மலையாள மொழி கவிஞர் From Wikipedia, the free encyclopedia
இராஜா இராஜவர்மா வல்லிய கோயி தம்புரான் (Raja Raja Varma Koil Thampuran) (மலையாளம்: രാജ രാജ വർമ്മ കോയിത്തമ്പുരാൻ) மலையாள மொழி கவிஞரும், இந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளருமான இவர் ஆங்கிலத்திலும், சமசுகிருத மொழியிலும் எழுதுவதில் தேர்ச்சியைக் கொண்டிருந்தார். இவர் சங்கனாச்சேரியின் நீராழி அரண்மனையில் பிறந்தார். மேலும்,முந்தைய பரப்பநாடு (பரப்பனங்காடி, பேப்பூர் இராச்சியம்), மலபார் அரச குடும்பத்தின் உறுப்பினராக இருந்தார். [1]
சங்கனாச்சேரியில் நீராழிக்கெட்டுக் கொட்டாரம் என்று அழைக்கபட்ட நீராழி அரண்மனையில் பிறந்தார். கௌரி லட்சுமி பாய் என்ற திருவிதாங்கூர் இளவரசியை மணந்தார். இதன் மூலம் இவர்களுக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் இருந்தனர். இவரது மகள் மகாராணி கௌரி இருக்மிணி பாயி 1809இல் பிறந்தார். இவரது மூத்த மகன், பிரபலமான சுவாதித் திருநாள், 1813 ஏப்ரல் 16 அன்று பிறந்தார். சுவாதி திருநாள் ஒரு இசைக்கலைஞராகவும் கலைஞராகவும் மாறி 1829 முதல் 1846 வரை சுதந்திரமாக ஆட்சி செய்தார். 1814இல் உத்திரம் திருநாள் என்ற மகன் பிறந்தார். இவர் 1846 முதல் 1860 வரை ஆட்சி செய்தார். உத்திரம் திருநாள் பிறந்தவுடன் இவரது மனைவி 1815இல் இறந்தார்.[2]
கௌரி இலட்சுமி பாயி தனது ஆட்சிக் காலத்தில் தனது கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்காக சங்கனாச்சேரியில் இலட்சுமிபுரம் அரண்மனையைக் கட்டினார். [3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.