இலட்சுமணன்

From Wikipedia, the free encyclopedia

இலட்சுமணன்

இராமாயணத்தின்படி இலட்சுமணன் (அல்லது இலக்குவன்) அயோத்தியை ஆண்ட தசரத மன்னனின் மைந்தர்களுள் ஒருவர். இவருடைய தாயார் சுமித்ரா. இவருடைய மனைவி ஊர்மிளா. இவர் இராமனுக்கு இளையவர் ஆவார். இராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்ற போது இவரும் அவருடன் கானகம் எய்தினார். மேலும் இராமன் காட்டிலிருந்த பதினான்கு ஆண்டுகளும் கண்ணுறங்காமல் அவரைப் பாதுகாத்து வந்தார். மேலும் இலங்கைப் போரில் இராவணின் மகனான இந்திரஜித்தை வீழ்த்தினார். இவர் ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படுகிறார். மேலும் இலங்கைப்போரில் இலக்குவன் கொல்லப்பட்டதாகவும் அதன் பின் சஞ்சீவினி எனும் மூலிகையை உண்டு மறு உயிர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.[2][3]

விரைவான உண்மைகள் லஷ்மணன், வகை ...
லஷ்மணன்
Thumb
வகைஆதிசேஷனின் அவதாரம்
இடம்அயோத்தி, வைகுண்டம், பாற்கடல்
ஆயுதம்வில் அம்பு, வீச்சுக் கத்தி
பெற்றோர்கள்தசரதன் (தந்தை)
சுமித்திரை (தாய்)
சகோதரன்/சகோதரிசத்துருக்கன் (சகோதரன்)
இராமன் (சகோதரன்)
பரதன் (சகோதரன்)
குழந்தைகள்அங்கதன்
சந்திரகேது[1]
அரசமரபுரகு வம்சம்-சூரிய வம்சம்
மூடு
இதே பெயரைக் கொண்ட நபர்களைப் பற்றிய அறிய, இலட்சுமணன் (பக்கவழிமாற்றுப் பக்கம்) என்ற பக்கத்தைப் பார்க்கவும்

இலங்கைப் போரில் இலக்குவன் இராவணின் மகனான இந்திரஜித்துடன் போர் செய்துகொண்டிருந்த சமயத்தில் மூர்ச்சை அடைந்தார், அதன் பிறகு அனுமான் உதவியினால் சஞ்சீவினி மூலிகையின் மூலம் மூர்ச்சையில் இருந்து விடுபட்டு மீண்டும் இந்திரஜித்துடன் போர் புரிந்து அவனைப் போரில் வீழ்த்தினார். அதன் பிறகு இராமன் வனவாசம் முடிந்து அயோத்தியை ஆட்சி செய்த முழுகாலமும் இராமன் உடன் இருந்தார்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.