிலாகவே வெளிப்படுத்துகிறார்.

பிறக்கும்போதே அவள் தன் தாய் கேகசி மற்றும் பாட்டி தாடகை ஆகியவர்களையும் அழகில் விஞ்சியிருந்தாள். அவள் கண்களின் அழகை முன்னிட்டு மீனாட்சி என்றும் அழைக்கப்பட்டாள்.

செங் கயல்போல் கரு நெடுங் கண், தே மரு தாமரை உறையும்

நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம்? என்ன, - (கம்பராமாயணம் ஆரணிய காண்டம் பாடல்:117)

பொருள்: சிவந்த கயல் மீன் போன்று பிறழும் கரிய நீண்ட கண்கள் கொண்டவள். தேன் ஊறும் தாமரை வசம் செய்யும் திருமகள் இலட்சுமி இவளே என்று இராமன் இயம்புகிறான்.

வால்மீகி ராமாயணத்தில்

கம்பராமாயணத்தில் மேற்படி இருந்தாலும், வால்மீகியில் அவ்வாறு இல்லை. அவள் ராமனைக் கண்டு மோகிக்கும்போது, கிழப்பருவம் எய்திய ஒரு ராட்சசியாகவே வர்ணிக்கப்படுகிறாள்.இராமனின் அழகில் மயங்கிய சூர்ப்பனகை, அவன் தன்னை மணந்துக்கொள்ள விரும்பினால்‌. இராமன் ஏகபத்தினிவிரதன் என்பதால் அவன் தனக்கு ஒரேயொரு மனைவி தான் எனக்கூறி தவிர்க்கிறார். பொறுக்க இயலாத சூர்ப்பனகை இராமனை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் சீதையைக் கொல்ல துணிகிறாள். சீதையைக் காக்க எண்ணிய இலக்குவன் அவள் மூக்கையும் காதுகளையும் வெட்டிவிடுகிறான்.

கம்பராமாயணத்தில், காதுகளையும், மூக்கையும், முலையையும் அரியும் லட்சுமணன், மூலக்கதையான வால்மீகியில் காதுகளையும் மூக்கையும் மட்டுமே அரிகிறான்.

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.