From Wikipedia, the free encyclopedia
சமூகத் தலைமை முழுமைத் துப்புரவு (Community-led total sanitation) (CLTS) எனும் அணுகுமுறை ஊரகமக்களின் திறந்தவெளிக் கழிப்பு பழக்கத்தைத் தன்னியல்பாகவும் நெடுங்கால நோக்கோடும் அகற்றும் நடத்தை மாற்றத்தை அடைய உருவாக்கப்பட்ட இயக்கமாகும். இது வங்க தேசத்தில் 2000 ஆம் ஆண்டளவில் கமல்கார் அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இக்கருத்து மக்களிடையே துப்புரவீனம் குறித்த வெட்கத்தையும்வேதனையையும் தூண்டி அவர்களுக்குள்ளே புதிய மாற்றத்தை உருவாக்க முயல்கிறது.இது வங்க தேசம் முழுவதும் பரப்பப்பட்டது. இவ்வியக்கம் உலக வங்கியின் நீரும் துப்புரவும் சார்ந்த திட்டங்கள் வழியாக, பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவியது (என்றாலும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் அவ்வளவாகப் பரவவில்லை). இதற்கான இருமுக புரவலர்களாக, அல்லது கொடை நல்கிகளாக DFID அமைப்பும் பன்னாட்டுத் திட்டமும் நீருதவி அமைப்பும் கேரும் (CARE) யூனிச்ஃபும் (UNICEF) ( SNV) அமைப்பும் மிகப்பெரிய பன்னாட்டு அரசு சாரா நிறுவனங்களும் (அசாநிக்கள்-INGOs) பல தேசிய அசாநிக்களும் ஒருங்கிணைந்து பணியாற்றின.[1]
அரசு சாரா நிறுவனங்கள் இத்திட்டத்தை பலநாடுகளில் முன்னெடுத்து நடைமுறைப்படுத்தினாலும் இந்தியா விதிவிலக்காக அமைந்துவிட்டது.2011 அலவில், சமூகத் தலைமைத் துப்புரவு அணுகுமுறை நிறுவப்பட்ட அணுகுமுறை யாகிடவே பல நாட்டு அரசுகள் பயன்படுத்தவோ தேசியத் துப்புரவுக் கொள்கையில் உள்ளடக்கவோ செய்தன.[சான்று தேவை] இம்மாற்றம் கூடுதலான அறைகூவல்கள் மிக்க புதிய சூழலை உருவாக்கியது.[2]
சதமுது (CLTS) திட்டத்துக்கும் பிற துப்புரவுத் திட்டங்களுக்குமான வேறுபாடு இது ஊரக மக்களுக்கான வன்கலங்களுக்கும் கழிவறைக் கட்டித்தரவும் அரசு நல்கை ஏதும் தரப்படுவதில்லை என்பதேயாகும்.[3] மாறாக, இது மக்களிடையே நடத்தை மாற்றத்தைத் தூண்டிவிட்டால் அவர்களே துப்புரவுக்கான சூழலை தாமே தம் சொந்த முயற்சியில் மேற்கொண்டு கழிவறைகளைக் கட்டிக்கொள்வதோடு அம்மேம்பாட்டுக்காக ஆகும் செலவையும் செய்வர் எனக் கருதுகிறது. இத்திட்ட அறைகூவல்களாக, சமுதாயத்துக்குள்ளே மனித உரிமைகளை மீறல், குறைந்த கழிவறைச் செந்தரங்கள், நெடுங்காலப் பயன்பாட்டு வீதம் சார்ந்த சிக்கல்கள் ஏற்படலாம்.
திறந்தவெளி மலங்கழிப்பு என்பது கழிவறைக்குள்ளே அல்லாத பொது இடத்தில் அல்லது வெளியில் மலங்கழிக்கும் பழக்கமாகும்.
சதமுது திட்டத்தின் மையச் சொல் "திறந்தவெளிக் கழிப்பு நீக்கம்" (திகநீ) என்பதாகும். இதன் பொருள் முழு சமுதாயத்திலும் திறந்தவெளி மலங்கழிப்பை முற்றிலும் நீக்குவதேயாகும். என்றாலும், இத்திட்டம் மேலும் கீழ்வரும் வரன்முறைகளையும் கொண்டிருக்கலாம்:[4]
ஒரு சமுதாய "திகநீ நிலை"யை அடைய மேலும் கடுமையான பின்வரும் வரன்முறைகளையும் வற்புறுத்தலாம்:[4]
இத்திட்டம் தனி ஒருவரின் வீட்டில் கழிவறை கட்டுவதை விட சமுதாய முழுவதிலும் நடத்தை மாற்றத்தை எதிர்நோக்குகிறது. சிலர் மட்டுமே திறந்தவெளியில் மலங்கழித்தாலும் அது எப்படி சமுதாயம் முழுவதையும் நோய்க்கு இலக்காக்குகிறது என்ற விழிப்புணர்வை தூண்டல் விளக்கம் அல்லது நிகழ்வு ஏற்படுத்துகிறது.இதில் மக்கள் மையப் பங்கேற்பு ஊக்குவிக்கப்பட்டு, அனைவரும் கழிவுக்கும் நோய்வாய்க்கும் உள்ள தடத்தை படம்வரையச் செய்கிறது. இது அடுத்த கட்டச் செயற்பாட்டுக்கு உந்துதல் அளிக்கிறது.
தூண்டல் எனும் கருவி மக்களை நடவடிக்கை எடுக்க வைக்கிறது. சதமுது அறக்கட்டளையின் அலுவற் கையேடு[5] இந்த உந்தல் சமூகம் முழுவதும் தூண்டலை இயக்குவோர்களால் ஒரே நாளில் நிகழ்த்தப்படுகிறது என விளக்குகிறது. தாம் பங்கேற்க நினைக்கும் திறந்தவெளிக் கழிப்பு நிகழ்வதாக இனங்காணும் சமுதாயத்தை இவர்கள் பலமுறை கண்டு அம்மக்களைத் தங்களது துப்புரவுச் சூழலைப் பற்றி விழிப்புணர்வு கொள்ளச் செய்கின்றனர். இது அவர்களுக்கு வேதனையும் வெறுப்பும் ஏற்படுத்தி தமக்கு உகந்த துப்புரவு ஏந்துகளைத் திட்டமிட வைக்கிறது.
தூண்டல் நிகழ்வுகளில் தூண்டுவோர் அங்கு வழக்கில் உள்ள பீ போன்ற ஆத்திரம் ஊட்டவல்ல சொல்லையே பயன்படுத்துவர். மலம் அல்லது கழிப்பு என்ற சொல்லைக் கூட பயன்படுத்துவதில்லை. சதமுது வின் தெளிவான அணுகுமுறை நடைமுறைத்தன்மை வாய்ந்தது; நேரடியானது. கோட்பாட்டு அல்லது கல்விசார் அணுகுமுறை ஏதும் விவாதத்தில் கடைப்பிடிப்பதில்லை.[3][5]
முன் தூண்டல் நிகழ்வு, சதமுது அணுகுமுறைத் தூண்டலைப் பின்பற்ற குறிப்பிட்ட சமுதாயம் உகந்ததா என மதிப்பிடுதலேயாகும். தூண்டலுக்கு நன்கு துலங்கும் சமுதாயங்களை இனங்காண அவ்வூருக்கு தூண்டுவோர் பலமுறை வருகைதர நேரும்.[5] During pre-triggering facilitators introduce themselves to community members and begin building a rapport.[5]
2008 ஆம் ஆண்டு சதமுது கையேடு இத்திட்டத்தின்கீழ் நிகழ்த்தும் தூண்டலை ஒரே முறையில் நிறைவேற்ற முடியாது என்க் கூறுகிறது.[5] இந்தக் கையேட்டில் பின்பற்றவேண்டிய ஒரு கரடான வரிசைமுறை படிநிலைகள் தரப்பட்டுள்ளன. கலநிலைமைகளைப் பொறுத்து தூண்டுவோர் தம் நடவடிக்கைகளைத் திருத்தி மாற்றிக் கொள்ளவேண்டும்.
சதமுதுவில் பின்பற்ற ஒப்புதல் அளிக்கப்பட்ட யூனிசெஃப் கையேட்டின்படி, சீரா இலியோன் தூண்டல் நிகழ்வுக்குப் பின்வரும் படிநிலைகளைப் பரிந்துரைக்கிறார்:[6]
தூண்டல் நிகழ்வின் நோக்கம் ஊர்மக்களிடையே துப்புரவுச் சூழலைப் பற்றிய செயல்முறை விளக்கத்தின் ஊடாக வெறுப்பையும் வேதனையையும் தூண்டுவதே. பற்றவைத்தல் கட்டத்தில் அவர்கள் உண்மையில் நிலவும் துப்புரவுச் சிக்கலை உணர்வர். அதைப் பற்றி உடனடியாக ஏதாவது செய்ய வேண்டுமென நினைப்பர்.[7] இந்நிகழ்வில் ஆழ்ந்து ஈடுபடுவோர் மாற்றத்தை நோக்கிச் செயல்பட எழுவர். இவர்களே அச்சமுதாயத்தின் இயற்கையான தலைவர்கள் ஆவர்.[8][9]
பற்றவைத்தல் கட்டத்துக்குப் பிறகு நேரிய துலங்கல் பெற்றால். தூண்டுவோர் உரிய துப்புரவு ஏந்துகளை ஏற்பாடு செய்ய ஏற்ற தகவலையும் வழிகாட்டுதலையும் வழங்குவர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.