கல் கவுதாரி (chestnut-bellied sandgrouse, Pterocles exustus) என்பது ஒரு மண் கௌதாரி இனமாகும். இப்பறவை மத்திய, வட ஆப்பிரிக்காவிலும், தெற்காசியாவிலும் காணப்படுகிறது. இதில் அங்கீகரிக்கப்பட்ட ஆறு கிளையினங்கள் உள்ளன.[2]

விரைவான உண்மைகள் கல்கௌதாரி, காப்பு நிலை ...
கல்கௌதாரி
Thumb
Thumb
ஆணும் பெண்ணும்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Pterocles
இனம்:
P. exustus
இருசொற் பெயரீடு
Pterocles exustus
(Temminck, 1825)
மூடு

கல் கவுதாரி இறகு நிறத்தில் பாலின இருவகைமையும், ஆறு கிளையினங்களுக்கு இடையே இறகு நிறத்தில் மாறுபடும் உள்ளது.[3]:215

கல் கவுதாரி தரிசு, அரை பாலைவனங்களில் வாழும் பறவை. வெப்பமான, வறண்ட காலநிலையில் வாழ்ந்த போதிலும், இது தண்ணீரை பெரிதும் நம்பியுள்ளது. இதனால் ஒரு நாளில் 50 மைல்கள் (80 கிலோமீட்டர்) வரை சென்று நீரைத் தேடுகிறது.[4]

இது தேர்ந்தெடுக்கப்பட்ட தீவனங்களையே உண்கிறது. இது முதன்மையாக விதைகளை உட்கொண்டு வாழ்கின்றது, பெரும்பாலும் சிறிய விதைகளை அதிக அளவில் உட்கொள்ள விரும்புகின்றது.[5]:14

இப்பறவை புறாவைவிட சற்று சிறியது. மணல்போன்ற மஞ்சள் கலந்த தவிட்டு நிறமுடையது. இவை கூட்டமாக தரிசு நிலத்தில் மேயும். தரையின் நிறத்தோடு இவை ஒன்றிவிடுவதால் தூரத்தில் இருந்து பார்த்தால் புலப்படுவது கடினம்.

வகைபிரித்தல்

கல் கவுதாரியில் ஆறு அங்கீகரிக்கப்பட்ட கிளையினங்கள் உள்ளன:[2]

விளக்கம்

இப்பறவை ஏறக்குறைய புறா அளவுடையது. இது 12 செ.மீ வாலோடு சேர்த்து 40 செ.மீ நீளம் இருக்கும். இதன் அலகு நீல நிறம், விழிப்படலம் பழுப்பு நிறம், கால்கள் ஈய நிறத்தில் இருக்கும். வால் ஊசிபோல சுமார் 12 செ.மீ. நீளம் இருக்கும். உடலின் நிறம் பொதுவாக மஞ்சள் கலந்த மணற் சாம்பல் நிறமாக இருக்கும். மார்பில் ஆணுக்கும் பெண்ணுக்கும் குறுகிய கறுப்பு பட்டைகள் காணப்படும். இப்பறவைகள் பால் ஈருருமை கொண்டவை. ஆண் பறவைக்கும் பெண் பறவைக்கும் தோற்றத்தில் வேறுபாடு இருக்கும்.

ஆண் பறவையின் உடலின் மேற்பகுதி மணல் நிறங்கலந்த சாம்பல் நிறமாகவும், வெளிர் மஞ்சள் நிறமாகவும் கருத்த சிறு பிறை வடிவ வளை கோடுகளோடும் காட்சித் தரும். கன்னம், மோவாய், தொண்டை முதலிய பகுதிகள் மஞ்சள் நிறமாகவும், வயிறு சாக்லெட் கறுப்பாகவும் இருக்கும்.

பெண் பறவையின் உடலின் மேற்பகுதி நிறங்குன்றி வெளிர் மஞ்சள் கோடுகளோடும் புள்ளிகளோடும் கரும்பழுப்புப் பட்டைகளுடனும் காட்சி தரும். மேல் மார்பில் கரும் புள்ளிகள் காணப்படும். கீழ் மார்பு வெளிர் மஞ்சளாக இருக்கும். வயிறும் பக்கங்களும் கருஞ்சிவப்புக் கலந்த மஞ்சளாக இருக்கும். நெருக்கமான சிறு கறுப்புப் பட்டைகள் அதில் அழகாக அமைந்திருக்கும்.

மேலே கண்ட விளக்கங்கள் பொதுவாக இந்தியாவில் காணப்படும் கல்கௌதாரியின் விளக்கம் ஆகும். கல்கௌதாரியின் பிற கிளையினங்களின் நிறங்களில் சிற்சில வேற்பாடுகள் இருக்கும்.

நடத்தை

கல் கவுதாரி வலசை போகும் பெரும்பாலான மண் கௌதாரி இனங்களைப் போலல்லாமல், ஒரே இடத்தில் உள்ளன.[5]:13 இருப்பினும், இந்த இனங்கள் உள்ளூரில் அ்வப்போது இடம்பெயர்கின்றன. கோடை காலத்தில், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது, இந்தப் பறவைகள் அருகில் தண்ணீர் இருக்கும் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துவிடுகின்றன. உணவுப் பொருட்கள் கிடைப்பதன் அடிப்படையில் பறவைகள் அவ்வப்போது நீண்ட தூரம் நகர்ந்து செல்வதாகவும் தெரிகிறது.[5]:13

உணவு

கல் கவுதாரி அனைத்து வகையான மண் கௌதாரிகளையும் போலவே, சிறிய விதைகள், சிறிய பூச்சிகள், விழுந்த பழங்களை உண்ணும்.[6] இவற்றின் உணவில் முதன்மையாக சிறிய விதைகள் உள்ளன. பெரும்பாலும் அதிக அளவில் பருப்பு தாவரங்களில் இருந்து உட்கொள்ளப்படுகின்றன.[5]:14 இந்தப் பறவைகள் பெரும்பாலும் வறண்ட, தண்ணீர் குறைவாக இருக்கும் சூழலில் வசிக்கின்றன. இருப்பினும், இந்தப் பறவைகள் ஒவ்வொரு நாளும் தவறாமல் தண்ணீர் குடிக்கின்றன. இவை சூரிய உதயத்தின் போது ஒரு நாளைக்கு ஒரு முறை தண்ணீர் குடிக்க விரும்புகிறன. ஆனால் சூரிய மறைவுக்கு முன் இரண்டாவது முறை தண்ணீர் குடிப்பது அறியப்பட்டுள்ளது, இருப்பினும் அது குறைவாகவே அறியபடுள்ளது.[5]:15

இனப்பெருக்கம்

Thumb
இந்தியாவில் தாயுடன் உள்ள குஞ்சுகள். இது போன்ற குஞ்சுகள், குஞ்சு பொரித்த உடனேயே கூட்டை விட்டு வெளியேறும்.

கல் கவுதாரிகள் பிறந்த ஓராண்டில் பாலியல் முதிர்ச்சியடைகின்றன. காடுகளில் பறவைகளின் ஆயுட்காலம் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால் காடுகளில் பிடிப்பட்ட முதிர்ந்த பறவைகள் நெவாடாவில் வளர்க்கபட்ட நிலையில் 3 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்துள்ளன.[5]:18–19 இனவிருத்தி பருவத்தில், ஆண் பறவைகள் புதிய புத்துணர்ச்சியோடு இருக்கும். அப்போது அதன் இறகுகள் பிரகாசமான நிறத்தில் இருக்கும். பெண் பறவைகளை பல ஆண்பறவைகள் விரும்பும். ஆனால் ஒரு ஆண் அதனுடன் சேரும். சிறிது காலத்திற்குப் பிறகு பெண் பறவை தரையில் சிறு குழியில் கூடுகட்டி மூன்று முதல் ஆறு முட்டைகளை இடும். முட்டைகள் நீள் உருண்டை வடிவில் சாம்பலும் மஞ்சளுமான பலவகை நிறங்களில் பல சிறு புள்ளிகளோடு காட்சி தரும். அடைகாக்கும் காலம் 20 நாட்களாகும். முட்டைகளின் சராசரி அளவு 36.8 மிமீ × 26.2 மிமீ (1.45 அங் × 1.03 அங்குலம்).[5]:17  சிறைப்பிடிக்கப்பட்டு வளர்க்கப்படும் நிலையில், பெண் பறவைகளால் அடைகாக்கபட்டுகிறது. அடைகாக்கும் காலம் முடிந்த பிறகு அனைத்து குஞ்சுகளும் ஒரே நேரத்தில் குஞ்சு பொரிக்கின்றன.  காடுகளில், ஆண் பறவைகள் இரவில் அடைகாப்பதைக் காணமுடிகிறது. குஞ்சுகள் பொரித்து வெளிவந்த முதல் அல்லது இரண்டு நாட்கள் கூடுக்கு அருகில் இருக்கும். தார் மற்றும் சிந்துவில் பாலைவனங்களில் குஞ்சு பொரித்த சிறிது நேரத்திலேயே கூட்டை விட்டு வெளியேறும்.[5]:18

படிமங்கள்

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.