From Wikipedia, the free encyclopedia
குமரகுருபரன் (1974 - சூன் 19, 2016) தமிழகக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். இவர் குமுதம், தினமலர், விண்நாயகம் ஆகிய இதழ்களில் பணியாற்றியவர்.[1] கனடா, தமிழ் இலக்கியத் தோட்டம் இவரது மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது என்ற நூலுக்கு 2015 ஆம் ஆண்டுக்கான கவிதைப் பரிசை வழங்கிக் கௌரவித்தது.[2]
குமரகுருபரன் | |
---|---|
பிறப்பு | 1974 திருநெல்வேலி, தமிழ்நாடுhu |
இறப்பு | 19 சூன் 2016 (அகவை 41–42) சென்னை |
இறப்பிற்கான காரணம் | மாரடைப்பு |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | கவிஞர் |
விருதுகள் | தமிழ் இலக்கியத் தோட்ட விருது (2015) |
குமரகுருபரன் தமிழ்நாடு, திருநெல்வேலியில் 1974 இல் பிறந்தவர்.[3] கால்நடை மருத்துவம் படித்தவர்.[4] அந்திமழை என்ற இதழுக்காக ஆனந்த விகடனின் சிறந்த மாணவ ஆசிரியர் என்ற விருதைப் பெற்றார்.[3] இதழியலில் ஏற்பட்ட ஆர்வத்தால்,[4] குமுதம், விண்நாயகன், தினமலர் ஆகிய இதழ்களில் பணியாற்றினார்.[3]
குமரகுருபரன் தனது 42வது அகவையில் 2016 சூன் 19 அன்று அதிகாலையில் சென்னையில் மாரடைப்பால் காலமானார்.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.