மேற்கு வங்காளத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
உத்தர தினஜ்பூர் அல்லது வடக்கு தினஜ்பூர் (Uttar Dinajpur அல்லது North Dinajpur) மாவட்டம் இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் நாள் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் ராய்காஞ்ச் மற்றும் இஸ்லாம்பூர் என இரு உட்கோட்டங்களாக (subdivisions) பிரிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் 10 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளன.
உத்தர தினஜ்பூர்மாவட்டத்தின் இடஅமைவு மேற்கு வங்காளம் | |
மாநிலம் | மேற்கு வங்காளம், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | ஜல்பைகுரி கோட்டம் |
தலைமையகம் | ராய்காஞ்ச் |
பரப்பு | 3,142 km2 (1,213 sq mi) |
மக்கட்தொகை | 3,000,849 (2011) |
படிப்பறிவு | 60.13% |
பாலின விகிதம் | 936 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 3142 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். நிலப்பரப்பு சமதளமாக இருந்தாலும் தென் திசையை நோக்கி சாய்வாகவே உள்ளது. தென்திசையில் குலிக், நாகர், மஹாநந்தா ஆகிய ஆறுகள் ஓடுகின்றன. இம்மாவட்டத்தின் அமைவு 25.37°N 88.07°E ஆகும். ஆசியாவின் இரண்டாவது பெரிய சரணாலயாமான ராய்காஞ்ச் பறவைகள் சரணாலயம் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]
1577 கிராமங்களைக் கொண்ட இம்மாவட்டம்,
என பிரிக்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 30,00,849 பேர் வசிக்கின்றனர்.[2] இது அல்பேனியா நாட்டின் மக்கட்தொகைக்குச் சமமாகும்.[3] மக்கட்தொகைப் பெருக்க சதவீதம் 22.9 ஆகும். [2]1000 ஆண்களுக்கு 936 பெண்கள் என்ற வீதத்தில் உள்ளனர்.[2] கல்வியறிவு 60.13% ஆகும்.[2]
இம்மாவட்டத்தில் இந்து மற்றும் இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ளனர்.[4]
இம்மாவட்டத்தில் வங்காள மொழி முக்கிய மொழியாகும். இந்தி மற்றும் உருது மொழி பேசுவோர் இஸ்லாம்பூர் பகுதியில் உள்ளனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.