From Wikipedia, the free encyclopedia
சித்திரதுர்க நாயக்கர்கள் (Nayakas of Chitradurga) (கி பி 1588–1779 ) துவக்கத்தில் விசயநகரப் பேரரசிலும், போசாளப் பேரரசிலும் படையணித் தலைவர்களாக பணிபுரிந்தவர்கள்.
அலுவல் மொழி | கன்னடம் |
தலைநகரம் | சித்திரதுர்கம் |
ஆட்சி முறை | முடியாட்சி |
முந்தைய அரசு | விசயநகரப் பேரரசு |
பிந்தைய அரசு | மைசூர் அரசு |
விசயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் சித்திரதுர்கம் நகரை தலைநகராகக் கொண்டு கர்நாடகத்தின் கிழக்கு பகுதிகளை ஆட்சி புரிந்தவர்கள். [2]
பின்னர் மைசூர் அரசு, முகலாயப் பேரரசு மற்றும் மராத்தியப் பேரரசுக்களுக்கு அடங்கி கப்பம் செலுத்தும் சிற்றரசர்களாக சித்திரதுர்கம் நாட்டை ஆண்டனர். திம்மன்ன நாயக்கர் என்பவரால் சித்திரதுர்க நாயக்க அரசு நிறுவப்பட்டது. [3]
சித்திரதுர்க்கத்தின் ஐந்தாம் மதகாரி நாயக்கர் (1758–1779), மைசூரின் ஐதர் அலியால் வெல்லப்பட்டதால், சித்திரதுர்க நாடு மைசூர் அரசுடன் இணைக்கப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.