இந்திய தேசிய அறிவியல் கழகம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
இந்திய தேசிய அறிவியல் கழகம் (Indian National Science Academy-INSA) என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அனைத்து துறைகளிலும் உள்ள இந்திய அறிவியலாளர்களுக்காக புது தில்லியில் அமைந்துள்ள தேசிய அவையாகும் ஆகும்.[1] பேராசிரியர் அசுதோசு சர்மா இந்த அவையின் தற்போதைய தலைவர் ஆவார் (2023-முதல்).
நிறுவப்பட்டது | 7 சனவரி 1935 |
---|---|
நிறுவனர் | லீவிசு லெய் பெர்மோரி |
தலைமையகம் | |
ஆள்கூறுகள் | 28°37′43.8″N 77°14′26.7″E |
தலைவர் | அசுதோசு சர்மா |
வலைத்தளம் | insaindia |
இந்தியத் தேசிய அறிவியல் கழகம், புது தில்லி, அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமாகும். இந்தியாவின் கொல்கத்தாவில் 1935ஆம் ஆண்டு இந்தியத் தேசிய அறிவியல் நிறுவனம் (NISI) நிறுவப்பட்டதிலிருந்து இந்தியத் தேசிய அறிவியல் கழகம் தோன்றியதாக அறியப்படுகிறது. அறிவியல் மற்றும் அறிவியலாளர்களின் நலன்களை மேம்படுத்துதல், அறிவியலை வளர்ப்பது மற்றும் பாதுகாப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு இந்த அவை தொடங்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தால் இது முதன்மையான தேசிய அறிவியல் சங்கமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த அவையின் தலைமையகம் 1951-ல் தில்லியில் உள்ள இதன் தற்போதைய வளாகத்திற்கு மாற்றப்பட்டது.[2] 1968ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் முடிவு காரணமாக அனைத்து பன்னாடு அறிவியல் மன்றங்களிலும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த இந்தியத் தேசிய அறிவியல் கழகத்தினை கட்டாயமாக்கியது இந்திய அரசு. 1970-ல், இந்திய தேசிய அறிவியல் நிறுவனம் இந்தியத் தேசிய அறிவியல் கழகம் எனும் புதிய பெயருடன் செயல்படத் தொடங்கியது. 1951ஆம் ஆண்டு பகதூர் சா ஜாபர் பகுதியில் தொடங்கப்பட்ட இதன் வளாகம் 1980களின் பிற்பகுதியில் - 90களின் நடுப்பகுதியில் நன்கு விரிவுபடுத்தப்பட்டது. இன்று ஏழு தளங்களுடன் அழகான வடிவிலான பொன்விழாக் கட்டிடத்துடன் அறிவியல் சேவையினை ஆற்றிவருகின்றது. இந்த பொன்விழாக் கட்டடம் 1996-ல் கட்டி முடிக்கப்பட்டது.[3]
இந்திய தேசிய அறிவியல் கழகம் அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் தேர்தல் மூலம் நியமனம் செய்யப்படுகின்றனர்.[4] இந்தியத் தேசிய அறிவியல் கழகத்தின் நோக்கங்களாக இந்தியாவில் அறிவியலை மேம்படுத்துதல், தேசிய நலனுக்கான பயன்பாடு, அறிவியலாளர்களின் நலன்களை பாதுகாத்தல், ஒத்துழைப்பை வளர்த்தல், பன்னாட்டு அறிவியல் அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்துதல் மற்றும் தேசிய பிரச்சினைகளில் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய கருத்தை வெளிப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குபவர்களை ஊக்குவிப்பதிலும், அங்கீகரிப்பதிலும், வெகுமதி அளிப்பதிலும் இந்தியத் தேசிய அறிவியல் கழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. 'அறிவியல் தொழில்நுட்ப' துறையில் சிறந்து விளங்குபவர்களை ஊக்குவிக்கும் நோக்கில், 4 பிரிவுகளில் 59 விருதுகளை இந்நிறுவனம் நிறுவியுள்ளது. இவை:
இந்தியத் தேசிய அறிவியல் கழகம் 2004-ல் அறிவியல் மற்றும் மனித நேய அறிவியலுக்கான பெர்லின் பிரகடனம் கையெழுத்திட்டது.[5]
கழகத்தின் தலைவர்கள் பட்டியல்.[6]
தலைவர் | முதல் | வரை |
---|---|---|
லூயிஸ் லே ஃபெர்மர் | 1935 | 1936 |
மேகநாத சாஃகா | 1937 | 1938 |
ராம்நாத் சோப்ரா | 1939 | 1940 |
பைனி பிரசாத் | 1941 | 1942 |
ஞான சந்திர கோஷ் | 1943 | 1944 |
தாராஷா நோஷெர்வான் வாடியா | 1945 | 1946 |
சாந்தி சுவரூப் பட்நாகர் | 1947 | 1948 |
சத்தியேந்திர நாத் போசு | 1949 | 1950 |
சுந்தர் லால் கோரா | 1951 | 1952 |
கரியமாணிக்கம் சிறீனிவாச கிருஷ்ணன் | 1953 | 1954 |
அமுல்யா சந்திர உகில் | 1955 | 1956 |
பிரசந்தா சந்திரா மகாலனோபிசு | 1957 | 1958 |
சிசிர் குமார் மித்ரா | 1959 | 1960 |
அஜுதியா நாத் கோஸ்லா | 1961 | 1962 |
ஹோமி ஜஹாங்கீர் பாபா | 1963 | 1964 |
வ. ரா. கனோல்கர் | 1965 | 1966 |
திருவேங்கடம் ராஜேந்திரம் சேசாத்ரி | 1967 | 1968 |
ஆத்மா ராம் | 1969 | 1970 |
பாகேபல்லி ராமசந்திரச்சார் சேசாச்சர் | 1971 | 1972 |
தவுலத் சிங் கோத்தாரி | 1973 | 1974 |
பெஞ்சமின் பியாரி பால் | 1975 | 1976 |
ராஜா ராமண்ணா | 1977 | 1978 |
உலிமிரி இராமலிங்கசுவாமி | 1979 | 1980 |
மாம்பிள்ளகலத்தில் கோவிந்த் குமார் மேனன் | 1981 | 1982 |
அருண் குமார் சர்மா | 1983 | 1984 |
சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ் | 1985 | 1986 |
அத்துர் சிங் பைனிடால் | 1987 | 1988 |
மன் மோகன் சர்மா | 1989 | 1990 |
பிரகாஷ் நரேன் தாண்டன் | 1991 | 1992 |
சிறீ கிருஷ்ண குமார் | 1993 | 1995 |
சீனிவாசன் வரதராஜன் | 1996 | 1998 |
கோவர்த்தன் மேத்தா | 1999 | 2001 |
எம். எசு. வாலிதன் | 2002 | 2004 |
ரகுநாத் அனந்த் மசேல்கர் | 2005 | 2007 |
மாமன்னமன விசயன் | 2008 | 2010 |
கிருஷ்ண லால் | 2011 | 2013 |
இராகவேந்தர் கடேகார் | 2014 | 2016 |
அஜய் கே. சூட் | 2017 | 2019 |
சந்திரிமா சாகா | 2020 | 2022 |
அசுதோசு சர்மா | 2023 | முதல் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.