சு. வில்வரத்தினம்
இலங்கைத் தமிழ் எழுத்தாளர் (1950-2006) From Wikipedia, the free encyclopedia
சு. வில்வரத்தினம் (1950 - டிசம்பர் 9, 2006) 1970 களிலே எழுத ஆரம்பித்து 1980 களில் முக்கியமான எழுத்தாளராகப் பரிணமித்தவர். சு.வி என்ற பெயரால் அறியப்படுபவர்.
சு. வில்வரத்தினம் | |
---|---|
பிறப்பு | 1950 புங்குடுதீவு, யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம், சிலோன் மேலாட்சி (தற்போது இலங்கை) |
இறப்பு | 9 டிசம்பர் 2006 கொழும்பு, மேற்கு மாகாணம், இலங்கை |
இனம் | ஈழத்தமிழர் |
குடியுரிமை | இலங்கையர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாணம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வில்வரத்தினம், ஈழத்தி்ன் இலக்கிய சிந்தனையாளராகிய மு. தளையசிங்கத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர். இவருடைய கவிதைகள் மொத்தமாக உயிர்த்தெழும் காலத்துக்காக என்ற தொகுதியாக 2001 இலே வெளியானது. மரணத்துள் வாழ்வோம் தொகுதியிலேயும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. Lutesong and Lament: Tamil Writing from Sri Lanka தொகுதியிலே இவரது கவிதை ஒன்று ஆங்கில வடிவிலே வெளிவந்துள்ளது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உறுதியான பற்றுக்கொண்ட கவிஞரான இவர் தனது கவிதைகளில் அதற்கே முதன்மை இடத்தை வழங்கி வந்தார்.
இவரது காற்றுவழிக் கிராமம் என்னும் கவிதைத் தொகுதி விபபி சுந்திர இலக்கிய அமைப்பின் 1995 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதை நூலுக்கான விருதினை பெற்றுக் கொண்டது. இவர் கவிதைகளையும் பாடல்களையும் சிறப்பாகப் பாடும் வல்லமை பொருந்தியவரும்கூட.
வில்வரத்தினம் இடம்பெயர்ந்து 1991 ஆம் ஆண்டு முதல் திருகோணமலையில் வாழ்ந்து வந்தார். அங்குள்ள கல்வித் திணைக்களத்தில் பணியாற்றினார். 2 பிள்ளைகளின் தந்தை ஆவார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த வில்வரத்தினம் கொழும்பில் 9 டிசம்பர் 2006 அன்று தனது 56வது வயதில் காலமானார்.
நாட்டுப்பற்றாளர் விருது
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கிய பங்களிப்புகளுக்காக கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
படைப்புகள்
ஆண்டு | தலைப்பு | வகை | பதிப்பகம் |
---|---|---|---|
1985 | அகங்களும் முகங்களும் | கவிதைத் தொகுதி | அலை வெளியீடு |
1995 | காற்றுவழிக்கிராமம் | ஆகவே பதிப்பகம் | |
காலத்துயர் | வி. ஜே. பதிப்பகம் | ||
2000 | நெற்றிமண் | ||
2001 | உயிர்த்தெழும் காலத்துக்காக | விடியல் பதிப்பகம் | |
2004 | புதுத்துளிர் நூறு (இணை ஆசிரியர்: செல்லையா யோகராசா) |
பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
(வடக்கு கிழக்கு மாகாணம்) | |
2005 | வாசிகம் | கூடல் வெளியீடு |
நூலகம் திட்டத்தில் இவரது நூல்கள்
- அகங்களும் முகங்களும் - நூலகம் திட்டம் பரணிடப்பட்டது 2006-05-10 at the வந்தவழி இயந்திரம்
- காற்றுவழிக் கிராமம் - நூலகம் திட்டம் பரணிடப்பட்டது 2006-05-10 at the வந்தவழி இயந்திரம்
- உயிர்த்தெழும் காலத்திற்காக - நூலகம் திட்டம் பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
- சு. வில்வரத்தினம் (சோமியின் நினைவுப்பதிவு)
- சு. வில்வரத்தினம் (டிசேயின் நினைவுப்பதிவு)
- கரைவு (கந்தையா இரமணிதரனின் நினைவுப்பதிவு)
- சு. வில்வரத்தினம் குரல் பதிவு [தொடர்பிழந்த இணைப்பு]
- என்பிலிகளுக்கு - சு.வி.யின் கவிதை
- என்னைக் கவர்ந்தவர்கள் - 5 (கவிஞ்ர் சு.வில்வரத்தினம்)- (கே.எஸ்.பாலச்சந்திரனின் நினைவுப்பதிவு)
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.