ஓம் பிர்லா
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஓம் பிர்லா (Om Birla)(பிறப்பு 23 நவம்பர் 1962)[2] என்பவர் இந்திய அரசியல்வாதியும் இராசத்தானைச் சேர்ந்த தொழிலதிபரும் ஆவார். இவர் 19 சூன் 2019 முதல் மக்களவையின் தற்போதைய சபாநாயகராக உள்ளார். இவர் 2014[3] முதல் இரசத்தானில் உள்ள கோட்டா மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற, மக்களவை உறுப்பினராக பணியாற்றுகிறார். 2024ஆம் ஆண்டில், மக்களவையின் சபாநாயகராத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் அடிப்படையில், கடந்த 20 ஆண்டுகளில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஒருவர் இரண்டாவது முறையாக சபாநாயகராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆனார்.[4][5] இவர் 2003 முதல் 2014 வரை கோட்டா தெற்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டன்ற உறுப்பினராக இராசத்தான் சட்டமன்றத்தில் பணியாற்றியுள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளார். 2024 மக்களவை சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக வெற்றி பெற்றார்.[6] ஓம் பிர்லா கோட்டா மக்களவைத் தொகுதியிலிருந்து மூன்று முறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[7][3][8]
Remove ads
Remove ads
இளமை
ஓம் பிர்லா, சிறீகிருஷ்ண பிர்லா மற்றும் சகுந்தலா தேவிக்கு மார்வாரி இந்து குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் கோட்டாவில் உள்ள அரசு வணிகக் கல்லூரியில் இளநிலை வணிகவியல் பட்டமும் அஜ்மீர் மகரிசி தயானந்த சரசுவதி பல்கலைக்கழகத்தில், வணிகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[3] 1991-இல் அமிதாவினை மணந்த இவருக்கு அகன்சா மற்றும் அஞ்சலி என்ற இரு மகள்கள் உள்ளனர்.[9]
அரசியல்
சட்டமன்ற உறுப்பினராக
ஓம் பிர்லா முதன் முதலாகச் சட்டமன்றத் தேர்தலில் 2003-இல் இராசத்தான் மாநிலம் கோட்டா தெற்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் சாந்தி தரிவாலை 10,101 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதன் பின்னர் 2008-இல் நடைபெற்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு காங்கிரசைச் சேர்ந்த ராம் கிசன் வர்மாவினைவிட 24,300 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றார். நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராவதற்கு முன்பு, இவர் மூன்றாவது முறையாக 201 -இல் சட்டமன்றத் தேர்தலில் பங்கஜ் மேத்தாவை (காங்கிரசு) எதிர்த்து வெற்றி பெற்றார். 2013-இல் 50,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிப் பெற்றார். ஓம் பிர்லா 2003 முதல் 2008 வரை இராசத்தான் மாநில அமைச்சராகவும் இருந்துள்ளார்.[10][1]
மக்களவை உறுப்பினர்/சபைத் தலைவராக
கோட்டா மக்களவைத் தொகுதிக்கான பாஜக வேட்பாளராக, பிர்லா 16, 17 மற்றும் 18வது மக்களவை பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
16வது மக்களவையில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திற்கான எரிசக்தி மற்றும் ஆலோசனைக் குழுவின் நிலைக்குழு உறுப்பினராக ஓம் பிர்லா இருந்தார்.[1]
மக்களவை அவைத் தலைவர் பதவிக்கு முதல்முறையாக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.[10] இவர் சூன் 2024-இல் இரண்டாவது முறையாக அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Remove ads
வகித்தப் பதவிகள்
- மாவட்டத் தலைவர், பாரதிய ஜனதா இளைஞர் அணி, கோட்டா. (1987–91)[11]
- மாநில தலைவர், பாரதிய ஜனதா இளைஞர் அணி, இராசத்தான் மாநிலம். (1991–1997)
- தேசிய துணைத் தலைவர், பாரதிய ஜனதா இளைஞர் அணி (1997-2003)
- கோட்டா தெற்கு சட்டமன்ற உறுப்பினர் (2003-2015)
- கோட்டா நாடாளுமன்ற உறுப்பினர் (2014-முதல்)
- துணைத் தலைவர், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம்.
- தலைவர், கான்பெட், ஜெய்ப்பூர். (சூன் 1992 முதல் சூன் 1995 வரை)
- 17வது மக்களவையின் சபாநாயகர் (19 சூன் 2019 முதல் 5 ஜூன் 2024 வரை)
- 18வது மக்களவையின் சபாநாயகர் (சூன் 26, 2024 முதல் தற்போது வரை)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads