காட்டாங்குளத்தூர் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
காட்டாங்குளத்தூர் தொடருந்து நிலையம் (Kattankulathur railway station, நிலையக் குறியீடு:CTM) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை புறநகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையம் சென்னைக் கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தொடருந்து நிலையம் ஆகும்.
காட்டாங்குளத்தூர் | |||||
---|---|---|---|---|---|
சென்னை புறநகர் தொடருந்து நிலையம் மற்றும் தென்னக இரயில்வே நிலையம் | |||||
காட்டாங்குளத்தூர் தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | தேசிய நெடுஞ்சாலை - 45, காட்டாங்குளத்தூர், செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 12.8057°N 80.0265°E | ||||
உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | தெற்கு மற்றும் தென் மேற்கு புறநகர் வழித்தடங்கள் | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | CTM | ||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | 9 சனவரி 1965[1] | ||||
முந்தைய பெயர்கள் | தென்னிந்திய இரயில்வே | ||||
|
இது சென்னையின் புறநகர்ப் பகுதியான காட்டாங்குளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திற்கு சேவை செய்கிறது. இது சென்னைக் கடற்கரை சந்திப்பிலிருந்து 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மற்றும் காட்டாங்குளத்தூரில் தேசிய நெடுஞ்சாலை - 45 இல் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 51மீ உயரத்தில் உள்ளது.
தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடம் மின்மயமாக்கலுடன், சனவரி 9, 1965 அன்று இந்நிலையத்தில் உள்ள வழித்தடங்களும் மின்மயமாக்கப்பட்டன.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.