பண்டிட். ஓம்கர்நாத் தாக்கூர் (Omkarnath Thakur) (24 சூன் 1897 - 29 திசம்பர் 1967) இவர் ஓர் இந்திய இசை ஆசிரியரும், இசைக்கலைஞரும், இந்துஸ்தானி இசைப் பாடகருமாவார். குவாலியர் பள்ளியின் பாடகர் விஷ்ணு திகம்பர் பலூசுகரின் சீடரான இவர், இலாகூரின் காந்தர்வ மகாவித்யாலயாவின் முதல்வராகவும். பின்னர் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் இசை பீடத்தின் முதல் தலைவராகவும் இருந்தார்.

விரைவான உண்மைகள் பண்டிட் ஓம்கார்நாத் தாக்கூர், பின்னணித் தகவல்கள் ...
பண்டிட்
ஓம்கார்நாத் தாக்கூர்
Thumb
1997இல் இந்திய அரசால் வெளியிடப்பட்ட அஞ்சல் முத்திரையில் பண்டிட். ஓம்கார்நாத் தாக்கூர்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு(1897-06-24)24 சூன் 1897 [1]
ஜகாஜ், கம்பாட், பரோடா அரசு, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய குசராத்து, இந்தியா)
இறப்பு29 திசம்பர் 1967(1967-12-29) (அகவை 70)[2]
மும்பை, மகாராட்டிரம், இந்தியா (தற்போதைய மும்பை)
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)இசை கல்வியாளர், இசைக்கலைஞர்
இசைக்கருவி(கள்)பாடுதல்
இசைத்துறையில்1918–1960கள்
இணைந்த செயற்பாடுகள்விஷ்ணு திகம்பர் பலூசுகர்
மூடு

ஆரம்பகால வாழ்க்கையும் பயிற்சியும்

தாக்கூர் 1897 ஆம் ஆண்டில் பரோடா அரசின் ஜகாஜ் என்ற கிராமத்தில் ஒரு ஏழை இராணுவ குடும்பத்தில் பிறந்தார். (இன்றைய குசராத்தின் ஆனந்த் மாவட்டம்). இவரது தாத்தா மகாசங்கர் தாக்கூர் 1857ஆம் ஆண்டு சிப்பாய் கிளர்ச்சியில் நானாசாகேப் பேஷ்வாவுக்காக போராடினார். இவரது தந்தை கௌரிசங்கர் தாக்கூரும் இராணுவத்தில் இருந்தார். பரோடாவைச் சேர்ந்த மகாராணி ஜம்னாபாய் என்பவரால் பணியமர்த்தப்பட்டிருந்த இவரின் கீழ் 200 குதிரைப்படை வீரர்கள் இருந்தனர். [3] 1900 ஆம் ஆண்டில் குடும்பம் பருச்சிற்கு குடிபெயர்ந்தது. விரைவில் குடும்பம் நிதி சிக்கல்களை எதிர்கொண்டது. ஏனெனில் இவரது தந்தை இராணுவத்தை விட்டு வெளியேறி சன்யாசியானார். இதனால் ஐந்து வயதான தாக்கூர் தனது தாய்க்கு உதவத் தொடங்கி பல்வேறு வேலைகளை செய்யத் தொடங்கினார். இவருக்கு பதினான்கு வயதாக இருந்தபோது இவரது தந்தை இறந்தார்.

ஒரு செல்வந்த பார்சி பரோபகாரர் ஷாபுர்ஜி மஞ்சர்ஜி துங்காஜி என்பவரின் உதவியால் இவரும், இவரது தம்பி ரமேஷ் சந்திராவும் பாடகர் விஷ்ணு திகம்பர் பலூசுகரின் கீழ் மும்பையில் உள்ள காந்தர்வா மகாவித்யாலயா என்ற இசைப் பள்ளியில் இந்துஸ்தானி இசையில் பயிற்சி பெற்றனர். [4] தாகூர் விரைவில் குவாலியர் கரானாவின் பாணியில் பாடகரானார். மேலும் தனது குரு மற்றும் பிற இசைக்கலைஞர்களுடன் வரத் தொடங்கினார். பின்னர் தனது தொழில் வாழ்க்கையில் தனது தனித்துவமான பாணியை வளர்த்துக் கொண்டார். இறுதியில், இவர் 1918 ஆம் ஆண்டில் தனது இசை நிகழ்ச்சியைத் தொடங்கினார். இருப்பினும் இவர் தனது குருவான பலூசுகரின் கீழ் 1931 இல் இறக்கும் வரை தனது பயிற்சியைத் தொடர்ந்தார். [2]

தொழில்

தாக்கூர் 1916 இல் பலூசுகரின் காந்தர்வ மகாவித்யாலயாவின் லாகூர் கிளையின் முதல்வராக நியமிக்கப்பட்டார். அங்கே இவர் பாட்டியாலா கரானா பாடகர்களான படே குலாம் அலிகானின் தந்தை மாமாவான அலி பக்ச் மற்றும் காலே கான் ஆகியோரிடம் பழகினார். 1919 ஆம் ஆண்டில், பருச்சிற்குத் திரும்பி, தனது சொந்த இசைப் பள்ளியான காந்தர்வா நிகேதன் என்பதை தொடங்கினார் . 1920களில், இவர் இந்திய தேசிய காங்கிரசின் பருச் மாவட்ட காங்கிரசு குழுவின் தலைவரானதால், உள்ளூர் அளவில் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்திற்காக பணியாற்றினார். [4] இந்திய தேச காங்கிரசின் வருடாந்திர அமர்வுகளில் வழக்கமான அம்சமாக இவர் பாடிய தேசபக்தி பாடலான வந்தே மாதரம் நிகழ்ச்சி இடம் பெற்றது. [5] தாக்கூர் 1933 இல் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து ஐரோப்பாவில் நிகழ்த்திய முதல் இந்திய இசைக்கலைஞர்களில் ஒருவரானார். இந்த சுற்றுப்பயணத்தின் போது, பெனிட்டோ முசோலினிக்காக இவர் தனிப்பட்ட முறையில் நிகழ்ச்சியினை நிகழ்த்தினார். [6] தாக்கூரின் மனைவி இந்திரா தேவி அதே ஆண்டு இறந்தார். பின்னர், இவர் இசையில் மட்டுமே கவனம் செலுத்தத் தொடங்கினார்.

ஒரு கலைஞராகவும், இசைக்கலைஞராகவும் தாக்கூரின் பணி பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் ஒரு இசைக் கல்லூரியை உருவாக்க வழிவகுத்தது. இவர் இரண்டு இசைபீடங்களுக்கும் தலைவராக இருந்தார். [2] இவர் இந்திய பாரம்பரிய இசை மற்றும் அதன் வரலாறு குறித்த புத்தகங்களை எழுதினார். 1955 இல் பத்மசிறீ விருதும் [7] 1963 [8] மற்றும் 1963 இல் சங்கீத நாடக அகாதமி விருதும் இவர் பெற்றார். [9] 1963 இல் ஓய்வு பெற்ற இவருக்கு 1963இல் பனாரசு இந்து பல்கலைக்கழகம் மற்றும் 1964இல் இரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

நூற்பட்டியல்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.