சாம்பல் கவுதாரி அல்லது சாம்பல் கௌதாரி (Grey Francolin) எனப்படுபவை தெற்காசியாவில் வயல்வெளிகளிலும் புதர் மண்டிய இடங்களிலும் காணப்படும் பறவையினம். தவிட்டு நிற உடலில் கரு நிறக் கோடுகளை உடைய கோழியைப் போன்ற ஒரு வகைப் பறவை இது. இத்தகைய இடங்களில் இப்பறவைகள் காலையிலும் மாலையிலும் க-டீ-டர் ... டீ-டர் என்ற கூப்பாடுடன் உரக்கக் கூவுவதைக் கேட்க முடியும்.[2] இவை இறைச்சிக்காக வேட்டையாடப்படும்.

கவர்பொருளாகப் பயன்படவிருக்கும் ஆண்
விரைவான உண்மைகள் கௌதாரி, காப்பு நிலை ...
கௌதாரி
கவுதாரி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பாசியானிடே
துணைக்குடும்பம்:
பெர்டிசினே
பேரினம்:
பிராங்கோலினசு
இனம்:
பி. பாண்டிசீரியனசு
இருசொற் பெயரீடு
பிராங்கோலினசு பாண்டிசீரியனசு
(ஜெமெலின், 1789)
வேறு பெயர்கள்

ஆர்டிகோர்னிசு பொன்டிசெரியானா

மூடு

இனப்பெருக்க காலத்தில் ஆண் கவுதாரியின் இக்கூப்பாடு பிற ஆண்களையும் அழைக்கவல்லதால், அவற்றைப் பிடிக்க உதவும் கவர்பொருளாகவும் இது பயன்படுத்தப்படும்.

அடையாளங்கள்

Thumb
இராஜஸ்தான் ஜோத்பூரில் கவுதாரி

வெள்ளை கறுப்புப் பட்டைகளுடன் காப்பி நிறப் பொட்டுகள் கூடிய முதுகினையும் மெல்லிய கருநூற்கோடுகளிட்ட பழுப்பு மார்பும் சிவந்த மார்பும் கொண்டிருக்கும். இவை புறாவை விடவும் சிறிது பருத்துக் காணப்படுகின்றன.[3]

உணவு

வயற்காடுகளில் தானியங்களைப் பொறுக்கியும் கறையான்களையும் வண்டுகளையும் உண்ணும்.[4]

இயல்பு

வேகமாகப் பறக்கவியலும் என்றாலும் பெரும்பாலும் பூமியிலேயே ஓடியாடும். அபாயம் ஏற்பட்டாலும் ஓடி ஒளிந்தே தப்ப முயலும். வேறு வழியில்லை என்றால் மட்டுமே பறக்கும்.[3]

இப்பறவைகள் வாழும் இடங்களில் தரையில் தானியத்தினைத் தூவி வலை விரித்து வைத்து நரிக்குறவர்கள் அவற்றைப் பெருமளவில் பிடித்து சந்தைகளில் விற்பார்கள். வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் வந்த பின் இவற்றின் வியாபாரம் அவ்வளவு வெளிப்படையாக நடைபெறுவதில்லை. இவற்றின் மாமிசத்திற்காகவே இவை பிடிக்கப்படுகின்றன. இந்தப் பறவைகள் மனிதர்களைக் கண்டால் பயத்தில் ஓடி ஒளிந்திடும். பறக்கும் போது அதிக உயரத்தில் பறக்காது. இவை பறக்கும் போது புறாக்களைப் போன்றே பட படவென இறக்கைகள் அடிப்பதின் சத்தம் கேட்கும்.{{citation needed}}

அழிவு நிலை

பூச்சிக்கொல்லிகளாலும், உணவுக்காவும் இப்பறவைகள் வெகுவாக அழிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில் 20 சதவீதம் பறவைகள் அழிந்துவிட்டன. தற்போது இவை 10,000 எண்ணிக்கையில் தான் வாழுகின்றன. இவற்றில் ஆண்டுக்கு 10 சதவிதம் அழிக்கப்பட்டு வருகிறது.[5]

குறிப்புதவி

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.