கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
எதிரி 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. எஸ். ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதவன்,சதா,விவேக் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிரி | |
---|---|
இயக்கம் | கே. எஸ். ரவிகுமார் |
தயாரிப்பு | ஜி.வி பிரசாத் |
கதை | கே. எஸ். ரவிகுமார் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | மாதவன், சதா, விவேக், டெல்லி கணேஷ், கனிகா, மதன் பாபு, சுந்தர்ராஜன், வாசு விக்ரம் |
வெளியீடு | 2004 |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
நடராஜன் ஐயர் (டெல்லி கணேஷ்) அந்தணராவார். அவர் வீட்டை வாடகைக்கு விடும்பொழுது அவ்வீட்டில் குடிவருபவர்களிடன் பல சட்டங்களைத் தெரிவித்தே பின்னர் அங்கு குடியமத்துவார். அச்சமயம் அங்கு வரும் காடயர்களான கல்லூரி மாணவர்கள் அவரிடன் நல்லவர்களாக நடித்து பின்னர் அவர் வீட்டில் வாடகைப் பகுதியில் குடியமர்கின்றனர். நல்லவர்களாக இருந்தவர்கள் சாராயம், புகை பிடித்தல் போன்ற பல தொழில்களைச் செய்ய ஆரம்பித்தனர். இவற்றைப் பார்த்துப் பயந்துபோன நடராஜன் ஐயர் அவர்களை விரட்டுவதற்கு ஆட்டோ ஓட்டுனர் (விவேக்) ஒருவரின் உதவியை நாடுகின்றார். அவரும் பாட்டில் மணி என்ற காடையன் இருக்கின்றான். அவன் உங்களுக்கு உதவுவான் என்று பொய் கூறினார். அதன்படி பாட்டில் மணியாக தன் நண்பன் சுப்பிரமணியை (மாதவன்)ஏற்பாடு செய்கின்றார். இவர் சொல்கேட்டு பாட்டில் மணி போல் வந்து ஐயர் வீட்டிலிருப்பவர்களைப் பயமுறுத்துகின்றார். இதற்கிடையில் ஐயரின் மகளான காயத்ரி மீது காதல் நெருங்கிப் பழகுகின்றார். இவற்றைப்பார்த்து மனம் நொந்துகொள்ளும் அவர் பாட்டில் மணியை வெளியில் அனுப்புவதற்காகப் பலமுறை முயல்கின்றார். அச்சமயம் நண்பனின் காதலியென நினைத்து பிரியாவைக் (சதாவை) கடத்திச் செல்லும் சுப்பிரமணி பின்னர் பிரியா மீது காதல் கொள்கின்றார் எவ்வாறு பிரியாவை காடையனான அவள் தந்தையிடமிருந்து காப்பாற்றி ஒன்று சேருகின்றார் சுப்பிரமணி என்பதே திரைக்கதை முடிவு.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.