From Wikipedia, the free encyclopedia
உமர் அசன் அகமது அல்-பசீர் (Omar Hassan Ahmad al-Bashir, அரபு மொழி: عمر حسن أحمد البشير[1] பிறப்பு: சனவரி 1, 1944) சூடானின் அரசியல்வாதி ஆவார். இவர் 1989 முதல் 2019 ஏப்ரல் 11 வரை சூடானின் ஏழாவது அரசுத்தலைவராகவும், தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராகவும் இருந்தார். இவர் சூடானிய இராணுவத்தில் படைத்துறைத் தலைவராகப் பதவியில் இருந்த போது 1989 ஆம் ஆண்டில் தெற்கு சூடான் போராளிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த மக்களாட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்றைய பிரதமர் சாதிக் அல்-மகுதியின் ஆட்சியை இராணுவப் புரட்சி மூலம் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றினார்.[2] அன்றில் இருந்து இவர் பின்னர் நடைபெற்ற மூன்று தேர்தல்களில் போட்டியிட்டு அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல்களில் பல முறைகேடுகள் இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.[3] 2009 மார்ச் மாதத்தில், அல்-பசீர் தார்பூர் பொதுமக்களுக்கு எதிரான படுகொலைகள், பாலியல் வன்முறைகள், கொள்ளைகள் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.[4]
Omar al-Bashir عمر البشير | |
---|---|
2009 இல் அல்-பசீர் | |
சூடானின் 7-வது அரசுத்தலைவர் | |
பதவியில் 30 சூன் 1989 – 11 ஏப்ரல் 2019 | |
பிரதமர் | பக்ரி அசன் சாலே மொத்தாசு மூசா முகமது தாகிர் அயாலா |
முன்னையவர் | அகமது அல்-மிர்கானி |
பின்னவர் | அகமது அவாத் இப்னு அவுப் |
தலைவர், புரட்சிகர தலைமைப் பேரவை | |
பதவியில் 30 சூன் 1989 – 16 அக்டோபர் 1993 | |
Deputy | சுபைர் முகமது சாலி |
பின்னவர் | இவரே |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஒமார் அசன் அகமது அல்-பசீர் 1 சனவரி 1944 ஓசு பனாகா, ஆங்கிலோ-எகிப்திய சூடான் |
அரசியல் கட்சி | தேசிய காங்கிரசு |
துணைவர்(கள்) | பாத்திமா காலிது விதாத் பாபிக்கர் ஒமர் |
முன்னாள் கல்லூரி | எகிப்திய இராணுவ கல்விக்கழகம் |
Military service | |
பற்றிணைப்பு |
|
கிளை/சேவை | சூடான் இராணுவம் |
சேவை ஆண்டுகள் | 1960–இன்று |
தரம் | படைத்துறை உயர் தளபதி |
போர்கள்/யுத்தங்கள் |
|
2005 அக்டோபரில், அல்-பசீரின் அரசு சூடானின் இரண்டாம் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது.[5] இதன் மூலம் தெற்கில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, தெற்கு சூடான் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. தார்பூர் மண்டலத்தில் தார்ஃபூர் போர் நடத்தப்பட்டதில், சூடானிய அரசுத்தகவலின் படி 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்,[6] ஆனாலும் இப்போரில் 200,000 முதல்[7] 400,000 பேர் வரை இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.[8][9][10] இவரது ஆட்சிக்காலத்தில், தார்பூர் மண்டலத்தில் யன்சாவீது போராளிகளுக்கும், சூடானிய விடுதலை இராணுவம் போன்ற போராளிகளுக்கும் இடையே கரந்தடிச் சண்டைகள் இடம்பெற்றன. உள்நாடுப்போரினால் தார்பூரில் மொத்த மக்கள்தொகையான 6.2 மில்லியனில் 2.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர்.[11][12] இதன் மூலம் சூடானுக்கும் சாடிற்கும் இடையே சுமுகமற்ற உறவுகள் நிலவின.[13] லிபியத் தலைவர் முஅம்மர் அல் கதாஃபியின் இறப்பின் பின்னர் போராளிகள் லிபியாவின் ஆதரவை இழந்தனர்.[14][15][16]
2008 சூலையில், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தார்பூரில் இனப்படுகொலை, மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், மற்றும் போர்க் குற்றங்களை இழைத்ததாக அல்-பசீர் மீது குற்றம் சாட்டியது.[17] நீதிமன்றம் 2009 மார்ச்சு 4 அன்று அல்-பசீருக்கு எதிராக போர்க்குற்றம் மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றுக்கு பிடி-ஆணை பிறப்பித்தது. போதிய ஆதாரங்கள் இல்லாமையால் இனப்படுகொலைக் குற்றங்கள் சுமத்தப்படவில்லை.[18][19] 2010 சூலை 12 அன்று, இனப்படுகொலைக்களுக்காக நீதிமன்றம் இரண்டாவது பிடி-ஆணையப் பிறப்பித்தது. இப்பிடியாணை சூடானிய அரசிடம் கையளிக்கப்பட்டது, ஆனால் அவற்ரை அரசு அங்கீகரிக்கவில்லை.[19][20][21] நீதிமன்றத்தின் முடிவை ஆப்பிரிக்க ஒன்றியம், அரபு நாடுகள் கூட்டமைப்பு, கூட்டுசேரா இயக்கம் மற்றும் உருசிய, சீன அரசுகளும் எதிர்த்துக் கருத்துத் தெரிவித்தன.[22][23]
2018 திசம்பர் முதல், நாட்டில் அல்-பசீரின் ஆட்சிக்கு எதிராக பெருமளவு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 2019 ஏப்ரல் 11 அன்று, இராணுவப் புரட்சி மூலம் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இதனை சூடானிய இராணுவம் அரசுத் தொலைக்காட்சி மூலம் உறுதிப்படுத்தியது.[24]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.