டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கம் (Association of Tennis Professionals, சுருக்கமாக ATP) 1972ஆம் ஆண்டு டோனால்ட் டெல், யாக் கிராமர் மற்றும் கிளிஃப் டிரேஸ்டேல் ஆகியோரால் ஆடவர் தொழில்முறை டென்னிசு விளையாட்டுக்காரர்களின் நலனை பாதுகாக்கும் நோக்குடன் துவங்கபட்டது. 1990முதல் உலகின் பல பாகங்களிலும் டென்னிசு போட்டிகளை நடத்தி வருகிறது; இவை சங்கத்தின் பெயருடன் இணைக்கப்பட்டுள்ளன. 1990இல் ஏடிபி சுற்று என்று அழைக்கப்பட்ட இந்தப் போட்டிகள் 2001ஆம் ஆண்டு முதல் ஏடிபி என்றே அழைக்கப்பட்டன. 2009ஆம் ஆண்டில் இது மீண்டும் மாற்றப்பட்டு தற்போது ஏடிபி உலகச் சுற்றுஎன்று அறியப்படுகிறது.[1] இந்த போட்டிகள் முன்னதாக நடைபெற்றுவந்த கிராண்ட் பிரீ டென்னிசுப் போட்டிகள் மற்றும் உலக சாதனையாளர் டென்னிசு (WCT) போட்டிகளிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றவையே ஆகும் ஏடிபியின் நிர்வாக தலைமையகங்கள் இலண்டனிலும், அமெரிக்காவிற்கு புளோரிடாவில் பான்ட் வெர்டே கடற்கரையிலும் ஐரோப்பாவிற்கு மொனாக்கோவிலும் ஆபிரிக்கா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்காக சிட்னியிலும் அமைந்துள்ளன.
டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கம் ATP | |
விளையாட்டு | தொழில்முறை டென்னிசு |
நிறுவபட்ட நாள் | 1972 |
அமைவிடம் | லண்டன் மொனாக்கோ பாண்ட் வெர்டே கடற்கரை, புளோரிடா சிட்னி |
அவைத்தலைவர் | ஆடம் ஹெல்ஃபான்ட் |
தலைமை நிர்வாகி | பிராட் ட்ரெவிட் |
அலுவல்முறை இணையதளம் | |
www |
இதற்கு இணையான மகளிருக்கான அமைப்பாக மகளிர் டென்னிசு சங்கம் விளங்குகிறது.
மேற்கோள்கள்
வெளியிணைபுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.