From Wikipedia, the free encyclopedia
சுருத்திகா (Shrutika Arjun, பிறப்பு: 17 செப்டம்பர் 1987) என்று அழைக்கப்படும் சுருத்திகா அர்ஜூன் இந்தியத் திரைப்பட நடிகையும், பிரபல சின்னத்திரை மெய்மைக் காட்சி பங்கேற்பாளரும் ஆவார். 2022 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற சமையல் மெய்மைக் காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் பரிசை வென்றுள்ள இவர் 2024 ஆம் ஆண்டு பிக் பாஸ் (இந்தி) பருவம் 18 இல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.[2][3][4] பிரபல நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான இவர் சில தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார்.[5]
2002 இல் சூர்யா கதைநாயகனாக நடித்த ஸ்ரீ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.[6] கவிதாலயா தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த ஆல்பம் திரைப்படத்தில் நடித்தார். மலையாளத்தில் சுரேஷ் கோபி இணையாக சுவப்பனம் கொண்டு துலாபாரம் திரைப்படத்தில் நடித்தார்.[7]
ஜீவா நடித்த தித்திக்குதே திரைப்படத்திலும் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான நள தமயந்தி திரைப்படத்திலும் நடித்துள்ளார். 2002 வரை திரைப்படங்களில் நடித்த இவர் 22 ஆண்டுகளுக்குப் பிறகு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துவங்கினார். அவ்வகையில் 2022 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற பிரபல சமையல் நகைச்சுவை மெய்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் பரிசான ஐந்து இலட்சத்தை வென்றார்.[1] பின்னர் 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் அதே தொலைக்காட்சியில் பல்வேறு மெய்மை நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளராகவும், நடுவர், கௌரவ தொகுப்பாளராகவும் செயல்பட்டார்.[8][9] 2024 ஆம் ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் பிக் பாஸ் (இந்தி) நிகழ்ச்சியின், பருவம்-18 இல் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.[10]
ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2002 | ஸ்ரீ | மீனாட்சி | தமிழ் | |
ஆல்பம் | விஜி | தமிழ் | ||
2003 | சுவப்பனம் கொண்டு துலாபாரம் | அம்மு | மலையாளம் | |
தித்திக்குதே | தமிழ் | |||
நள தமயந்தி (தமிழ்த் திரைப்படம்) | மாலதி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.