From Wikipedia, the free encyclopedia
சந்திரிமா சாகா (Chandrima Shaha)(பிறப்பு 14 அக்டோபர் 1952) [1] என்பவர் இந்திய உயிரியலாளர் ஆவார்.[2] 2023 சனவரி நிலவரப்படி, இவர் கொல்கத்தாவில் உள்ள இந்திய வேதியியல் உயிரியல் நிறுவனத்தில் ஜே. சி. போசு இருக்கையின் புகழ்பெற்ற பேராசிரியராக உள்ளார்.[3] சாகா தடுப்பித்திறனையல் தேசிய ஆய்வு நிறுவனத்தில் முன்னாள் இயக்குநரும் முன்னாள் பேராசிரியரும் ஆவார்.[4] இவர் இந்தியத் தேசிய அறிவியல் கழகத்தின் தலைவராக 2020 முதல் 2022 வரையிலான காலத்திலும்[5] இதே நிறுவனத்தில் 2016 முதல் 2018 துணைத் தலைவராக (சர்வதேச விவகாரங்கள்) இருந்தார்.[6] இவர் உலக அறிவியல் அகாதமி,[7] இந்திய தேசிய அறிவியல் அகாதமி,[8] இந்திய அறிவியல் கழகம்,[9] தேசியத் அறிவியல் கழகம், இந்தியா [10] மற்றும் மேற்கு வங்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாதமி ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆவார்.
சந்திரிமா சாகா Chandrima Shaha | |
---|---|
2020 சனவரியில் சாகா | |
பிறப்பு | 14 October 1952 71) கொல்கத்தா, மேற்கு வங்காளம் இந்தியா | (வயது
தேசியம் | இந்தியர் |
துறை | உயிரியல் |
பணியிடங்கள் | இந்திய வேதியியல் உயிரியல் நிறுவனம், கொல்கத்தா இந்திய தேசிய அறிவியல் கழகம் (தலைவர்) |
கல்வி |
|
கல்வி கற்ற இடங்கள் | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | கருவுறாமை எதிர்ப்பு மற்றும் அரிஸ்டோலோச்சியா இண்டிகா சாறு பற்றிய ஆய்வுகள் (1979) |
ஆய்வு நெறியாளர் | முனைவர் ஏ. பிரகாசி |
அறியப்படுவது | மூலக்கூறு அறிவியலாளர் |
இணையதளம் website |
சாகா கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இந்திய வேதியியல் உயிரியல் நிறுவனத்தில் 1980-ல் முனைவர் பட்ட ஆராய்ச்சியை முடித்தார். தனது முது முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காகச் சாகா 1980 முதல் 1982 வரை கன்சாஸ் பல்கலைக்கழக மருத்துவ மையத்திலும், பின்னர் 1983 முதல் 1984 வரை நியூயார்க் நகரத்தின் மக்கள் தொகை குழுவிலும் பணியாற்றினார்.
சாகா தேசிய அறிவியல் கழகம், அலகாபாத் (2016-2017), இந்திய அறிவியல் கழகம், பெங்களூர் (2013-2015)[1] மற்றும் இந்தியத் தேசிய அறிவியல் கழகம் (2015-18) ஆகியவற்றின் குழுவில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். நேச்சர் வெளியீட்டுக் குழு, இலண்டன்('இசுபெர்மாடோஜெனிசிஸ்'-விந்தணு உற்பத்தி), லாண்டஸ் பயோசயின்ஸ், டெக்சாஸின் 'அறிவியல் அறிக்கைகள்' ஆசிரியர் குழுவின் உறுப்பினராகவும், எல்செவியர், பி. ஏ. ஆஸ்டினின் 'மூலக்கூறு மற்றும் உயிரணு உட்சுரப்பியல்' ஆய்விதழின் தொகுப்பாசிரியர் குழு உறுப்பினராகவும் இருந்தார். இவரது தொழில் வாழ்க்கையின் போது, உலக சுகாதார அமைப்பின் ஆண் கருவுறுதலை ஒழுங்குபடுத்துவதற்கான பணிக்குழுவுக்கான பணிக்குழு உறுப்பினராக இருந்தார். ஜெனீவா (1990-1992), சுவிட்சர்லாந்து மற்றும் ஆண் கருத்தடைக்கான சர்வதேச கூட்டமைப்பு, நியூயார்க்கு (1993-1997) உறுப்பினராக இருந்தார். இவர் பெண்களுக்கான உயிர்த்தொழில்நுட்பவியல் அடிப்படையிலான திட்டத்திற்கான உயிர்தொழில்நுட்பவியல் துறைப் பணிக்குழுவின் தலைவராக இருந்தார் (2012-2014), மனித மரபியல் மற்றும் மரபணு பகுப்பாய்வுக்கான பணிக்குழுவின் உறுப்பினர், நவீன உயிரியலில் அடிப்படை ஆராய்ச்சிக்கான பணிக்குழு (2015-2017), உறுப்பினராகவும் இருந்தார். இவர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் (2013-2016) அறிவியல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். இவர் தற்போது இந்திய தொழில்நுட்பக் கழகம், காந்திநகரின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் [11] மற்றும் 2018 தலைமைத்துவ மாநாட்டின் உறுப்பினராகவும் இருந்தார்.[12] இவர் தற்போது ஆட்சிக்குக் குழுவின் உறுப்பினராக இமஆச-நிர்வாகக் குழு - ஐதராபாத் பல்கலைக்கழகம்-ஆட்சிக்குழு - இன்ஸ்டெம், பெங்களூர், அறிவியல் ஆலோசனைக் குழு, அறிவியல் ஆலோசனைக் குழு - தேசிய விலங்கு உயிரி தொழில்நுட்ப நிறுவனம், அறிவியல் ஆலோசனைக் குழு - ராஜீவ் காந்தி உயிர்தொழில்நுட்பவியல் மையம், திருவனந்தபுரம் உள்ளார். இவர் அறிவியல் ஆலோசனைக் குழு உறுப்பினராக வாழ்க்கை அறிவியல் ஆராய்ச்சி வாரியம், (2012-2016) இல் பணியாற்றினார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.