எட்டு நாடுகளின் கூட்டணி
From Wikipedia, the free encyclopedia
எட்டு நாடுகளின் கூட்டணி (Eight-Nation Alliance) என்பது பலதரப்பட்ட நாடுகளின் ராணுவ கூட்டணியாகும். இது 1900 ஆண்டு சீன பாக்சர் கலகக்காரர்களின் தாக்குதலிலிருந்து துணைத் தூதரகங்கள் மற்றும் கிறித்தவ மிஷனரிகளை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்தப் படையில் சுமார் 45 ஆயிரம் துருப்புக்கள் இருந்தன. ஜெர்மனி, ஜப்பான், உருசியா, பிரிட்டன், பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஆஸ்திரிய-ஹங்கேரி ஆகிய எட்டு நாடுகளிலிருந்து இந்த துருப்புகள் கொண்டுவரப்பட்டன.[1] பீகிங்கில் (தற்போதைய பெய்ஜிங்) இருந்த சர்வதேச துணைத் தூதரகங்கள் கிங் அரசாங்கத்தால் ஆதரவளிக்கப்பட பாக்சர் கலகக்காரர்களால் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்ட பொழுது எட்டு நாடுகளின் கூட்டணியானது தங்களது ராணுவத் துருப்புகளை மனிதாபிமான தலையீட்டின் அடிப்படையில் அனுப்பின. தங்கள் நாட்டுக் குடிமக்கள் மற்றும் துணை தூதரகங்களில் தஞ்சம் அடைந்த குறிப்பிடத்தக்க அளவிலான சீன கிறித்தவர்களையும் பாதுகாக்க அவை படைகளை அனுப்பின. பாக்சர் கலகமானது கூட்டணியின் வெற்றிக்கு பிறகு பாக்சர் நெறிமுறை கையெழுத்துடன் முடிவடைந்தது. கூட்டணியின் உறுப்பினர்கள் சீனாவிலேயே தங்கினர். பெய்ஜிங் மற்றும் மற்ற நகரங்களை ஒரு ஆண்டுக்கும் மேலாக சூறையாடினர்.[2]
உறுப்பு நாடுகள்
எட்டு நாடுகளின் கூட்டணிப் படை![]() இடமிருந்து வலம்: பிரிட்டன், ஐக்கிய அமெரிக்கா, ஆத்திரேலியா, இந்தியா ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா-ஹங்கேரி, இத்தாலி, ஜப்பான் | |||
நாடுகள் | போர்க்கப்பல்கள் (எண்ணிக்கை) |
கடற்படையினர் (வீரர்கள்) |
ராணுவம் (வீரர்கள்) |
---|---|---|---|
![]() |
18 | 540 | 20,300 |
![]() |
10 | 750 | 12,400 |
![]() |
8 | 2,020 | 10,000 |
![]() |
5 | 390 | 3,130 |
![]() |
2 | 295 | 3,125 |
![]() |
5 | 600 | 300 |
![]() |
2 | 80 | 2,500 |
![]() |
4 | 296 | தெரியவில்லை |
மொத்தம் | 54 | 4,971 | 51,755 |
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.