திருவிதாங்கூர் மகாராணி From Wikipedia, the free encyclopedia
மகாராணி ஆயில்யம் திருநாள் கௌரி லட்சுமி பாயி (Gowri Lakshmi Bayi) (1791-1815) இந்திய மாநிலமான திருவிதாங்கூரின் மகாராணியாவார். இவரது மகன் சுவாதித் திருநாள் ராம வர்மா இறந்த பிறகு 1813 முதல் 1815 வரை இவர் தான் இறக்கும் வரை ஆட்சி செய்தார். சுவாதித் திருநாள் ராம வர்மாவின் பிரதிநிதியாக ஆட்சி செய்த பின் இரண்டாண்டுகள் திருவிதாங்கூரின் இராணியாக தன் சொந்த உரிமையுடன் ஆட்சி செய்தார்,[1]
மகாராணி ஆயில்யம் திருநாள் கௌரி லட்சுமி பாய் | |||||
---|---|---|---|---|---|
திருவிதாங்கூர் மகாராணி | |||||
ஆட்சி | 7 நவம்பர் 1810 - 1815 | ||||
முடிசூட்டு விழா | 1810 | ||||
முன்னிருந்தவர் | பலராம வர்மா | ||||
பின்வந்தவர் | கௌரி பார்வதி பாயி | ||||
மனைவி | சங்கனாச்சேரி, கோயி தம்புரான், இளவரசர் ராஜராஜ வர்மா | ||||
வாரிசு(கள்) | மகாராணி கௌரி ருக்மினி பாயி, மகாராஜா சுவாதித் திருநாள் ராம வர்மா, மகாராஜா உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா | ||||
| |||||
மரபு | வேனாடு சுவரூபம் | ||||
அரச குலம் | குலசேகர வம்சம் | ||||
தந்தை | கிளிமனூர் கோயில் தம்புரான் | ||||
தாய் | பரணித் திருநாள் பார்வதி பாய் | ||||
பிறப்பு | 1791 திருவிதாங்கூர் | ||||
இறப்பு | 1815 (aged 24) திருவிதாங்கூர் | ||||
சமயம் | இந்து சமயம் |
கௌரி லட்சுமி பாய் 1791 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் ஆற்றிங்கல்லின் மூத்த இராணி இளவரசி பரணித் திருநாள் பார்வதி பாயிக்குப் பிறந்தார். மகாராஜா பலராம வர்மாவின் சகோதரியாக தத்தெடுக்கப்பட்டார். திருவிதாங்கூர் மகாராணிகள் "ஆற்றிங்கல்லின் இராணிகள்" என்று அழைக்கப்பட்டனர். இவரும் திருவிதாங்கூரின் மிகவும் பிரபலமான இராணியில் ஒருவராக இருந்தார். மேலும் மாநிலத்தில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். இவருக்கு உத்தரட்டாதி திருநாள் கௌரி பார்வதி பாய் எனற ஒரு சகோதரி இருந்தார்.
செல்வாக்கற்ற திருவிதாங்கூர் மகாராஜாவான பலராம வர்மாவின் ஆட்சியின் போது வேலு தம்பி தளவாயின் மிக முக்கியமான கலகம் உட்பட எழுச்சிகள் மற்றும் தேவையற்ற சண்டைகள் மற்றும் சதித்திட்டம் போன்ற பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரச்சினைகள் தோன்றியது. 1811இல் இவர் இறந்தார். மகாராஜா இறந்தபோது, ஆற்றிங்கலின் மூத்த இராணி கௌரி லட்சுமி பாயிக்கு, இருபது வயதே ஆகியிருந்தது. குடும்பத்தில் ஆளுவதற்கு தகுதி இல்லாத ஆண் உறுப்பினர்களே இருந்தனர். எனவே கௌரி லட்சுமி பாய், 1811 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் ஆட்சிப் பொறுபேற்றுக் கொண்டார்.
மகாராணி கௌரி லட்சுமி பாயி, சங்கனாச்சேரி அரச குடும்பத்தைச் சேர்ந்த கோயி தம்புரான், இளவரசன் இராஜா இராஜவர்மா வல்லிய கோயி தம்புரான் என்பவரை மணந்தார். இந்த திருமணத்தின் மூலம் இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர். இவரது மகள் இளவரசி கௌரி இருக்மிணி பாயி 1809 இல் பிறந்தார். இவரது மூத்த மகன் புகழ்பெற்ற சுவாதித் திருநாள் ராம வர்மா 16 ஏப்ரல் 1813 அன்று பிறந்தார். இவர் 1829-1846 முதல் சுதந்திரமாக ஆட்சி செய்தார். இவர் திருவட்டார் அம்மாவீடு குடும்பத்திற்கு சொந்தமான ஒரு பெண்ணை மணந்தார். மகாராணிக்கு அடுத்து 1814ல் உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா என்ற ஒரு மகன் பிறந்தார். இவர் 1846-1860 வரை மகாராஜாவாக ஆட்சி செய்தார். கௌரி லட்சுமி பாய் தனது மகன் உத்திரம் திருநாள் பிறந்தவுடன் 1815இல் இறந்தார்.[2] இவருடைய சகோதரியான கௌரி பார்வதி பாயி இவருக்குப் பின்னர் மகாராணியாக பதவியேற்றார். இவர் 1819 இல் திருவல்லா அரச குடும்பத்தின் இராம வர்மா கோயில் தம்புரானைத் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஐந்து மகன்களும், இரண்டு மகள்களும் என ஏழு குழந்தைகள் இருந்தனர்.
திருவிதாங்கூரின் மகாராணி, சிறீ பத்மநாப சேவினி வஞ்சி தர்ம வர்தினி இராச ராசேசுவரி மகாராணி ஆயில்யம் திருநாள் கௌரி லட்சுமி பாயி, ஆற்றிங்கல் மூத்த தம்புரான்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.