சிபு பிரிவு
சரவாக் மாநிலத்தில் ஒரு பிரிவு From Wikipedia, the free encyclopedia
சரவாக் மாநிலத்தில் ஒரு பிரிவு From Wikipedia, the free encyclopedia
சிபு பிரிவு (மலாய் மொழி: Bahagian Sibu; ஆங்கிலம்: Sibu Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும்.
சிபு பிரிவு | |
---|---|
Sibu Division | |
சரவாக் | |
சரவாக் மாநிலத்தில் சிபு பிரிவு | |
ஆள்கூறுகள்: 02°17′16″N 111°49′51″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | சிபு பிரிவு |
நிர்வாக மையம் | சிபு |
உள்ளூர் நகராட்சி | சிபு நகராண்மைக் கழகம் Sibu Municipal Council (SMC) |
பரப்பளவு | |
• மொத்தம் | 8,278.3 km2 (3,196.3 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 2,93,514 |
• அடர்த்தி | 35/km2 (92/sq mi) |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | QS |
இந்தப் பிரிவு 8,278.3 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. சரவாக் மாநிலத்தில் காப்பிட் பிரிவு (Kapit Division) மற்றும் மிரி பிரிவுக்கு (Miri Division) அடுத்த நிலையில், மூன்றாவது பெரிய பிரிவு.
2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சிபு பிரிவின் மக்கள் தொகை 257,300 ஆகும். இன ரீதியாக, மக்கள்தொகை பெரும்பாலும் இபான், சீனர், மலாய்க்காரர் மற்றும் மெலனாவ் மக்களாகும்.
சிபு பிரிவில் உள்ள மாவட்டங்கள்:
பொருளாதாரம் பெரும்பாலும் வெப்பமண்டல மழைக்காடுகளில் இருந்து கிடைக்கும் காட்டு மரங்களை அடிப்படையாகக் கொண்டது. காட்டு மரங்கள் ஏற்றுமதிக்குப் பதிலாக, பதப்படுத்தப்பட்ட மரப் பொருட்களுக்கு (Processed Wood Products), மாநில அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
வேளாண்மை ஒப்பீட்டளவில் சிறியது. எண்ணெய் பனை மற்றும் மிளகு முக்கிய உற்பத்திப் பொருள்கள்; சுற்றுலா, குறிப்பாகச் சுற்றுச்சூழல் சுற்றுலா (Ecotourism), வளர்ந்து வரும் சிபு பிரிவின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான அங்கமாகும்.
சிபு பிரிவில் உள்ள இரண்டு பெரிய ஆறுகள்: இராஜாங் நதி (Rajang River); மற்றும் இகான் ஆறு (Igan River).
1862-ஆம் ஆண்டில் சிபுவில் குடியேறிய ஜேம்சு புரூக் (James Brooke) என்பவரால் டயாக் மக்களின் (Dayak People) தாக்குதல்களைத் தடுக்க, சிபு நகரில் ஒரு கோட்டை கட்டப்பட்டது.[1] அதனைத் தொடர்ந்து, சீனர்களின் (Chinese Hokkien) ஒரு சிறிய குழுவினர், கோட்டையைச் சுற்றியுள்ள நகரப் பகுதியில், பாதுகாப்பான வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் குடியேறினார்கள்.[2] அதுவே சிபுநகரின் முதல் குடியேற்றம் என அறியப்படுகிறது.
1901-ஆம் ஆண்டு, சிபு குடியேற்றப் பகுதிக்குள் வோங் நய் சியோங் (Wong Nai Siong) தலைமையில் சீனாவின் புசியான் மாநிலத்தில் (Fujian) இருந்து 1,118 பூச்சௌ சீனர்கள் (Fuzhou Chinese) ஒரு பெரிய அளவிலான குடிபெயர்வை மேற்கொண்டனர். இந்த நிகழ்வு, சிபுவில் "நியூ புசூ" என்று பிரபலமாகக் குறிப்பிடப் படுகிறது.[3]
சிபு பசார் (Sibu Bazaar) மற்றும் சிபுவின் முதல் மருத்துவமனை புரூக் அரசாங்கத்தால் கட்டப்பட்டது. 1930-களில் லு கிங் ஆவ் மருத்துவமனை (Lau King Howe Hospital), பல மெதடிசு பள்ளிகள் (Methodist Schools) மற்றும் தேவாலயங்கள் கட்டப்பட்டன.[4]
சிபு நகரம் 1889-ஆம் ஆண்டு மற்றும் 1928-ஆம் ஆண்டுகளில் தீவிபத்துகளால் எரிந்து விட்டது. இருப்பினும், அதற்குப் பிறகு மீண்டும் கட்டமைப்புச் செய்யப்பட்டது. 1941-ஆம் ஆண்டில் சரவாக்கை சப்பானியர் ஆக்கிரமித்த போது (Japanese Occupation of Sarawak) சிபுவில் மட்டும் கடுமையான மோதல்கள் எதுவும் ஏற்படவில்லை.
1942-ஆம் ஆண்டு சூன் மாதம் சிபுவில் ஒரு புதிய குடியிருப்பு சப்பானியர்களால் நிறுவப்பட்டது, மேலும் 1942 ஆகத்து தம் சிபுவின் பெயரானது சப்பானியர்களால் சிபு-சூ (Sibu-shu) என்று மாற்றப்பட்டது.[5]
1945-ஆம் ஆண்டில் சப்பானியர் சரணடைந்த பிறகு, சரவாக் மாநிலம் முடியாட்சி காலனி (Crown Colony) என பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது.
சிபுவில் சுதந்திரத்தை விரும்பிய இளம் மெலனாவ் மக்கள் (Melanau) குழுவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, சரவாக் பகுதியின் இரண்டாவது பிரித்தானிய ஆளுநரான சர் டங்கன் சார்சு சுடீவர்ட் (Sir Duncan George Stewart), 1949--ஆம் ஆண்டில் சிபுவுக்கு வந்த போது, சரவாக் தேசியவாதியான ரோசிலி டோபி (Rosli Dhoby) என்பவரால் படுகொலை செய்யப்பட்டார். 1950--ஆம் ஆண்டில் கூச்சிங் மத்திய சிறைச் சாலையில் ரோஸ்லி தூக்கிலிடப்பட்டார்.
சிபு பகுதியும், இராஜாங் பகுதியும் 1950-ஆம் ஆண்டு முதல் கம்யூனிச நடவடிக்கைகளின் (Communist Insurgency in Sarawak) மையமாக மாறியது. 1963-ஆம் ஆண்டில் சரவாக் சுதந்திரத்திற்குப் பின்னரும் இது தொடர்ந்தது. அப்பகுதியில் கம்யூனிச நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த ஓர் அரசப் பாதுகாப்புப் படை (Rajang Security Command - RASCOM) நிறுவப்பட்டது.
சரவாக்கில் கம்யூனிச கிளர்ச்சி 1973-ஆம் ஆண்டில் கணிசமாகப் பலவீனம் அடைந்து, 1990-ஆம் ஆண்டில் கிளர்ச்சிகள் முடிவு அடைந்தன. சிபு நகராட்சியாக 1981-ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்டது.
2008-ஆம் ஆண்டு முதல், சரவாக் மாநிலத்தில் பெருவழி எரிசக்தியின் (Sarawak Corridor of Renewable Energy - SCORE) நுழைவாயிலாக இந்தச் சிபு பிரிவு உள்ளது. 2011-ஆம் ஆண்டு, பூசெவ் சீன மக்கள் குடியேற்றத்தின் 110-ஆவது ஆண்டு விழா சிபு நகரில் கொண்டாடப்பட்டது.
சிறிய நதிக்கரை நகரங்கள்; மற்றும் இபான்; ஒராங் உலு (Orang Ulu) மக்களின் நீளவீடுகளுடன் சிபு பிரிவானது, மேல் இராஜாங் ஆற்றின் பிரதான சுற்றுலா நுழைவாயிலாக உள்ளது.
சிபுவின் குறிப்பிடத்தக்க அடையாளங்களாக சராவாக்கில் உள்ள மிக உயரமான கட்டிடமான விசுமா சன்யன் (Wisma Sanyan) மாளிகை; சரவாக் மாநிலத்தில் மிக நீண்ட ஆற்றுப் பாலங்களில் ஒன்று லானாங் பாலம் (Lanang Bridge)[6] மற்றும் விசுமா சன்யன் அருகே உள்ள மலேசியாவின் மிகப்பெரிய நகர சதுக்கம் ஆகியவை அடங்கும்.[7]
மலேசியாவின் முதல் மருத்துவ அருங்காட்சியகமான லு கிவ் ஆவ் மருத்துவமனை நினைவு அருங்காட்சியகம் (Lau King Howe Hospital Memorial Museum) சிபு நகரில் தான் உள்ளது. மலேசியாவின் ஒரே மருத்துவமனை நினைவு அருங்காட்சியகமும் அதுதான்.
அதே வேளையில், சரவாக் மாநிலத்தின் மிகப் பெரிய உள்ளரங்குச் சந்தை (Indoor Market) சிபுவில் உள்ள மத்திய சந்தை (Sibu Central Market) ஆகும். இதுவும் சிபு நகரில் தான் உள்ளது.[8]
மேலும் சிபு பிரிவின் நிர்வாக மையமான சிபு நகரில் உள்ள சில சுற்றுலா சிறப்பு இடங்கள்;
மேற்கண்ட இடங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். சிபு பிரிவின் பொருளாதாரத்தில் மரத் தொழில் மற்றும் கப்பல் கட்டுமானத் தொழில் ஆகிய இரண்டும் மிக முக்கியமான இடங்களை வகிக்கின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.