ஈஸ்டர் தீவு
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
ஈஸ்டர் தீவு (Easter Island) என்பது பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கே அமைந்துள்ள பொலினீசியத் தீவு. இது சிலியின் ஆளுகைக்கு உட்பட்ட சிறப்பு மண்டலம். ராப்ப நூயீ மக்களினால் அமைக்கப்பட்ட மோவாய் (moai) என அழைக்கப்படும் பல நினைவுச் சின்னங்கள் இத்தீவின் சிறப்பு. இத்தீவு ஒரு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாகும்.
ஈஸ்டர் தீவு Easter Island Isla de Pascua Rapa Nui | |
---|---|
கொடி | |
தலைநகரம் | கங்கா உரோவா |
ஆட்சி மொழி(கள்) | ஸ்பானியம், ராப்பா நூயி |
இனக் குழுகள் (2002) | ராப்ப நூயீ 60%, சிலியர் 39%, ஆமரிந்தியர்கள் 1% |
மக்கள் | ராப்ப நூயீ |
அரசாங்கம் | சிலியின் சிறப்புப் பிரதேசம் |
• மாகாண ஆளுநர் | கார்மென் கார்டினலி |
• நகரத்தந்தை | லஸ் சாஸோ பாவோவா |
இணைப்பு | |
• ஒப்பந்தம் கையெழுத்து | செப்டம்பர் 9, 1888 |
பரப்பு | |
• மொத்தம் | 163.6 km2 (63.2 sq mi) |
மக்கள் தொகை | |
• 2002 கணக்கெடுப்பு | 3,791 |
• அடர்த்தி | 23.17/km2 (60.0/sq mi) |
நேர வலயம் | ஒ.அ.நே-6 (நடு நேர வலயம்) |
அழைப்புக்குறி | 56 32 |
"ஈஸ்டர் தீவு" என்பது முதன் முதலாக இங்கு வந்திறங்கிய டச்சுப் பயணியான ஜேக்கப் ரகவீன் என்பவரால் கொடுக்கப்பட்டது. இவர் இத்தீவில் 1722 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு நாளன்று வந்திறங்கினார். இத்தீவின் தற்போதைய பொலினீசியப் பெயர் "ராப்பா நூயி" (Rapa Nui). ராப்பா நூயி என்றால் "பெரும் ராப்பா" எனப்பொருள். பிரெஞ்சு பொலினீசியாவின் பாஸ் தீவுகளில் இருந்து 1870களில் இங்கு குடியேறிய ராப்பா மக்களின் நினைவாக இப்பெயர் இடப்பட்டது.[1].
ஈஸ்டர் தீவு உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட குடியேற்றத் தீவுகளில் ஒன்றாகும். இது சிலியில் இருந்து 3,600 கிமீ (2,237 மைல்) மேற்கேயும், பிட்கேர்ன் தீவில் இருந்து 2,075 கிமீ (1,290 மைல்) கிழக்கே அமைந்துள்ளது.
ஈஸ்டர் தீவின் வரலாறு மிகுந்த சர்ச்சைக்குள்ளாகிய ஒன்று. இதன் குடிகள் பஞ்சம், தொற்றுநோய்கள், உள்நாட்டுப் போர், அடிமை வாழ்வு, குடியேற்றவாதம், காடுகள் அழிப்பு எனப் பல இன்னல்களை சந்தித்துள்ளனர். இத்தீவின் மக்கள்தொகை பலமுறை அபாயகரமாக குறைந்திருக்கிறது.
முதன்முதல் குடியேற்ற மதிப்பீடுகள் ஹவாயில் குடியேற்றம் நிகழ்ந்த அதே கி.பி. 300 இலிருந்து 1200 வரையிலாகக் குறிக்கின்றன. கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பின்படி இந்த மதிப்பீடுகள் குறுகிய காலவெளியிலான கி.பி. 700 முதல் 1100 வரையாக குறிக்கின்றன. தற்போது அகழ்வாய்வு நடத்தும் ஆய்வாளர்கள் டெர்ரி அன்ட்டும் கார்ல் லிபோவும் இதனை இன்னும் பிந்தையதாக கி.பி. 1200 என மதிப்பிட்டுள்ளனர்.[2][3]
ஈஸ்டர் தீவு மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தீவு. இதன் அருகில் உள்ள நிலப்பரப்புகள் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் கிழக்கில் தென் அமெரிக்காவும் மேற்கில் பொலினீசிய தீவுகளும் ஆகும். ஈஸ்டர் தீவுவாசிகளின் எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்ட டி. என். ஏ மரபியல் நியதி பொலினேசிய நியதியுடன் ஒத்துப்போனது. அந்த நாளில் சாதாரண கட்டுமரங்கள் மூலம் அவர்கள் கடந்த தூரம் மலைக்க வைக்கிறது. உலகில் நடந்த மாபெரும் கடல் வழி இடப்பெயர்ச்சியாக இது அமைந்தது. இந்த இடப்பெயர்ச்சி கிபி ஏழாம் நூற்றாண்டில் நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது, அதற்குப்பின் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு யாரும் இந்த தீவுக்கு வரவில்லை. தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகள் அங்கே நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்திருந்ததையும், வேளாண்மை, மீன்பிடித்தல் முக்கிய தொழிலாக இருந்ததையும் மக்கள் தொகை 12,000 ஆக இருந்திருக்கலாம் என்றும் உறுதிப்படுத்தின. 1999இல் மாங்கெரேவா தீவுகளிலிருந்து தொன்மைக்கால பாலினீசிய வடிவமைப்பில் கட்டப்பட்ட கட்டுமரங்களில் நடத்தப்பட்ட கடற்பயணம் 19 நாட்களில் ஈஸ்டர் தீவினை சென்றடைந்தது.[4]
இதன் பொலினிசியப் பெயர் ராப்ப நூயீ (Rapa Nui) என்பதாகும். கி.பி 1722இல் டச்சைச் சேர்ந்த ஜேக்கப் ரகவீன் (Jacob Roggeveen) ஈஸ்டர் தினத்தில் இந்த தீவுக்கு வந்தார். அவரே தாம் வந்தநாளின் நினைவாக "ஈஸ்டர் தீவு" என்று பெயரிட்டார்.
மனித முகம் போல் தோற்றமுடைய மோவாய்கள் என்ற பிரமாண்டமான நூற்றுக்கணக்கான கற்சிலைகள் தீவெங்கும் காணப்படுகின்றன. இவற்றின் உயரம் சராசரியாக 10 மீட்டரும் எடை 80 டன்னும் உள்ளன. முன்னூறுக்கும் மேற்பட்ட இவற்றை ஓரிடத்தில் நிலைத்து இருத்தாது பத்து மைல் தூரம் வரை தீவு முழுமையும் நகர்த்தப்பட்டு வந்துள்ளன. இவற்றைக் குறித்த ஆய்வுகள் தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு சவாலாக அமைந்தன.[5]
ராப்பா நூயி தேசியப் பூங்கா Rapa Nui National Park | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
ஈஸ்டர் தீவில் உள்ள மோவாய் | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | i, iii, v |
உசாத்துணை | 715 |
UNESCO region | ஓசியானியக் கண்டம் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1995 (19வது தொடர்) |
ஒவ்வொரு முறையும் இச்சிலைகளை நகர்த்த ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. ஒரு கட்டத்தில் இந்தத் தீவின் வனப்பகுதி முற்றிலும் அழிந்தது. பெரும் மழைகள் வண்டல் மண்ணை அடித்துச் செல்ல விவசாயம் பொய்த்தது. மீன் பிடிக்க படகு செய்ய மரம் இல்லாததால் தீவுவாசிகள் பெரும் உணவுப்பிரச்சனைக்கு ஆளானார்கள். உணவுப் பற்றாக்குறையால் ஒருவரோடொருவர் சண்டையிட்டு இறந்தார்கள். கூடவே மோவாய்களையும் முடிந்தவரை சிதைத்தார்கள். மக்கள் தொகை பெருமளவு குறைந்தது. எஞ்சியிருந்தவர்கள் மெதுவாக பழைய வாழ்க்கைக்கு திரும்பத்தொடங்கியிருந்த போது ஜேக்கப் ஈஸ்டர் தீவில் காலடி எடுத்துவைத்தார். இதனைத் தொடர்ந்து அடிமை வணிகத்திற்காக தீவுவாசிகளை பிடித்துக்கொண்டு போனார்கள். சில ஆண்டுகளுக்குப்பின்னர் ஒரு சிலர் தப்பி வந்தனர். அவர்கள் மூலமாக சின்னம்மை போன்ற தொற்றுநோய்கள் பரவின. இது போன்ற நோய்களுக்கு எதிர்ப்புர்த் திறன் கொண்டிராத தீவுவாசிகள் இவற்றுக்கு எளிதில் பலியானார்கள்.
உலகில் கண்டுபிடிக்க முடியாத மர்மங்களில் ஈஸ்டர் தீவும் ஒன்று .
பசிபிக் சமுத்திரத்தில் சிலி என்னும் நாட்டிற்கு மேற்கே 2200 மைல் தொலைவில் அமைந்துள்ள ஒதுக்கு புறமான தீவாகும் இது. 1722 ஆம் ஆண்டு ஈஸ்டர் திருநாளன்று ஒலாந்தரால் இத்தீவு கண்டுபிடிக்கபட்டது . இதனால் இத்தீவிற்கு ஈஸ்டர் தீவு என்று பெயர் சூட்டப்பட்டது.இத்தீவில் 887 மனித உருவச்சிலைகள் அமைந்துள்ளது .
கி.பி 400 ஆம் ஆண்டில் போளிநேசியாவைச் சேர்ந்த மாலுமிகள் கடலில் காணப்பட்ட மின்னோட்டம் காரணமாக தவறுதலாக இந்த தீவிற்கு வந்துள்ளனர் . அதன் பின்னர்தான் அவர்களால் இங்கிருந்து செல்ல முடியவில்லை. எனவே வேறு வழியின்றி இத்தீவிலே நிரந்தரமாக தங்கிட நேர்ந்தது என்று கருதுகின்றனர்.
இங்கு காணப்படும் மனிதச் சிலைகள் அனைத்திலும் காதுகள் நீண்டதாக தெரிகிறது. பாலினேசியர்கள் இடையே இரண்டு குழுக்கள் இருந்தன. ஒரு குழுவில் இருந்தவர்களின் காதுகள் நீண்டதாகவும், மற்ற குழுவில் இருந்தவர்களின் காதுகள் சிறியதாகவும் காணப்பட்டன. நீண்ட காதுகளை உடையவர்கள் கடவுளின் குழந்தைகள் என்று அழைத்துக் கொண்டனர். அவர்களே ஆட்சியும் செய்தனர் அவர்கள் மற்றவர்களை அடக்கி அடிமையாக நடத்தினர்.
அதிகாரத்தில் உள்ளர்வர்களது உருவங்களை அடிமைகள் சிலைகளாக செதுக்க கட்டளையிட்டனர். இதனால் தான் இங்குள்ள அனைத்துச் சிலைகளும் காதுகள் நீண்டதாக உள்ளது என வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. இவை அனைத்தும் எரிமலை அடிவாரத்தில் செதுக்கப்பட்டன என்றும் அவை கயிறு கொண்டு 150 அடிமைகளின் உதவியால் கொண்டுவர பட்டுள்ளன என்றும் தெரிவிகின்றது. இங்கு கயிறாக ஒரு வகை புற்கள் பயன்பட்டுள்ளன. இச்சிலைகளை தீவிற்கு கொண்டு வர ஒரு மாத காலம் ஆகி இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள் .
ஈஸ்டர் தீவு ஒரு எரிமலை உயர் தீவு ஆகும். இது முக்கியமாக மூன்று அழிந்த எரிமலைகளைக் கொண்டுள்ளது: டெரவாக்கா (507 மீட்டர்) தீவின் முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. பொய்க்கே மற்றும் ரானோ காவு என்ற மற்றைய இரண்டும் இத்தீவுக்கு ஒரு முக்கோண வடிவைக் கொடுக்கின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.