காளஹஸ்தி நாயக்கர்கள்

From Wikipedia, the free encyclopedia

காளஹஸ்தி நாயக்கர்கள்

காளஹஸ்தி நாயக்கர்கள் (Nayaks of Kalahasti) வேலுக்கோட்டி நாயக்க வம்சத்தின் காளஹஸ்தி மற்றும் வந்தவாசி ஆட்சியாளர்கள் ஆவர்.[1] வேலுக்கோட்டி நாயக்க வம்சத்தின் முக்கியமானவர் சென்னப்ப நாயக்கர் ஆவார்[2][3]காளஹஸ்தி நாயக்கர்கள், விஜயநகரப் பேரரசை ஆண்ட இறுதி வம்சமான அரவிடு மரபுவினருக்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்தவர்கள். [4] [5] [6] [7]

புகழ்பெற்ற ஆட்சியாளர்கள்

தமர்லா சென்னப்ப நாயக்கர்

தமர்லா சென்னப்ப நாயக்கர் (Damarla Chennapa Nayaka), காளஹஸ்தி நாயக்கர்களில் புகழ்பெற்ற மன்னராவார்[8][9] [10][11][12] [13][14] [15][16] [17] [18][19][20][21] இவர் சென்னப்ப நாயக்கர் என்றும் அழைக்கப்படுகிறார் [22][23] [24][25] [26]சென்னப்ப நாயக்கரின் மனைவி அக்கம்மா[27] யாச்சம நாயக்கரின் தங்கை ஆவர் [28][29] [30] மற்றும் வேலு கோட்டி கஸ்தூரி ரங்காவின் மகள் [31] இவர் நெல்லூர் வெங்கடகிரி நிலப்பகுதியை ஆட்சி செய்தவர் . [32][33][34] விஜய நகரப் வெங்கடபதி ராயரின் படைத்தலைவரான இவர், காளஹஸ்தி மற்றும் வந்தவாசி பகுதிகளின் குறுநில மன்னராக ஆட்சி செய்தவர்.[35][36] சென்னை நகரம் இவரவது பெயரால் அழைக்கப்படுகிறது.[37][38] விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், காளஹஸ்தி நாயக்கர்கள் தன்னாட்சியுடன் ஆண்டனர். [39]. விஜய நகரப் பேரரசன் மூன்றாம் வேங்கடன் எனப்பட்ட பெத்த வேங்கட ராயரின் சகோதரிகளை தமர்லா வெங்கடப்ப நாயக்கர் மற்றும் தமர்லா அய்யப்ப நாயக்கர் திருமணம் செய்தனர் [40][41] [42] [43] [44]

தமர்லா வெங்கடப்ப நாயக்கர்

தமர்லா சென்னப்ப நாயக்கர் - கிருஷ்ணாம்மா அவர்களின் மகன் என்றும் .இவரின் தாத்தா வெங்கடபூபாலன் என்றும் கொள்ளுத் தாத்தா வெங்கலபூபாலன் என்றும் எள்ளு தாத்தா தமர்லா அப்ப ராஜு என்றும் குறிப்பிட்ட உள்ளார் . [45] விஜய நகரப் பேரரசன் மூன்றாம் வேங்கடன் எனப்பட்ட பெத்த வேங்கட ராயரின் சகோதரியின் கணவர் தமர்லா வெங்கடப்ப நாயக்கர் ஆவார் [46][47] [48] [49] [50] தமர்லா சென்னப்ப நாயக்கரின் மகனான இவரை, தமர்லா வெங்கடாத்திரி அல்லது வெங்கடப்பா என டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.விஜயநகரப் பேரரசர் பெத்த வெங்கட ராயன் (கி.பி. 1632 - 1642) காலத்தில், இவர் காளஹஸ்தி மற்றும் வந்தவாசி பகுதியை நிர்வகித்தவர். பெத்த வெங்கட ராயன் சார்பாக, இவரும், இவரது தம்பியும் சேர்ந்து, சென்னை கடற்கரை நிலப்பரப்புகளை பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு வணிகம் செய்ய விற்றவர்கள்[51]

தமர்லா அய்யப்ப நாயக்கர்

இவர் தமர்லா வெங்கடப்ப நாயக்கரின் தம்பியாவர். இவர் பூவிருந்தவல்லியில் தங்கி, சென்னைக்கு மேற்கே உள்ள காளஹஸ்தி மற்றும் வந்தவாசி போன்ற நிலப்பரப்புகளை, தன் உடன்பிறப்பிற்கு துணையாக ஆட்சி செய்தவர்.

தமர்லா அங்கபூபாலன் நாயக்கர்

தமர்லா சென்னப்ப நாயக்கரின் கடைசி மகனான இவர் தமர்லா வெங்கடப்ப நாயக்கர் மற்றும் தமர்லா அய்யப்ப நாயக்கரின் தம்பியாவர்[52] [53] . இவர் [[]] கவிஞரும், நூலாசிரியரும் ஆவார்[54] [55][56].அங்கபுபாலா நாயக்கர் காளஹஸ்தி பகுதியை நிர்வகித்தவர் [57] [58] உஷா பரிணயம் [59] [60] [61] என்னும் []] இலக்கிய நூலை எழுதியுள்ளார் . மந்திர காண்டம் என்னும் ( 16 குணங்கள் உடன் 64 மந்திரம் அடங்கிய ) 108 பாடல்கள் கொண்ட தொகுப்பு எழுதினார் . [62] அங்கபுபாலா பல [[]] இலக்கியங்கள் எழுதியுள்ளார் . இவர் சிறந்த [[]] கவிஞரக கருதப்படுகிறார் [63] [64]

காளஹஸ்தி நாயக்கர்களும் இலக்கிய பங்களிப்பும்

மிக சிறந்த இலக்கிய நூலகக் கருத்தப்படுகிற உஷா பரிணயம் மற்றும் பகிஸ்வா சரித்திரம் போன்ற நூல்களை எழுதியது காளஹஸ்தி தமர்லா நாயக்கர்களே.[65] தமர்லா வெங்கலபூபாலன் எழுதிய பகிஸ்வா சரித்திரம் என்னும் நூலில் காளஹஸ்தி நாயக்கர்களின் குடும்ப வரலாற்றையும் சென்னப்பட்டினமும் உருவாக்கத்தையும் எழுதியுள்ளார்.[66][67] [68] [69] தமர்லா அங்கபுபாலா நாயக்கர் எழுதிய உஷா பரிணயம் [70]என்னும் இலக்கிய நூல் மிக சிறந்த காவியமாகக் கருதப்படுகிறது. மந்திர காண்டம் என்னும் நூலில் ( 16 குணங்கள் உடன் 64 மந்திரம் அடங்கிய ) 108 பாடல்கள் கொண்ட தொகுப்பை எழுதினார்.[71] [72][73]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.