காண்டுவா மாவட்டம்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
காண்டுவா மாவட்டம் (Khandwa District) (இந்தி: खांडवा जिला), மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் காண்டுவா ஆகும். இது இந்தூர் கோட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் பிற முக்கிய நகரங்கள் முண்டி, அர்சத், பந்தனா மற்றும் ஓம்காரஷ்வர் ஆகும்.
காண்டுவாமாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம் | |
மாநிலம் | மத்தியப் பிரதேசம், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | இந்தூர் |
தலைமையகம் | காண்டுவா |
பரப்பு | 7,352 km2 (2,839 sq mi) |
மக்கட்தொகை | 1,310,061 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 178/km2 (460/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 19.80% |
படிப்பறிவு | 66.39% |
பாலின விகிதம் | 943 |
வட்டங்கள் | 4 |
மக்களவைத்தொகுதிகள் | 1 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
இம்மாவட்டத்தை முன்பு கிழக்கு நிமர் மாவட்டம் என அழைப்பர்.
காண்டுவா மாவட்டத்தில் நர்மதை ஆறு, கேர்காளி ஆறு, சோட்டி தவா ஆறு, சிவா ஆறு பாய்கிறது. இம்மாவட்டத்தின் வடக்கில் நர்மதை ஆறும், தெற்கில் சாத்பூரா மலைத்தொடர்களும் அமைந்துள்ளது.
கண்டவா மாவட்டத்தின் வடக்கில் தேவாஸ் மாவட்டம், வடகிழக்கில் ஹர்தா மாவட்டம், கிழக்கில் பேதுல் மாவட்டம், தென்கிழக்கில் மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி மாவட்டம், தெற்கில் புர்ஹான்பூர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
காண்டுவா மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக காண்டுவா, முண்டி, அர்சத் மற்றும் பந்தனா என நான்கு வருவாய் வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
வறண்ட வானிலை கொண்ட காண்டுவா மாவட்டம் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 இந்திய மாவட்டங்களில் ஒன்றாக இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் 2006-ஆம் ஆண்டில் அறிவித்துள்ளதால், இம்மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு இந்திய அரசு ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கி வருகிறது.[1]
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,310,061 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 80.20% மக்களும்; நகரப்புறங்களில் 19.80% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 21.50% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 674,329 ஆண்களும் மற்றும் 635,732 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 943 பெண்கள் வீதம் உள்ளனர். 7,352 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 178 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 66.39% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 76.29% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 55.92% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 208,140 ஆக உள்ளது. [2]
இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,182,330 (90.25 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 116,277 (8.88 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 2,800 (0.21 %) ஆகவும், , சீக்கிய சமய மக்கள் தொகை 1,726 (0.13 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 3,856 (0.29 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 1,425 (0.11 %) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 158 (0.01 %) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,489 (0.11 %) ஆகவும் உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.