சிறுநீர்த்தொகுதி
From Wikipedia, the free encyclopedia
சிறுநீர்த்தொகுதி (Urinary system) எனப்படுவது சிறுநீரை உற்பத்தியாக்கி, சேமித்து உடலில் இருந்து வெளியேற்றும் ஒரு உறுப்புத் தொகுதியாகும். மனிதரில் சிறுநீர்த்தொகுதியானது சிறுநீரை உற்பத்தியாக்கும் இரு சிறுநீரகங்கள், அவற்றைக் கொண்டு செல்லும் இரு சிறுநீர்க்குழாய்கள், சிறுநீரைத் தற்காலிகமாக சேமிக்க உதவும் ஒரு சிறுநீர்ப்பை, அதனை உடலிலிருந்து வெளியேற்றும் ஒரு சிறுநீர்வழி ஆகிய உறுப்புக்களை உள்ளடக்கியதாகும். ஆண், பெண் சிறுநீர்த்தொகுதிகள் பொதுவாக ஒரே மாதிரியாக இருப்பினும், ஆணின் சிறுநீர்வழியை விடச் சிறிய சிறுநீர்வழியே பெண்ணின் சிறுநீர்த்தொகுதியில் காணப்படும்[1].
சிறுநீர்த்தொகுதி
Latin = systema urinarium | |
---|---|
![]() | |
1. மனித சிறுநீர்த்தொகுதி: 2. சிறுநீரகம், 3. சிறுநீரக இடுப்பு, 4. சிறுநீர்க்குழாய், 5. சிறுநீர்ப்பை, 6. சிறுநீர்வழி. 7. அட்ரீனல் சுரப்பி | |
சிறுநீர்த்தொகுதியே உடலின் மிக முக்கியமான கழிவுத்தொகுதியாகும்[2]. இதனால், சிலசமயம் சிறுநீர்த்தொகுதியையே கழிவுத்தொகுதி எனவும் அழைப்பதுண்டு.[3][4]
சிறுநீர்த்தொகுதியின் உடலியக்கவியல்
சிறுநீரகம்
சிறுநீர்த்தொகுதியில் கழிவுப்பொருளான சிறுநீர் உற்பத்தியாகும் இடம் சிறுநீரகமாகும். மனிதரில் வயிற்றுக் குழியில் அவரை வித்து வடிவிலான இரு சிறுநீரகங்கள் காணப்படுகின்றன. வெளியேறும் சிறுநீரின் அளவு, வெவ்வேறு சூழ்நிலைகளில் வேறுபடுமாயினும், சாதாரண வளர்ந்த மனிதனில், அமைதியான நிலையில், முக்கிய நீர் வெளியேற்றமாக நாளொன்றுக்கு சராசரியாக 1500 மி.லீ. சிறுநீர் வெளியேற்றப்படுகின்றது[5].
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.