கும்கி (திரைப்படம்)

பிரபு சாலமன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

கும்கி (திரைப்படம்)

கும்கி 2012ல் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இது பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவின் அறிமுகப்படமாகும். இப்படம் தெலுங்கில் கஜராஜூ என்ற பெயரில் வெளியானது. இப்படத்தில் லட்சுமி மேனன் தமிழில் அறிமுகமானார் ஆனால் இவரின் அடுத்த படமான சுந்தர பாண்டியன் படம் முதலில் வெளிவந்தது. இப்படத்தில் தம்பி ராமையா விக்ரம் பிரபுவின் மாமாவாக நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.[1][2][3]

விரைவான உண்மைகள் கும்கி, இயக்கம் ...
கும்கி
Thumb
கும்பி பட சுவரொட்டி
இயக்கம்பிரபு சாலமன்
தயாரிப்புலிங்குசாமி
சுபாஷ் சந்திர போஸ்
திரைக்கதைபிரபு சாலமன்
இசைஇமான்
நடிப்புவிக்ரம் பிரபு
லட்சுமி மேனன்
ஒளிப்பதிவுசுகுமார்
படத்தொகுப்புஎல். கே. வி. தாசு
கலையகம்திருப்பதி பிரதர்சு
விநியோகம்ஸ்டுடியோ கிரீன்
வெளியீடுதிசம்பர் 14, 2012 (2012-12-14)
ஓட்டம்148 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மூடு

கதை

பொம்மன் யானைப்பாகன், பொம்மனின் மாமா கோத்தலி (பொம்மன் கூடவே இருந்து வருபவர்), பொம்மனின் உதவியாள் உண்டியல். தன் யானையான மாணிக்கத்தை திருவிழா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபெற வாடகைக்கு விடுவதன் மூலம் பொம்மனின் வாழ்வு நடக்கிறது. ஆதிகாடு என்ற பழமையை கடைபிடிக்கும் கிராமத்தில் கொம்பன் என்ற காட்டு யானை அட்டகாசம் செய்கிறது, கொம்பனால் பயிர்களுக்கும் உயிர்களுக்கும் இழப்பு ஏற்படுகிறது. அரசாங்க அதிகாரிகளின் உதவியில்லாமல் தாங்களே கொம்பனை சமாளித்து அறுவடையை எச்சேதமும் இல்லாமல் செய்ய கிராம பெரியவர்கள் முடிவு செய்கிறார்கள். இதற்காக கும்கி யானையை அறுவடை சமயத்தில் கொண்டு வந்து கொம்பனை அடக்க முடிவு செய்கிறார்கள். கும்கி யானைக்கு உரியவர் தவிர்க்க இயலாமல் வெளியூர் சென்றதால் அதற்கு பதில் 2 நாட்கள் மாணிக்கத்தை கும்கி யானையாக நடிக்க வைக்க பொம்மன் முடிவு செய்கிறார். பொம்மன், மாணிக்கம், கோத்தலி, உண்டயலுடன் ஆதிகாட்டை அடைகிறார். அங்கு கிராமத் தலைவனின் மகள் அல்லியைக் கண்டதும் காதல் கொள்கிறார். அக்கிராம மக்கள் வெளியூர் மக்களைத் திருமணம் செய்வதில்லை. திருமணம் அக்கிராமத்தில் உள்ளவர்களுக்குள்ளேயே தான் நடக்கும். 200 ஆண்டுகளுக்கு மேலாக இப்பழக்கம் அங்கு உள்ளது. அல்லி பொம்மனை விரும்ப ஆரம்பிக்கிறாள். இச்சமயத்தில் கொம்பன் அக்கிராமத்தைத் தாக்குகிறது கோத்தலியும் உண்டியலும் கொம்பனால் இறக்கிறார்கள் பொம்மன் காயமடைகிறார். மாணிக்கத்திற்கும் கொம்பனுக்கும் நடந்த சண்டையில் கொம்பன் இறக்கிறது, சண்டையில் மாணிக்கத்திற்கு பலமான காயமேற்பட்டு அதுவும் இறக்கிறது. தன் காதலால் கோத்தலி, உண்டியல் மாணிக்கத்தை இழந்ததை எண்ணி பொம்மன் அழுகிறார். கிராமத் தலைவர் அல்லிக்கும் பொம்மனுக்கும் உள்ள காதலை அறிகிறார்.

கதை மாந்தர்கள்

பாடல்கள்

மேலதிகத் தகவல்கள் பாட்டு, பாடலாசிரியர் ...
பாட்டுபாடலாசிரியர்பாடியவர்
சொல்லிட்டாளே அவ காதலயுகபாரதிரன்ஜித், சிரேயா கோசல்
சொய் சொய்யுகபாரதிமகிழினி மணிமாறன்
அய்யய்யோ ஆனந்தமேயுகபாரதிஅரிசரன்
யெல்லா ஊரும்யுகபாரதிஇமான், பென்னி தயால்
ஒன்னும் புரியல்யுகபாரதிஇமான்
நீ எப்போ புள்ளயுகபாரதிஅல்போன்சு யோசப்
மூடு

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.