தமிழக அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
கட்டியண்ணன் அர்ஜுனன் (K. Arjunan, பிறப்பு: 22 செப்டம்பர் 1944) என்பவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1]
கட்டியண்ணன் அர்ஜுனன் | |
---|---|
மக்களவை, உறுப்பினர் | |
பதவியில் 1980-1984 | |
முன்னையவர் | வாழப்பாடி ராமமூர்த்தி |
பின்னவர் | மு. தம்பிதுரை |
தொகுதி | தமிழ்நாடு, தர்மபுரி |
தமிழக சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1989-1991 | |
முன்னையவர் | எஸ். செம்மலை |
பின்னவர் | ஆர் பழனிசாமி |
தொகுதி | தாரமங்கலம் |
பதவியில் 1991-1996 | |
முன்னையவர் | பி. வெங்கடாசலம் |
பின்னவர் | எஸ். ஆறுமுகம் |
தொகுதி | வீரபாண்டி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 செப்டம்பர் 1944 பிரித்தானிய இந்தியா, சென்னை மாகாணம், சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், எம். என். பட்டி |
அரசியல் கட்சி | அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
பிற அரசியல் தொடர்புகள் | திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | கலாவதி |
முன்னாள் கல்லூரி | இலயோலாக் கல்லூரி |
மூலம்: |
இவர் 1980 இல் தருமபுரி மக்களவைத் தொகுதியிலிருந்து, திராவிட முனேற்றக் கழகத்தின் சார்பில் இந்திய நாடாளுமன்றத்தின், மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] பின்னர் இவர் அதிமுகவில் இணைந்தார்.[1]
அர்ஜுனன் 1989 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம், தாரமங்கலம் சட்டமன்ற உறுப்பினராக அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] அதற்குப் பிறகு 1991 ஆம் ஆண்டு வீரபாண்டி தொகுதியில் இருந்து, சட்டமன்றத்திற்கு அதிமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5] அதன்பிறகு தேமுதிகவில் இணைந்து பணியாற்றினார். பின்னர் தீபா பேரவையில் இணைந்தார். பிறகு மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.[6]
அர்ஜுனன் 1944 செப்டம்பர் 22 அன்று சேலம் மாவட்டத்தின், மேட்டூர் வட்டம், எம். என் பட்டி கிராமத்தில் பிறந்தார். சென்னை இலயோலாக் கல்லூரியில், பி.எஸ்.சி பட்டம் பெற்றவர். இவர் 1969 நவம்பர் 24 இல் திருமணம் செய்து கொண்டார்.[7]
அர்ஜுனன் 1967 முதல் 1978 வரை காவல் உதவி ஆய்வாளராகவும், 1978 முதல் 1979 வரை காவல் துணை ஆய்வாளராகவும் பணியாற்றினார்.[7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.