இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
இளவாலை (Ilavalai) யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவிலும், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிலும், உள்ள ஒரு ஊர் ஆகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கரையோரமாக அமைந்துள்ள இவ்வூரின் வடக்கு எல்லையில் கடலும், கிழக்கு எல்லையில் நகுலேஸ்வரம், கொல்லங்கலட்டி, பன்னாலை, வித்தகபுரம் ஆகிய ஊர்களும், தெற்கில் முள்ளானையும், மேற்கில் மாரீசன்கூடலும் உள்ளன. இவ்வூர் இளவாலை, இளவாலை வடக்கு, இளவாலை வடமேற்கு என மூன்று கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1][2][3][4] யாழ்ப்பாண நகரில் இருந்து 18 கிமீ வடக்கே இளவாலை அமைந்துள்ளது.
இளவாலை | |
---|---|
கிராமம் | |
வட மாகாணத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 9°47′42″N 79°59′34″E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பி.செ. பிரிவு | வலிகாமம் வடக்கு |
அரசு | |
• வகை | பிரதேச செயலகம் |
• நிர்வாகம் | வலிகாமம் வடக்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
தொலைபேசிக் குறியீடு | 021 |
வாகனப் பதிவு | NP |
Seamless Wikipedia browsing. On steroids.