ஜெர்மனிய வானியலாளர் From Wikipedia, the free encyclopedia
இரைனாடு கென்செல் (Reinhard Genzel, பிறப்பு: 24 மார்ச்சு 1952) ஓர் இடாய்ச்சுலாந்திய விண்ணியற்பியலாளர். இவர் 2020 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை ஆந்திரியா கியேசு அவர்களுடனும் உரோசர் பென்ரோசு அவர்களுடனும் சேர்ந்து வென்றார்[1].
இரைனாடு கென்செல் Reinhard Genzel | |
---|---|
பிறப்பு | 24 மார்ச்சு 1952 பாடு ஆம்பூர்கு, மேற்கு செருமனி (இன்றைய செருமனி) |
துறை | வானியற்பியல் |
பணியிடங்கள் | புவிக்கப்பாலான இயற்பியலுக்கான மாக்சு பிளாங்க் கல்விக்கழகம் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) |
கல்வி | |
அறியப்படுவது | அகச்சிவப்பு வானியல் அலை வானியல் |
விருதுகள் |
|
இரைனாடு கென்செல், பிரைபூர்கு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படித்தார், பான் பல்கலைக்கழகத்தில் 1978 இல் முனைவர் பட்டம் பெற்றார் [2]. முனைவர் பட்டம் பெற்ற அதே ஆண்டில் வானலை வானியல் துறைக்கான மாக்கு பிளாங்கு கழகத்தில் வானலை வானியல் ஆய்வுரையைப் படைத்தார்.[2] பின்னர் அமெரிக்காவில் மாசாச்சூசெட்சு மாநிலத்தில் கேம்பிரிட்சு நகரில் உள்ள விண்ணியற்பியலுக்கான ஆஇர்வேடு-சுமித்துசோனிய நடுவத்தில் பணியாற்றினார்.
இரைனாடு கென்செல் அகச்சிவப்பலை வானியல், மில்லிமீட்டருக்குக் கீழான அலை வானியல் ஆகிய துறைகளில் ஆய்வு செய்கின்றார். நிலவுலகில் இருந்தே மதிப்பிட்டறியக்கூடிய வானியல் கருவிகளும் விண்ணில் இருந்து மதிப்பிடக்கூடிய வானியல் கருவிகள் செய்வதிலும் உழைக்கின்றார். இவரும் இவருடைய ஆய்வுக்குழுவினரும் பால்வழி விண்மீன் பேரடையின் நடுவே ஒரு மீப்பெரும் நிறையுடைய கருந்துளை இருப்பதை கண்டுபிடித்தார். இது தனுசு எ* என்னும் விண்மீனருகே இருப்பதாகக் கண்டுபிடித்தனர்.[3] கென்செல் விண்மீன் பேரடை உருவாகுவது பற்றிய கருத்துகளிலும் ஆர்வம் உடையவர். [சான்று தேவை]
சூலை 2018 இல் இரைனாடு கென்செல்லும் அவர் குழுவினரும், தனுசு எ* ஐச் சுற்றும் விண்மீன் S2 ஆனது நொடிக்கு 7,650 கி.மீ விரைவில், அதாவது 2.55% ஒளியின் வேகத்தில், மே 2018 இல் தனுசு எ* இலிருந்து ஏறத்தாழ 120 வானியல் அலகு ≈ 1400 சுவாட்சைலுடு ஆரங்கள் உள்ள நீள்வட்ட முனைக்கு இட்டுச் சென்றது. இது சார்பியல் திசைவேகங்களில் பொதுவான சார்பியலால் கணிக்கப்பட்ட சிவப்பு மாற்றத்தை மதிப்பிட உதவியது, கோட்பாட்டை மேலும் உறுதிப்படுத்தியது[4][5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.