சதுரங்கம் From Wikipedia, the free encyclopedia
கோட்டை அல்லது யானை (Rook, பாரசீகம்: رخ, வடமொழி: रथ) என்பது சதுரங்கத்தில் ஒரு காய் ஆகும்.[1] சதுரங்கத்தின் ஆரம்பத்தில் போட்டியாளர்கள் இருவரும் இரண்டு கோட்டைகள் வீதம் கொண்டிருப்பர்.[2]
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இந்தக் காய் ஆங்கிலத்தில் Rook, Castle, Tower, Marquess, Rector, Comes ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகின்றது.[3]
சதுரங்க விளையாட்டின் ஆரம்பத்தில் a1, h1 ஆகிய கட்டங்களில் வெள்ளைக் கோட்டைகளும் a8, h8 ஆகிய கட்டங்களில் கறுப்புக் கோட்டைகளும் வைக்கப்பட்டிருக்கும்.[4] கோட்டையானது கிடையாகவோ செங்குத்தாகவோ கைப்பற்றப்படாத கட்டங்களினூடாக சதுரங்கப் பலகையின் எல்லையினுள் எவ்வளவு கட்டங்களிற்கும் செல்ல முடியும்.[5] கோட்டையானது எதிரியின் காய் நிலை பெற்றுள்ள கட்டத்திற்குச் செல்வதனூடாக எதிரியின் காயைக் கைப்பற்றிக் கொள்ளும். கோட்டையானது அரசனுடன் இணைந்து கோட்டை கட்டுதல் என்னும் சிறப்பு நகர்வையும் மேற்கொள்ளும்.[6]
பொதுவாக, கோட்டைகள் குதிரைகளையும் அமைச்சர்களையும் விடப் பெறுமதி வாய்ந்தவை. இரண்டு கோட்டைகள் ஓர் அரசியை விடச் சிறிதளவு பெறுமதி வாய்ந்தவையாகக் கருதப்படும். கோட்டைகளும் அரசிகளும் பெருங்காய்களென்றும் அமைச்சர்களும் குதிரைகளும் சிறு காய்களென்றும் அழைக்கப்படும்.[7][8]
ஒருங்குறியில் கோட்டைக்கு இரண்டு குறியீடுகள் உள்ளன.
♖ U+2656-வெள்ளைக் கோட்டை[9]
♜ U+265C-கறுப்புக் கோட்டை[10]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.