இந்திய நடிகை; உருமாதிரிக் கலைஞர் From Wikipedia, the free encyclopedia
ஜனனி ஐயர் என்பவர் (ஆங்கில மொழி: janani iyer), ஓர் இந்தியத் திரைப்பட நடிகையாவார். பல தமிழ் விளம்பரங்களில் நடித்துள்ள இவர், அவன் இவன் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.[1]
ஜனனி | |
---|---|
பிறப்பு | சனனி மார்ச்சு 31, 1987 கத்திவாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
மற்ற பெயர்கள் | ஜனனி |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2011 – தற்போது வரை |
ஜனனி ஐயர் சென்னையில் உள்ள ஓர் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தார். சென்னை கோபாலபுரத்திலுள்ள தயானந்த ஆங்கிலோ வேதப்பாடசாலையில் பள்ளிப்படிப்பை படித்து முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள சவீதா பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவை படித்து முடித்தார்.[2][3]
அவரது படிப்பிற்கு பின்னர் வடிவழகில் கவனம் செலுத்தினார், 150-க்கும் மேற்பட்ட பிராந்திய விளம்பரங்களில் தோன்றியிருக்கிறார்.[2][4] எனினும் எப்போதும் நடிகையாக கனவு கண்டதாகவும் நடிப்பினை வாழ்வின் பேரார்வமாக கருதுவதாகவும் அவர் கூறினார்.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.