கிறிஸ்டோபர் பாலோனி

அமெரிக்க எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

கிறிஸ்டோபர் பாலோனி
Remove ads

கிறிஸ்டோபர் ஜேம்ஸ் பாலோனி (Christopher James Paolini)[1] ஒரு அமெரிக்க எழுத்தாளர். இவர் நவம்பர் 17,1986 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, அமெரிக்கா பிறந்தார்.[2] இவர் மரபுவழி சுழற்சி (Inheritance Cycle) என்ற புதினத் தொடர்கதைகளின் ஆசிரியர். இந்த தொடரில் வரும் புதினங்கள் எரகன் (Eragon), எல்டஸ்ட் (Eldest), பிரிஸிங்கர் (Brisingr) மற்றும் மரபுவழி (Inheritance) ஆகியவையாகும். இவர் பாரடைஸ் வேலி, மோடோனாவில் வசிக்கிறார். இங்கு தான் அவருடைய முதல் புதினமும் எழுதினார்.

விரைவான உண்மைகள் கிறிஸ்டோபர் பாலோனி, பிறப்பு ...
Remove ads

ஆரம்ப வாழ்க்கை

பாலோனி அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தில் பிறந்தார். பாரடைஸ் வேலி, மோடோனாவில் வளர்ந்தார். இவரது குடும்ப உறுப்பினர்கள், பெற்றோர் கென்னத் பாலோனி மற்றும் தாலிதா பாலோனி மற்றும் ஒரு தங்கை ஏஞ்சலா பாலோனி. பாலோனி தனது 15 வது வயதில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை, அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்ட தொலை தூர கல்வி, லென்சிங், இலினாய்ஸ் -இல் படித்து முடித்தார்.

சிறப்புகள்

பாலோனியின் புத்தகங்கள், நியூயார்க் டைம்ஸ், USA Today மற்றும் பதிப்பாளர்களின் வார இதழ் ஆகியவற்றின் சிறந்த விற்பனையாகும் புத்தகங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தது.[3][4][5]

சிறப்பாக விற்பனையாகும் புத்தகத்தின் மிக இளய வயது எழுத்தாளர் என்ற கின்னஸ் சாதனையாளர் அங்கிகாரம் சனவரி 5, 2011 ஆம் ஆண்டில் கிடைத்தது.[6]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads