From Wikipedia, the free encyclopedia
சீரியம்(IV) சல்பேட்டு (Cerium(IV) sulfate,) என்பது Ce(SO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது சீரிக் சல்பேட்டு என்றும் அழைக்கப்படுகிறது. சில வகையான நீரேற்று வடிவங்களிலும் , Ce(SO4)2(H2O)x என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் சீரியம்(IV) சல்பேட் காணப்படுகிறது. X இன் மதிப்பு 4, 8 அல்லது 12 என வெவ்வேறாக மாறுபடுகிறது. பொதுவாக இவ்வுப்புகள் மஞ்சள் அல்லது மஞ்சள் ஆரங்சு நிறங்களில் திண்மமாக காணப்படுகின்றன. தண்ணீர் மற்றும் நீர்த்த அமிலங்கள் ஆகியன்வற்றில் மிதமாகக் கரைகிறது. இதன் நடுநிலையான கரைசல் மெல்ல சிதைவடைந்து இளமஞ்சள் சீரியம் ஆக்சைடாக (CeO2) வீழ்படிவாகிறது. சீரியம்(IV) சல்பேட் கரைசல்கள் ஆழ்ந்த மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. நான்கு நீரேற்று வடிவம் 180-200 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தும் போது தண்ணீரை இழக்கிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
சீரிக் சல்பேட்டு | |
இனங்காட்டிகள் | |
13590-82-4 10294-42-5 (நான்கு நீரேற்று) | |
ChemSpider | 140403 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 159684 |
| |
UNII | 4F66FI5T7X |
பண்புகள் | |
Ce(SO4)2 | |
வாய்ப்பாட்டு எடை | 332.24 கி/மோல் (நீரிலி) 404.304 (நான்கு நீரேற்று) |
தோற்றம் | மஞ்சள் நிறத் திண்மம் (நீரிலி) மஞ்சள் ஆரஞ்சு படிகங்கள் (நான்கு நீரேற்று) |
அடர்த்தி | 3.91 கி/செ.மீ3 (நான்கு நீரேற்று) |
உருகுநிலை | 350 °C (662 °F; 623 K) (சிதைவடைகிறது) |
கொதிநிலை | NA |
சிறிதளவு கரைகிறது, அதிக அளவு தண்ணீரில் நீராற்பகுப்பு அடைகிறது. 21.4 கி/100 மி.லி (0 °செ) 9.84 கி/100 மி.லி (20 °செ) 3.87 கி/100 மி.லி (60 °செ)[1] | |
கரைதிறன் | நீர்த்த கந்தக அமிலத்தில் கரைகிறது |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | ஆக்சிசனேற்றி |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
குறிப்பாக அமில நிலையில் சீரியம் அயனி ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாகும். சீரியம்(IV) சல்பேட்டுடன் நீர்த்த ஐதரோ குளோரிக் அமிலத்தைச் சேர்த்தால் மெதுவாக தனிமநிலை குளோரின் உருவாகிறது. வலிமையான ஆக்சிசன் ஒடுக்கிகளுடன் இது வேகமாக வினைபுரிகிறது. உதாரணமாக சல்பைட்டுடன் அமில சூழ்நிலையில் இது வேகமாகவும் முழுவதுமாகவும் வினைபுரிகிறது.
சீரியம் சேர்மங்கள் குறைத்தல் வினைக்கு உட்படும் போது சீரியசு சேர்மங்கள் உருவாகின்றன. இதற்கான வினை பின்வருமாறு நிகழ்கிறது.
சீரியசு அயனி நிறமற்று காணப்படுகிறது.
பகுப்பாய்வு வேதியலில் ஏற்ற ஒடுக்க தரம் பார்த்தலில் சீரியம்(IV) சல்பேட்டு பயன்படுத்தப்படுகிரது. இவ்வினையில் பெரும்பாலும் இது ஏற்ற ஒடுக்க நிறம் காட்டிகளுடன் பயன்படுத்தப்படுகிறது.
சிரீயக் அமோனியம் சல்பேட்டு இதனுடன் தொடர்புடைய ஒரு சேர்மமாகும்[2].
மெத்தேன்சல்போனிக் அமிலத்தில் Ce(IV) இன் கரைதிறன் தோராயமாக அமில சல்பேட்டு கரைசல்களின் கரைதிறனைவிட 10 மடங்குகள் அதிகமாக இருக்கிறது.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.