From Wikipedia, the free encyclopedia
குவாண்டாசு ஏர்வேய்சு லிமிட்டெட் (Qantas Airways Limited) ஆத்திரேலியாவுடன் இணைந்த ஒரு விமானச் சேவையாகும்.[2] குவாண்டாசு என்பது குயின்ஸ்லாந்து மற்றும் வடக்குப் பகுதிகளுக்கு செயல்படும் வான்வழிச்சேவை என்பதன் ஆங்கிலச் சுருக்கமாகும். இதற்கு ‘பறக்கும் கங்காரு’ என்ற பட்டப்பெயரும் உண்டு. ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய விமானச் சேவையாகும், அத்துடன் உலகளவில் இரண்டாம் பழமையான விமானச் சேவையாகும். [3] இந்நிறுவனம் 1920 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிறுவப்பட்டு, 1935 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தனது விமானச் சேவையினை சர்வதேச அளவில் தொடங்கியது.
| |||||||
நிறுவல் | 16 நவம்பர் 1920 வின்டன், குயின்ஸ்லாந்து, ஆத்திரேலியா | ||||||
---|---|---|---|---|---|---|---|
செயற்பாடு துவக்கம் | மார்ச்சு 1921 | ||||||
மையங்கள் |
| ||||||
இரண்டாம் நிலை மையங்கள் |
| ||||||
கவன செலுத்தல் மாநகரங்கள் |
| ||||||
அடிக்கடி பறப்பவர் திட்டம் | Qantas Frequent Flyer | ||||||
கூட்டணி | வன்வர்ல்டு | ||||||
கிளை நிறுவனங்கள் |
| ||||||
வானூர்தி எண்ணிக்கை | 118 | ||||||
சேரிடங்கள் | 42 | ||||||
தலைமையிடம் | மாஸ்கொட், நியூ சவுத் வேல்சு, ஆத்திரேலியா | ||||||
Revenue | வார்ப்புரு:A$15.9 பில்லியன் (2013)[1] | ||||||
நிகர வருவாய் | A$6 மில். (2013)[1] | ||||||
மொத்த சொத்துக்கள் | ▼ A$20.2 பில். (2013)[1] | ||||||
மொத்த சமபங்கு | A$5.954 பில். (2013)[1] | ||||||
பணியாளர்கள் | ▼ 33,265 (2013)[1] | ||||||
வலைத்தளம் | qantas |
இது மஸ்கட்டின் புறநகர் பகுதியான சிட்னியிலுள்ள, சிட்னி விமான நிலையத்தினை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. காண்டாஸ் ஆஸ்திரேலியர்களின் உள்நாட்டு சந்தையில் 65 சதவீத பங்கினைப் பெற்றுள்ளது மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு உள்ளேயும், வெளியேயும் செல்பவர்களில் 18.7 சதவீதம் மக்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர்.[4][5]
1920 ஆம் ஆண்டு 20 ஆம் தேதி, குயின்ஸ்லாண்டில் வின்டன் நகரில் காண்டாஸ் நிறுவப்பட்டது.[6] ஆவ்ரோ 540கே எனும் விமானத்தினை முதன்முதலாக தனது சேவையில் ஈடுபடுத்தியது. 1935 ஆம் ஆண்டின் மே மாதத்தில் இருந்து சர்வதேச அளவிலான செயல்பாடுகளை காண்டாஸ் நிறுவனம் துவங்கியது. அந்த காலகட்டத்தில் டார்வின் மற்றும் வடக்குப் பகுதிகளில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமானச் சேவையினை இந்நிறுவனம் பெற்றிருந்தது. ஜெட் விமானங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நிகழ்வுகள், 1959 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அரங்கேறின. முதன் முதலாக போயிங்க் 707-138 ஐப் பயன்படுத்தியதில் இருந்து ஜெட் ரக விமானங்களை பயன்படுத்த ஆரம்பித்தது.
காண்டாஸ் நிறுவனம் 20 உள்நாட்டு இலக்குகளையும், 21 சர்வதேச இலக்குகளையும் கொண்டு செயல்படுகிறது. இந்த சர்வதேச இலக்குகளில் தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஓசியானியா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 14 நாடுகள் அடங்கும், இவற்றுள் இதன் துணைநிறுவனங்கள் செயல்படுத்தும் சேவைகள் அடங்காது. மொத்த காண்டாஸ் குழுவும் இணைந்து 65 உள்நாட்டு இலக்குகளுக்கும், 27 சர்வதேச இலக்குகளுக்கும் விமானச் சேவைபுரிகின்றன.
1977 ஆம் ஆண்டு முதல், கிரைய்டான் டிராவலுக்குப் பதிலாக அண்டார்டிகா பகுதிகளைப் பார்வையிட காண்டாஸ் நிறுவனம் விமானங்களை செயல்படுத்த துவங்கியது. ஏர் நியூசிலாந்து விமானம் 901 என்ற விமானம் எரேபஸ் மலையில் 1979 ஆம் ஆண்டு விபத்துக்குள்ளானது. அதிலிருந்து அண்டார்டிகா பயணங்களை காண்டாஸ் நிறுவனம் நிறுத்தி வைத்திருந்தது. பின்னர் 1994 முதல் மீண்டும் அந்தச் சேவைகளைத் தொடங்கியது, ஆனால் அதில் தரையிறங்கும் சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.[7]
காண்டாஸ் நிறுவனம், 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி முதல், சிட்னி விமான நிலையத்தில் இருந்து டாலஸ்/ஃபோர்ட் வொர்த் சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர்பஸ் ஏ380 விமானம் மூலம் இடைவிடாத சேவைகளை புதிதாக வழங்கியது.
கூட்டுப் பங்காண்மை மற்றும் கோட்ஷேர் ஒப்பந்தங்கள் ஒன்வேர்ல்டு நிறுவனத்தின் உறுப்பினர்களுடன் காண்டாஸ் நிறுவனம் கூட்டுப்பாங்காண்மை அல்லது கோட்ஷேர் ஒப்பந்தங்களைப் பகிர்ந்துள்ளது. ஒன்வேர்ல்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் விவரம் பின்வருமாறு: 1. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 2. பிரித்தானிய ஏர்வேய்ஸ் 3. ஃபின்னையர் 4. இபேரியா 5. ஜப்பான் ஏர்லைன்ஸ் 6. லேன் ஏர்லைன்ஸ் 7. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் [8] ஒன்வேர்ல்டு நிறுவனத்துடன் மட்டுமல்லாது பின்வரும் நிறுவனங்களுடனும் கோட்ஷேர் ஒப்பந்தங்களை காண்டாஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது. 1. ஏர்கலின் 2. ஏர் சீனா[9] 3. ஏர் நியூகினி 4. ஏர்நார்த் 5. ஏர் டஹிடி நியு 6. ஏர் வனௌடு 7. அலஸ்கா ஏர்லைன்ஸ் 8. பாங்காங்க் ஏர்வேய்ஸ் 9. சீனா ஏர்லைன்ஸ் 10. சீன கிழக்கு ஏர்லைன்ஸ் 11. சீன தெற்கு ஏர்லைன்ஸ் 12. எமிரேட்ஸ் 13. ஃபிஜி ஏர்வேய்ஸ் 14. ஜெட் ஏர்வேய்ஸ் 15. கென்யா ஏர்வேய்ஸ் 16. வியட்நாம் ஏர்லைன்ஸ் 17. வெஸ்ட்ஜெட்
மெல்போர்ன் – சிட்னி, சிட்னி – மெல்போர்ன், சிட்னி – பிரிஸ்பேன் மற்றும் சிட்னி – கோல்டு கோஸ்ட் போன்ற வழித்தடங்கள் காண்டாஸ் நிறுவனத்தின் உயர்தர வழித்தடங்கள் ஆகும். இந்த வழிகளில் வாரத்திற்கு முறையே 120, 119, 108 மற்றும் 104 விமானங்களை காண்டாஸ் நிறுவனம் இயக்குகிறது. சில குறிப்பிட்ட காரணங்களுக்காக இயக்கப்படும் வழித்தடங்களில் போர்ட் வில்லா – சேன்டோ மற்றும் கிறிஸ்ட்சர்ச் – நாடி போன்ற வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்கள் முக்கியமானவை.[10]
காண்டாஸ் நிறுவனம் ஆரம்பத்திலிருந்தே பல பயணிகள் விமானங்களை துணைநிறுவனங்களுடன் இயக்கிவருகிறது. அவை கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.