கூச்சிங் பிரிவு
சரவாக் மாநிலத்தில் ஒரு நிர்வாகப் பிரிவு From Wikipedia, the free encyclopedia
சரவாக் மாநிலத்தில் ஒரு நிர்வாகப் பிரிவு From Wikipedia, the free encyclopedia
கூச்சிங் பிரிவு (மலாய் மொழி: Bahagian Kuching; ஆங்கிலம்: Kuching Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும். முன்பு முதல் பிரிவு (First Division) என்று அழைக்கப்பட்டது. இந்தப் பிரிவுதான் நவீன சரவாக்கின் மையம் மற்றும் தொடக்கப் புள்ளியாகும்.
கூச்சிங் பிரிவு | |
---|---|
Kuching Division Sarawak | |
கொடி | |
ஆள்கூறுகள்: 03°11′56″N 113°06′07″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | கூச்சிங் பிரிவு |
நிர்வாக மையம் | கூச்சிங் |
உள்ளூர் நகராட்சி | 1. தென்மாநகர மன்றம் Kuching South City Council (MBKS) 2. வடமாநகர மன்றம் Kuching North City Hall (DBKU) 3. பாடவான் மன்றம் Padawan Municipal Council (MPP) 4. பாவு மாவட்ட மன்றம் Bau District Council (MDB) 5. லுண்டு மாவட்ட மன்றம் Lundu District Council (MDL) |
அரசு | |
• ஆளுநர் | சரினா உசைனி (Sherrina binti Hussaini) |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,559.5 km2 (1,760.4 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 7,05,546 |
• அடர்த்தி | 150/km2 (400/sq mi) |
இனக்குழுக்கள் | |
• பிடாயூ | 17.8% |
• சீனர்கள் | 33.9% |
• மலாய்க்காரர் | 33.4% |
• இதர மக்கள் | 31.5% |
வாகனப் பதிவெண்கள் | QK, QA |
கூச்சிங் பிரிவின் இன அமைப்பை, சரவாக் முழுமைக்கும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது சற்றே வேறுபட்டது. மலாய்க்காரர்களும் மற்றும் சீனர்களும் கூச்சிங் நகரில் பெரும்பான்மையான இனக் குழுக்களாக உள்ளனர். கூச்சிங் பிரிவு, சரவாக்கில் அதிக மக்கள்தொகை கொண்ட பிரிவு. கூச்சிங் பிரிவில் வசிக்கும் பெரும்பாலானோர் கூச்சிங் மாவட்டத்தில் வசிக்கின்றனர்.
கூச்சிங் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:
டிவிசன் எனும் நிர்வாகப் பிரிவை ஆங்கிலம்: Division மலாய் மொழி: Bahagian) என்று அழைக்கிறார்கள்.
மலேசியாவின் கிழக்கு மலேசியாவில் உள்ள சபா; சரவாக் மாநிலங்களில் பிரிவு என்பது ஒரு நிர்வாகப் பிரிவாகும். அந்த இரு மாநிலங்களிலும் ஒவ்வொரு பிரிவும் சிற்சில மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப் படுகிறது.
கூச்சிங் பிரிவு, சரவாக் மாநிலத்தின் தாயகமாக அறியப்படுகிறது. இந்தப் பிரிவு வணிகம், பல்வகைக் கலப்புத் தொழில்கள், சேவைத் துறைகள், கல்வி மையம் மற்றும் சரவாக்கின் சுற்றுலா மையம் போன்றவற்றின் மையமாக விளங்குகிறது.
நிர்வாக மாவட்டம் | மொத்தம் மக்கள் தொகை |
மலாய் மக்கள் |
இபான் | பிடாயூ | மெலனாவ் | மற்றவர் பூமிபுத்ரா |
சீனர்கள் | மற்றவர் பூமிபுத்ரா அல்லாதவர் |
குடிமக்கள் அல்லாதவர் |
---|---|---|---|---|---|---|---|---|---|
கூச்சிங் | 617,887 (87.6%) |
220,333 (35.7%) |
67,367 (10.9%) |
76,403 (12.4%) |
3,932 (0.6%) |
8,473 (1.4%) |
225,998 (36.6%) |
5,295 (0.8%) |
10,050 (1.6%) |
பாவு | 54,046 (7.7%) |
4,187 (7.6%) |
1,402 (2.6%) |
37,328 (69.0%) |
91 (0.2%) |
380 (0.7%) |
9,443 (17.4%) |
221 (0.4%) |
1,194 (2.1%) |
இலுண்டு | 33,413 (4.7%) |
11,467 (34.3%) |
4,438 (13.3%) |
12,034 (36.0%) |
81 (0.2%) |
228 (0.7%) |
3,650 (10.9%) |
135 (0.4%) |
1,380 (4.1%) |
கூச்சிங் பிரிவில் மொத்தம் | 705,546 (100.0%) |
235,987 (33.4%) |
73,207 (10.4%) |
125,765 (17.8%) |
4,104 (0.6%) |
9,081 (1.3%) |
239,091 (33.9%) |
5,687 (0.8%) |
12,624 (1.8%) |
பிரிவு பிரிவின் பகுதி | கூச்சிங் 4,565.53 km2 | |||||||
---|---|---|---|---|---|---|---|---|
மாவட்டம் மாவட்டத்தின் பகுதி | கூச்சிங் 1,868.83 km2 | பாவு 884.4 km2 | லுண்டு 1,812.3 km2 | |||||
துணை மாவட்டம் பகுதிகள் | கூச்சிங் பெருநகர் 895.09 km2 | சிபுரான்' 447.55 km2 | பாடவான் 526.19 km2 | லுண்டு' 1,369.84 km2 | செமத்தான்' 442.5 km2 | |||
நிர்வாகம் குடியிருப்புகள் | கூச்சிங் மாநகரம் | சிபுரான் பசார் | தேங் புகாப் கிராமம் | பாவ் பசார் | லுண்டு பசார் | செமத்தான் பசார் | ||
நகராண்மைக் கழகம் | தென்கூச்சிங் நகராண்மைக் கழகம் (MBKS) | வடகூச்சிங் நகராண்மைக் கழகம் (DBKU) | பாடவான் நகராட்சி மன்றம் (MPP) | செரியான் நகராட்சி மன்றம் (MD Serian) | பாடவான் நகராட்சி மன்றம் 2 (MPP) | MDB | MDL |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.