From Wikipedia, the free encyclopedia
ஐக்கிய உருசியா கட்சி (United Russia) (உருசியம்: Единая Россия, ஒ.பெ Yedinaya Rossiya, பஒஅ: [(j)ɪˈdʲinəjə rɐˈsʲijə]) உருசியாவின் பெரிய அரசியல் கட்சியாகும். 1 டிசம்பர் 2001-ஆம் ஆண்டில் ஐக்கிய கட்சி மற்றும் அனைத்து உருசிய தந்தையர் நாடு கட்சிகள் இணைக்கப்பட்டு, ஐக்கிய உருசியக் கட்சி நிறுவப்பட்டது. இக்கட்சியே 2007-ஆம் ஆண்டு முதல் ருசியாவை ஆண்டு கொண்டிருக்கிறது. தற்போதைய உருசிய நாடாளுமன்றத்தின் கீழவையின் (மக்களவை) 450 இடங்களில், இக்கட்சி 325 இடங்களை (72.44%) வென்று விளாதிமிர் பூட்டின் தலைமையில் ஆட்சியை தக்கவைத்துள்ளது.
ஐக்கிய ருசியா கட்சி | |
---|---|
Единая Россия | |
United Russia Logos.svg | |
தலைவர் | திமீத்ரி மெத்வேதெவ்[1] |
பொதுச் செயலாளர் | ஆண்ட்ரே துர்ச்சக் |
நாடாளுமன்றக் குழு தலைவர் | செர்ஜி நெவெரோவ் |
நிறுவனர்கள் | செர்ஜி சோயுகு, யூரி லுஸ்கோவ், மிண்டிமெர் சாய்மிய்வ் |
தொடக்கம் | 1 திசம்பர் 2001 |
இணைந்தவை |
|
தலைமையகம் | கதவு எண் 39, குதுசோவ்ஸ்கி ப்ராஸ்பெக்ட், மாஸ்கோ - 121170, உருசியா [2] |
இளைஞர் அமைப்பு | ஐக்கிய உருசிய இளைஞர் அணி[3] |
உறுப்பினர் (2013) | 2,073,772[4] |
கொள்கை | |
அரசியல் நிலைப்பாடு | பெருங் கூட்டணி [12]a[›] |
தேசியக் கூட்டணி | அனைத்து உருசிய மக்கள் முன்னணி |
நிறங்கள் | வெள்ளை, நீலம், சிவப்பு |
உருசிய கூட்டமைப்புக் குழு (மேலவை)[13] | 142 / 170 |
மக்களவை (கீழவை) | 325 / 450 |
ஆளுநர்கள் | 58 / 85 |
மாகாணச் சட்டமன்றங்களில் இடம் | 2,849 / 3,980 |
அமைச்சரவை | 20 / 31 |
இணையதளம் | |
er | |
^ a: United Russia does not have a coherent ideology but has been described by various sources as centrist,[9][14] centre-right,[15] or right-wing.[16][17] While United Russia is not considered a far-right party, there is controversy over its support for far-right parties in Western Europe.[18][19][20] |
தற்போது இக்கட்சியின் தலைவராக திமீத்ரி மெத்வேதெவ்வும், பொதுச்செயலராக ஆண்ட்ரே துர்ச்சக்கும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக செர்ஜி நெவெரோவ் உள்ளனர்.
№ | தலைவர் | படம் | பதவியேற்ற நாள் | பதவி விலகிய நாள் | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
— | கூட்டுத் தலைமை
|
1 டிசம்பர் 2001 | 27 நவம்பர் 2004 | |||||||
1 | போரிஸ் கிரிஸ்லோவ் | 27 நவம்பர் 2004 | 7 மே 2008 | |||||||
2 | விளாதிமிர் பூட்டின்[21][22] | 7 மே 2008 | 26 மே 2012 | |||||||
3 | திமீத்ரி மெத்வேதெவ்[23] | 26 மே 2012 | பதவியில் உள்ளவர் |
தேர்தல் | வேட்பாளர்கள் | முதல் சுற்று | இரண்டாம் சுற்று | தேர்தல் முடிவு | ||
---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | வாக்குகள் | % | |||
2004 உருசிய அதிபர் தேர்தல் | விளாதிமிர் பூட்டின் | 49,565,238 | 71.31 | வெற்றி | ||
2008 உருசிய அதிபர் தேர்தல் | திமீத்ரி மெத்வேதெவ் | 52,530,712 | 70.28 | வெற்றி | ||
2012 உருசிய அதிபர் தேர்தல் | விளாதிமிர் பூட்டின் | 46,602,075 | 63.60 | வெற்றி | ||
2018 உருசிய அதிபர் தேர்தல் | விளாதிமிர் பூட்டின் | 56,430,712 | 76.69 | வெற்றி |
தேர்தல் | பிரதம அமைச்சர் | வாக்குகள் | % | இடங்கள் | +/– | தரவரிசை | அரசு |
---|---|---|---|---|---|---|---|
2003 உருசிய நாடாளுமன்றத் தேர்தல் | போரிஸ் கிரிஸ்லோவ் | 22,779,279 | 37.57 | 223 / 450 |
122 (இடங்கள் கூடுதல்) | முதலிடம் | பெரும்பான்மை |
2007 உருசிய நாடாளுமன்றத் தேர்தல் | 44,714,241 | 64.30 | 315 / 450 |
92 (இடங்கள் கூடுதல்) | முதலிடம் | பெரும்பான்மை | |
2011 உருசிய நாடாளுமன்றத் தேர்தல் | விளாதிமிர் பூட்டின் | 32,379,135 | 49.32 | 238 / 450 |
77 (இடங்கள் குறைவு) | முதலிடம் | பெரும்பான்மை |
2016 உருசிய நாடாளுமன்றத் தேர்தல் | திமீத்ரி மெத்வேதெவ் | 28,527,828 | 54.20 | 343 / 450 |
105 (இடங்கள் கூடுதல்) | முதலிடம் | பெரும்பான்மை |
2021 உருசிய நாடாளுமன்றத் தேர்தல் | செர்ஜி சோய்கு | 28,064,258 | 49.82 | 324 / 450 |
19 (இடங்கள் குறைவு) | முதலிடம் | பெரும்பான்மை |
2013-ஆம் ஆண்டில் ஐக்கிய உருசியக் கட்சியில் 2 மில்லியன் பேர் உறுப்பின்ர்கள் உள்ளதாக கூறுகின்றனர். 30% உருசிய மகக்ள் ஐக்கிய உருசியக் கட்சிக்கு விசுவாசமாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.
ஏப்ரல் 2008-ஆம் ஆண்டு முதல் ஐக்கிய உருசியக் கட்சி, உயர்மட்டக் குழுவின் தலைவரின் கீழ் செயல்படுகிறது. இக்கட்சியின் பொதுக் குழு 152 உறுப்பினர்களைக் கொண்டது. பொதுச் செயலாளர் தலைமையில் 23 பேர் கொண்ட செயற்குழு செயல்படுகிறது.
20 செப்டம்டம்பர் 2005 அன்று உருசியாவில் இக்கட்சியின் 2,600 கிளைகளும் மற்றும் 29,856 உள்ளூர் அலுவலகங்களும் இருந்தது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.