From Wikipedia, the free encyclopedia
ஐத்தரேய பிராமணம் (சமக்கிருதம்: ऐतरेय ब्राह्मण) என்பது, இந்தியாவின் மிகப் பழைய புனித நூல்களில் ஒன்றான இருக்கு வேதத்தைச் சேர்ந்ததும், சகல சிந்தனைப் பிரிவுக்கு உரியதுமான பிராமணம் ஆகும். இது மகிதாச ஐத்தரேயா என்பவரால் எழுதப்பட்டது என நம்பும் மரபு ஒன்று உண்டு.[1][2]
விசயநகரத்தைச் சேர்ந்தவரும் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த உரையாசிரியருமான சாயனர் என்பவர் இந்நூல் முழுவதும் மகிதாச ஐத்திரேயர் என்பவரால் எழுதப்பட்டது எனக் குறித்துள்ளார்.[3] சாயனர் தான் எழுதிய நூலின் அறிமுகத்தில் "ஐத்திரேயா" என்பது தாய்வழிப் பெயர் எனக் குறிப்பிடுகிறார். இவர் எழுதியபடி, மகிதாசரின் தாயார் பெயர் "ஐத்தரா". சமசுக்கிருத மொழியில் "ஐத்தர" என்னும் சொல்லுக்கு "மற்ற" அல்லது "விலக்கப்பட்ட" என்னும் பொருள் உண்டு. ஐத்தரா முனிவர் ஒருவரின் பல மனைவியர்களுள் ஒருத்தி. முனிவர் மகிதாசரைவிட மற்ற மனைவியர்கள் மூலம் பிறந்த பிள்ளைகளிடமே கூடிய விருப்பம் கொண்டிருந்தார். ஒரு முறை முனிவர் தன்னுடைய மற்ற எல்லா மகன்களையும் தனது மடியில் இருத்திக்கொண்டு மகிதாசரைப் புறக்கணித்துவிட்டார். இதையிட்டு மகிதாசரின் கண்ணில் கண்ணீர் வருவதைக் கண்ட இத்தாரா, தனது குலதெய்வமான பூமித் தாயை வணங்கி முறையிட்டாள். பூமித்தாய் அவர்கள் முன் தோன்றி ஐத்தரேய பிராமணத்தில் அடங்கியுள்ள அறிவை மகிதாசருக்கு வழங்கினாள்.[4]
ஆர்தர் பெரிடேல் கீத்து, மாக்சு முல்லர் போன்ற பிற்கால அறிஞர்கள் இந்தக் கதையில் உண்மை இல்லை என்கின்றனர்.[4] சாந்தோக்கிய உபநிடதம் (3.16.7), ஐத்தரேய ஆரண்யகம் (2.1.7, 3.8) உள்ளிட்ட, சாயனருக்கு முந்திய பிற நூல்கள் சிலவற்றிலும் மகிதாசர் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. ஆனால், மேற்படி நூல்கள் எதிலும் சாயனர் கூறிய கதை இல்லை.[4] ஐத்தரேய ஆரண்யகம், ஐயத்துக்கு இடமின்றி ஒரு தொகுப்பு நூலே. எனவே ஐத்தரேய பிராமணமும் பல ஆசிரியர்களால் எழுதப்பட்டதாக இருக்கக்கூடும். இப்பிராமணத்தின் இறுதித் தொகுப்பை மகிதாசர் செய்திருக்கக்கூடும் என்றும், ஆனாலும் அதையும் முடிவாகச் சொல்லமுடியாது என்றும் கீத்து கருதுகிறார்.[3]
ஐத்தரேய பிராமணத்தின் காலத்தை பொகாமு 1000க்கும் பொகாமு 500க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பல்வேறாகக் கணித்துள்ளனர்.[5] அவற்றுட் சில வருமாறு:
ஐத்தரேய பிராமணம், பஞ்சிகங்கள் எனப்படும் எட்டுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பஞ்சிகமும் ஐந்து அத்தியாயங்களிக் கொண்டது. ஐத்தரேய பிராமணத்தின் உள்ளடக்க அமைப்பு வருமாறு:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.