இலண்டன் முருகன் கோயில்

ஐக்கிய இராச்சியத்தின் இலண்டனிலுள்ள ஒரு முருகன் கோயில் From Wikipedia, the free encyclopedia

இலண்டன் முருகன் கோயில்map
Remove ads

இலண்டன் முருகன் கோயில் என்பது ஐக்கிய இராச்சியத்தில், இலண்டன் பெருநகர்ப் பகுதியின் பிரௌனிங் சாலையில் அமையப் பெற்றுள்ள ஒரு முருகன் கோயில் ஆகும்.[1][2][3] இக்கோயிலின் மூலவர் முருகன் ஆவார். வள்ளி மற்றும் தெய்வானை சமேதராகக் காட்சியளிக்கிறார்.

விரைவான உண்மைகள் இலண்டன் முருகன் கோயில், அமைவிடம் ...
Remove ads
Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 7 மீ. உயரத்தில் (51.5479°N 0.0566°E / 51.5479; 0.0566) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பிரௌனிங் சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது.

Thumb
இலண்டன் முருகன் கோயில்
இலண்டன் முருகன் கோயில்
இலண்டன் முருகன் கோயில் (Greater London)

விபரங்கள்

1975ஆம் ஆண்டு இலண்டனில் ஒரு தொண்டு நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டு, 1984ஆம் வருடம் சிறிய அளவிலான கோயிலாக உருப்பெற்று, 2005ஆம் ஆண்டு 50 அடி உயரமுள்ள இராஜ கோபுரத்துடன் கும்பாபிசேகம் நடைபெற்று, கிழக்கு இலண்டனில் பிரௌனிங் சாலையில் தற்போதைய இடத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறது இக்கோயில்.[4]

திருவிழாக்கள்

கந்த சஷ்டி, தைப்பூசம், கார்த்திகை விளக்கீடு, வைகாசி விசாகம் மற்றும் பங்குனி உத்தரம் ஆகியவை இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களாகும்.

இதர தெய்வங்கள்

வெங்கடேசுவரர், மகாலட்சுமி, புவனேசுவரர், நடராசர், புவனேசுவரி, செய துர்க்கை, தட்சிணாமூர்த்தி, ஆனந்த விநாயகர், வள்ளி மற்றும் தெய்வானை சமேத சுப்பிரமணியர், சண்முகர், ஐயப்பன், குருவாயூரப்பன், ஆஞ்சநேயர், அகத்தியர், அருணகிரிநாதர், சூரியன் , சந்திரன், நவக்கிரகங்கள், பைரவர், இடும்பன் மற்றும் பாபா பாலக் நாத் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[5]

மேற்கோள்கள்

Loading content...

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads