From Wikipedia, the free encyclopedia
லாசு ஏஞ்சலசு பன்னாட்டு வானூர்தி நிலையம் (Los Angeles International Airport, (ஐஏடிஏ: LAX, ஐசிஏஓ: KLAX, எப்ஏஏ LID: LAX)) ஐக்கிய அமெரிக்காவின் மிகுந்த மக்கள்தொகை கொண்ட பெருநகரப் பகுதிகளில் இரண்டாவதாக விளங்கும் லாசு ஏஞ்சலசு பெருநகரப் பகுதியில் அமைந்துள்ள முதன்மையான வானூர்தி நிலையம் ஆகும். பெரும்பான்மையான நேரங்களில் இந்த நிலையம் இதன் [பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கக் குறியீடான LAX (எல்ஏஎக்ஸ்) என அழைக்கப்படுகிறது. இது லாசு ஏஞ்சலசு நகரத்தின் தென்மேற்கில் பசுபிக் பெருங்கடலின் கடற்கரையில் அமைந்துள்ளது. நகர மையத்திலிருந்து 16 மைல்கள் (26 km) தொலைவிலுள்ள வெஸ்ட்செஸ்டரில் அமைந்துள்ளது.
லாசு ஏஞ்சலசு பன்னாட்டு வானூர்தி நிலையம் | |||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||||||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||||||||||||||
உரிமையாளர் | லாசு ஏஞ்சலசு நகரம் | ||||||||||||||||||||||
இயக்குனர் | லாசு ஏஞ்சலசு உலக வானூர்தி நிலையங்கள் | ||||||||||||||||||||||
சேவை புரிவது | லாசு ஏஞ்சலசு பெருநகரப் பகுதி | ||||||||||||||||||||||
அமைவிடம் | லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா | ||||||||||||||||||||||
மையம் |
| ||||||||||||||||||||||
கவனம் செலுத்தும் நகரம் |
| ||||||||||||||||||||||
உயரம் AMSL | 126 ft / 38 m | ||||||||||||||||||||||
இணையத்தளம் | www.lawa.org | ||||||||||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||
உலங்கூர்தித் தளங்கள் | |||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||
புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||
மூலம்: கூட்டாட்சி வான்போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்[1] |
2011இல் 61,862,052 பயணிகள் பயன்படுத்திய இந்த நிலையம் ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு விமான நிலையம், பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம், இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம், ஓஹேர் பன்னாட்டு வானூர்தி நிலையம், மற்றும் தோக்கியோ அனேடா பன்னாட்டு வானூர்தி நிலையங்களை அடுத்து உலகின் ஆறாவது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது.[2][3] மேலும் 2011இல் "உலகிலேயே மிகுந்த கிளம்புகின்ற மற்றும் வந்து சேர்கின்ற (O & D) வானூர்தி நிலையமாகவும்" கருதப்படுகிறது.[4] பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து இரண்டிற்குமான தரவரிசையில் முதல் ஐந்து இடங்களில் உள்ள அமெரிக்க வானூர்தி நிலையங்களில் ஒன்றாகவும் உள்ளது..[5] கலிபோர்னியாவிலும் மேற்கு கடற்கரையோரங்களிலும் உள்ள வானூர்தி நிலையங்களில் பறப்புகள், பயணிகள், சரக்குப் போக்குவரத்து போன்றவற்றில் முதன்மை வகிப்பதால் இதனை பசிபிக் விளிம்பின் நுழைவாயில் என அழைக்கப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.