Remove ads
From Wikipedia, the free encyclopedia
ஊபேய் (Hubei; மரபுவழிச் சீனம்: 湖北; முன்னாளில் ஊப்பேய் (Hupeh) என்பது சீன மக்கள் குடியரசு நாட்டின் மத்தியில் உள்ள மாகாணங்களுள் ஒன்று. மாகாணத்தின் பெயரான ஊபேய் என்பதன் பொருள் "ஏரியின் வடக்கு" என்பதாகும். தோங்டிங் ஏரியின் வடக்கில் அமைந்தமையால் இப்பெயரைப் பெற்றது.[4] மாகாணத் தலைநகரான ஊகான், ஒரு முக்கியப் போக்குவரத்து வழியாகவும் மத்திய சீனாவின் அரசியல், பண்பாடு, பொருளாதார மையமாகவும் விளங்குகிறது.
ஊபேய் மாகாணம்
Hubei Province 湖北省 | |
---|---|
பெயர் transcription(s) | |
• சீனம் | 湖北省 (Húběi Shěng) |
• சுருக்கம் | 鄂 (pinyin: È) |
சீனாவில் அமைவிடம்: ஊபேய் மாகாணம் Hubei Province | |
பெயர்ச்சூட்டு | 湖 hú—ஏரி 北 běi—வடக்கு "தோங்டிங் ஏரியின் வடக்கு" |
தலைநகரம் (மற்றும் பெரிய நகரம்) | ஊகான் |
பிரிவுகள் | 13 அரச தலைவர், 102 கவுண்டி மட்டம், 1235 நகர மட்டம் |
அரசு | |
• செயலாளர் | லி ஹோங்சோங் |
• ஆளுநர் | வாங் குஷ்ஷிங் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,85,900 km2 (71,800 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 13வது |
மக்கள்தொகை (2014)[2] | |
• மொத்தம் | 5,81,60,000 |
• தரவரிசை | 9வது |
• அடர்த்தி | 310/km2 (810/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 12வது |
மக்கள் வகைப்பாடு | |
• இனங்கள் | ஹான்: 95.6% துஜா: 3.7% மொங்: 0.4% |
• மொழிகளும் கிளைமொழிகளும் | தென்மேற்கு மாண்டரின், ஜியாங்உவாய் மாண்டரின், கான் |
ஐஎசுஓ 3166 குறியீடு | CN-42 |
GDP (2014) | CNY 2.74 டிரில்லியன் US$445.5 பில்லியன் (9வது) |
• per capita | CNY 47,054.67 US$7,651 (14வது) |
HDI (2010) | 0.696[3] (medium) (13வது) |
இணையதளம் | www.hubei.gov.cn (எளிய சீனம்) |
மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை என்னும் அணை இந்த மாகாணத்திலுள்ள யில்லிங் (Yiling) மாவட்டத்திலிருக்கும் சான்டோப்பிங் (Sandouping) நகரத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் இடமாகும்.[5].
ஊபேய் மாகாணம் தன் எல்லையை வடக்கில் ஹெய்நான் மாகாணம், கிழக்கில் அன்ஹுயி மாகாணம், தென்கிழக்கில் ஜியாங்சி, தெற்கில் ஹுனான் மாகாணம், மேற்கில் சாங்கியூங், வடமேற்கில் ஷாங்சி ஆகியவற்றுடன் பகிர்ந்துகொண்டுள்ளது.
பழங்காலத்தில் சீனாவின் இந்த மாகாணத்தில் அதிநவீன புதிய கற்கால பண்பாடு நிலவியது.[6] கி.மு.770-476 காலகட்டத்தில் சீனப்பகுதிகளில் சக்தி வாய்ந்த அரசாக இருந்த சூ மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த சூ மாநிலம் சவு வம்சத்தின் ஆட்சியில் ஒரு துணை மாநிலமாக இருந்தது.
இம்மாகாணத்தின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் ஜியங்ஹான் சமவெளி அமைந்துள்ளது.
மாகாணத்தின் மேற்குப்பகுதி மலைப்பாங்குடன் உள்ளது. இங்கு ஊடாங் மலைகள், ஜிங் மலைகள், தாபா மலைகள், வு மலைகள் போன்றவை உள்ளன. ஜியாங்கன் சமவெளியின் வடகிழக்கில் தாபி மலைகள் உள்ளன. தோங்பாய் மலைகள் ஹெய்நான் மற்றும் அன்ஹுயி மாகாணங்களுடனான எல்லையாக உள்ளது. தென்கிழக்கேயுள்ள முபு மலைகள் ஜியாங்சி மாகாணத்தின் எல்லையாக உள்ளது. மாகாணத்தின் உயரமான சிகரம் தாபா மலைகளில் காணப்படும் 3105 மீட்டர் உயரமுள்ள ஷென்னாங்குக்கு சிகரம் ஆகும்.
ஹூபே மாகாணத்தில் இரண்டு பெரிய ஆறுகள் பாய்கின்றன. அவை யாங்சி ஆறு மற்றும் அதன் இடது கிளை ஆறான ஹான்ஷுய் ஆகும். இவ்விரு பெரிய ஆறுகளும் மாகாணத்தலைநகரான வுகான் என்னும் இடத்தில் சந்திக்கின்றன. மாகாணத்தில் யாங்சி ஆற்றின் குறிப்பிடத்தக்க பிற கிளை ஆறுகள் ஷேன் நாங் ஓடை, சிங் போன்றவை ஆகும். தென்மேற்கு ஹூபேயின் முக்கிய நீர்வழிபாதைகளாக ஈச்சாங் நகரின் அருகே பாயும் ஹுவாங்பை ஆறும், மாகாணத்தின் தென்கிழக்கில் பாயும் ஃபூஷுயெ ஆறும் திகழ்கின்றன.
ஹூபே மாகாணத்தின் ஜியங்ஹான் சமவெளியில் ஆயிரக்கணக்கான ஏரிகள் உள்ளன. இதனால் இந்த மாகாணம் சீனாவில் "ஏரிகள் மாகாணம்" எனப் பெயர்பெற்றது. இந்த ஏரிகளில் பெரிய ஏரிகள் லியாங்சி மற்றும் ஹாங் ஏரி ஆகும்.
ஹூபேய் மாகாணம் ஈரப்பதமான மிதவெப்ப மண்டலக் காலநிலையைக் கொண்டது. குளிர்காலமான சனவரி மாத வெப்பநிலை சராசரியாக 1 முதல் 6 °செல்சியஸ் (34 முதல் 43 °பாரங்கீட்) ஈரப்பதமாகவும், வெப்பமாகவும் இருக்கும் கோடைக்காலத்தில் (சூலை மாதத்தில்) வெப்பநிலை சராசரியாக 24 முதல் 30 °செல்சியஸ் (75 முதல் 86 °பாரங்கீட்) இருக்கும்.
2011 ல் இந்த மாகாணத்தின் மொத்த உற்பத்தி 1,959 டிரில்லியன் யுவான் (311 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பையும் தனிநபர் வருமானம் 21,566 ரென்மின்பி (2,863 அமெரிக்க டாலர்) மதிப்பையும் கொண்டு சீன நாட்டின் பொருளாதாரத்தில் 11 வது இடத்தில் இருந்தது. மாகாணத்தின் வளர்ச்சி விகிதம் ஆண்டுதோறும் 10% க்கு மேல் உள்ளது. 2020 ஆண்டில் இந்த மாகாணத்தின் தனிநபர் வருமானம் இருமடங்காகலாம் என நம்பப்படுகின்றது.[7]
ஹுபேய் மாகாணம் "மீன் மற்றும் அரிசி நிலம்" என்று செல்லமாக அழைக்கப்படுகிறது (鱼米之乡). மாகாணத்தின் முதன்மையான வேளாண் பொருட்கள் பருத்தி, நெல், கோதுமை, தேயிலை போன்றவை ஆகும். தொழிற்சாலைகள் என்றால் தானுந்துகள், உலோகம், இயந்திரங்கள், மின்னாக்கிகள், ஆடை, உணவுப்பொருள், உயர் தொழில்நுட்ப பொருட்கள் உற்பத்தி ஆகும்.[7]
ஹுபேயில் குறிப்பிடத்தக்க அளவு கனிமப் பொருட்கள் கிடைக்கின்றன, அவை பின்வருமாறு வெண்காரம், ஹோங்ஷியைட், உல்லஸ்டோனிட், கோமேதகம், மாரிஷ்டோன், இரும்பு, பாசுபரசு, தாமிரம், ஜிப்சம், ரூட்டில், பாறை உப்பு, தங்கம், மாங்கனீசு, வனேடியம் ஆகும். மாகாணத்தின் நிலக்கரி கையிருப்பு 548 மில்லியன் டன்கள், சீனாவின் பிற மாகாணங்களுடன் ஒப்பிடும்போது இந்த மாகாணம் இரத்தினச்சுரங்கங்களுக்காகப் பெரிதும் அறியப்படுகிறது.
மாகாணத்தில் ஹான் சீனர் இனக்குழுவினரே பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் கணிசமான மொங் மக்கள், துஜா மக்கள் வாழுகின்றனர்.
சீனப்பழமை மதங்களே பெரும்பான்மையாகப் பின்பற்றப்படுகிறது. அவை சீன நாட்டுப்புற மதங்கள், தாவோயிச மரபுகள் மற்றும் சீன பௌத்தம் ஆகும். 2007 மற்றும் 2009 இல் நடத்திய ஆய்வுகள்படி, மக்கள் தொகையில் 6.5% முன்னோர்களை வழிபடும் சடங்குகளில் ஈடுபடுபவர்களாக உள்ளனர். மக்கள் தொகையில் 0.58% கிறித்தவர்கள் உள்ளனர். 2004 ல் 0.83% என்ற எண்ணிக்கையில் இருந்து குறைந்துவிட்டதாக அடையாளம் கணப்பட்டுள்ளது.[8] அறிக்கையில் மத விவரங்களைக் கொடுக்காதவர்கள் மக்கள் தொகையில் 92.92% ஆவர். இவர்கள் சமயப்பற்று அல்லது ஈடுபாடு அற்றவர்களாக இருக்கலாம். முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.