நடிகர் From Wikipedia, the free encyclopedia
சிரேயா ரெட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியும், திரைப்பட நடிகையும் ஆவார். இவர் மலையாளம்,தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்பட நடிகையாவதற்கு முன்னர் சதன் மியுசிக் சுபைஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார். தமிழில் முதலாவதாக 2002 ஆம் ஆண்டு வெளியான சாமுராய் திரைப்படத்தில் நடித்தார்.
சிரேயா ரெட்டி | |
---|---|
![]() | |
பிறப்பு | 28 நவம்பர் 1983 ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2002–தற்போது |
வாழ்க்கைத் துணை | விக்ரம் கிருஷ்ணா |
சாமுராய் திரைப்படத்தில் அறிமுகமானதைத் தொடர்ந்து, இவர் கிட்டத்தட்ட தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் தோன்றினார். அதில் பிளாக் (2004), திமிரு (2006) மற்றும் காஞ்சிவரம் (2008) மற்றும் சாலார்: பகுதி 1 – போர்நிறுத்தம் (2023) ஆகியவை இவரது குறிப்பிடத்தக்கப் படங்களாகும்.[1][2][3][4]
Seamless Wikipedia browsing. On steroids.