From Wikipedia, the free encyclopedia
இருபாலியம் (Androgyny) என்பது ஆண்பால் பண்புகளும் பெண்பால் பண்புகளும் ஒரு தெளிவற்ற வடிவத்தில் இணைந்த கூட்டாகும். மனிதர்களில் பாலியல் வேறுபாடு, பாலின அடையாளம், பாலின வெளிப்பாடு அல்லது பாலியல் அடையாளம் குறித்து இருபாலியம் வெளிப்படுத்தப்படலாம்.
இருபாலியம் என்பது மனிதர்களில் கலப்பு உயிரியல் பாலியல் பண்புகளைக் குறிக்கும் போது, இது பெரும்பாலும் இடைப்பட்ட பாலின மக்களைக் குறிக்கிறது. தனிநபர்கள் தங்களை ஒரு பாலின அடையாளம் என, ஆண் போன்றும் பெண் போன்றும் குறிக்கலாம். அல்லது இருமம் அல்லாத, விந்தைப் பாலினம், அல்லது பாலினம் நடுநிலைப் பாலினம் எனக் குறிக்கலாம். பாலின வெளிப்பாட்டின் ஒரு வடிவமாக, தனிப்பட்ட சீர்ப்படுத்தல், நடப்பில் அல்லது ஒரு குறிப்பிட்ட அளவு திருநங்கைகளுக்கான இயக்குநீர் சிகிச்சையின் மூலம் இருபாலி நிலையை அடைய முடியும். இருபாலிப் பாலின வெளிப்பாடு வெவ்வேறு கலாச்சாரங்களிலும், வரலாறு முழுவதிலும் புகழ்பெற்று வந்துள்ளது.
1850 ஆம் ஆண்டு முதல் தான் இருபாலி (ஆண்ட்ரோஜினி) ஒரு பெயர்ச்சொல்லாக பயன்பாட்டுக்கு வந்தது. 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தே இது உரிச்சொல்லாக பயன்பட்டு வருகிறது, மேலும் இது பழைய (14 ஆம் நூற்றாண்டு) பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் ( அண். 1550 ) கால ஆண்ட்ரோஜின் என்ற சொல்லின்அடிப்படையில் பெறப்பட்டதாகும். பண்டைக் கிரேக்கம்: ἀνδρόγυνος மொழியில் ஆன்ட்ரோ (andro) என்பது ஆணையும் கினி என்பது (gunē, gyné,) பெண் எறும்பு அல்லது பெண்னைக் குறிக்கும். இலத்தீன்: androgynus. [1] என்ற இலத்தீன் மூலத்திலிருந்து பெறப்பட்ட ஆண்ட்ரோஜின் என்ற பழைய சொல் இன்னும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பொருள்களைக் கொண்ட பெயர்ச்சொல்லாக பயன்பாட்டில் உள்ளது.
மனிதர்களிடையே இருபாலி என்பது- உயிரியல் பாலின பண்புகள், பாலின அடையாளம் அல்லது பாலின வெளிப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் வெளிப்படுத்தப்படுகிறது - ஆரம்பகால வரலாற்றிலிருந்தும் உலக கலாச்சாரங்களிலிருந்தும் இதற்கான சான்றளிக்கப்படுகிறது. பண்டைய சுமேரியாவில், இருபாலிகள் மற்றும் இருபாலுயிரி ஆண்கள் இன்னனாவின் வழிபாட்டில் பெரிதும் ஈடுபட்டனர். [2] :157–158 இனான்னாவின் கோவில்களில் காலா என்று அழைக்கப்படும் பாதிரியார்கள் குழு பணியாற்றியது. அங்கு அவர்கள் இரங்கற்பாக்கள், புலம்பலையும் செய்தனர். :285 காலாக்கள் பெண் பெயர்களைச் சூட்டிக் கொண்டனர். சுமேரிய மொழியைப் பேச்சுவழக்கில் பேசினார். இந்த பணி பாரம்பரியமாக பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. மேலும் காலாக்கள் தற்பால்சேர்க்கையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. [3] பிற்கால மெசொப்பொத்தேமிய கலாச்சாரங்களில், குர்காரே மற்றும் அஸ்ஸினு ஆகியோர் இஷ்தர் ( கிழக்கு செமிடிக் மொழியில் இன்னன்னாவிற்குச் சமமான) தெய்வத்தின் ஊழியர்களாக இருந்தனர், அவர்கள் பெண் ஆடைகளை அணிந்து இஷ்தரின் கோவில்களில் போர் நடனங்களை நிகழ்த்தினர். பல அக்காடியன் பழமொழிகள் அவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறுகின்றன. மெசொப்பொத்தேமியா குறித்த தனது எழுத்துக்களுக்காக அறியப்பட்ட மானுடவியலாளர் க்வென்டோலின் லீக், இந்த நபர்களை சமகால இந்திய ஹிஜ்ராக்களுடன் ஒப்பிட்டுள்ளார். :158–163 ஒரு அக்காடியன் பாடலில், இஷ்தர் தெய்வம் ஆண்களை பெண்களாக மாற்றுவதாக விவரிக்கப்பட்டுள்ளது.
ஹெர்மாஃப்ரோடிடஸ் மற்றும் சல்மாசிஸ், என்ற பண்டைய கிரேக்க புராணத்தின் இரண்டு தெய்வங்களும் அழியாதவையாக இணைந்தன - மேற்கத்திய கலாச்சாரத்தில் பல நூற்றாண்டுகளாகப் இந்தக் குறிப்பு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இருபாலியம் பற்றியும் தற்பால்சேர்க்கை பற்றியும் பிளேட்டோவின் சிம்போசியத்தில் அரிஸ்டோபனெஸ் என்பவர் பார்வையாளர்களிடம் சொல்லும் ஒரு கட்டுக்கதையில் காணப்படுகின்றன. [4] இவர்கள் இருவரின் உடல்கள் பின்புறம் இணைக்கப்பட்டு ஒட்டியபடி இருந்தனர். இவர்கள் கோள வடிவத்தில் உருண்டு சென்றனர் என இந்தத் தொன்மவியல் கதைகள் கூறுகின்றன. மேலும் பூமியில் மூன்று பாலினங்கள் இருந்தன: சூரியனில் இருந்து இறங்கிய ஆண், பூமியிலிருந்து தோன்றிய பெண் சந்திரனில் இருந்து வந்த ஆண்-பெண் மக்கள் (இரு இணைந்த உடல்கள்).எனவும் இவை குறிப்பிடுகின்றன. இந்த மூன்றாம் பிரிவு இருபாலிகளைக் குறிக்கிறது. இந்த கோளவடிவில் இணைந்த மக்கள் தெய்வங்களைக் கைப்பற்ற முயற்சித்தனர். ஆனால் தோல்வியுற்றனர். ஜீயஸ் பின்னர் அவற்றை பாதியாக வெட்ட முடிவு செய்தார், பின்னர் வெட்டப்பட்ட மேற்பரப்புகளை அப்பல்லோ சரிசெய்தார், மீண்டும் கடவுள்களை மீறக்கூடாது என்பதற்கான நினைவூட்டலாக தொப்புளை விட்டுவிட்டார். அவர்கள் அவ்வாறு செய்தால், அவர் ஒரு காலில் சுற்றித் திரிவதற்காக அவற்றை மீண்டும் இரண்டாகப் பிரிப்பார். ஓரினச்சேர்க்கை வெட்கக்கேடானது அல்ல என்று பிளேட்டோ குறிப்பிடுகிறார். இருபாலிக்கு முன்னர் எழுதப்பட்ட குறிப்புகளில் இதுவும் ஒரு சான்றாகும். ஆண்ட்ரோஜினியின் பிற ஆரம்ப குறிப்புகளில் வானியல் குறிப்புகளும் அடங்கும், வானியலில் இருபாலி என்பது சில நேரங்களில் சூடாகவும் சில நேரங்களில் குளிராகவும் இருக்கும் கிரகங்களுக்கு வழங்கப்பட்ட பெயர். [5]
அலெக்ஸாண்டிரியாவின் பிலோ போன்ற தத்துவஞானிகளும், ஆரம்பகால கிறிஸ்தவ தலைவர்களான ஆரிஜென் மற்றும் நைசாவின் கிரிகோரி போன்றவர்களும் இருபாலி குறித்த கருத்தை "மனிதர்களின் அசல் மற்றும் சரியான நிலை" என்று தொடர்ந்து ஊக்குவித்தனர்.[6] இடைக்கால ஐரோப்பாவில், இருபாலியம் என்ற கருத்து கிறிஸ்தவ இறையியல் விவாதம் மற்றும் ரசவாதக் கோட்பாடு இரண்டிலும் முக்கிய பங்கு வகித்தது. தமாஸ்கஸ் நகர யோவான் மற்றும் ஜான் ஸ்கொட்டஸ் எரியுஜெனா போன்ற செல்வாக்கு மிக்க இறையியலாளர்கள் ஆரம்பகால திருச்சபைத் தந்தையர்களால் முன்மொழியப்பட்ட, வீழ்ச்சிக்கு முந்தைய இருபாலியத்தை தொடர்ந்து ஊக்குவித்தனர், அதே நேரத்தில் மற்ற மதகுருமார்கள் சமகால "ஹெர்மாஃப்ரோடைட்டுகளின்" சரியான பார்வையையும் சிகிச்சையையும் விவரித்து விவாதித்தனர்.
பண்டைய மற்றும் இடைக்கால உலகங்களில், இருபாலிகள், திருநங்கைகளைக் குறிக்க காடூசியஸ் என்ற சின்னம் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. பண்டைய கிரேக்க-ரோமானிய புராணங்களில் உருமாறும் சக்தி கொண்ட ஒரு மந்திரக்கோலாக இது குறிப்பிடப்படுகிறது..
காடுசியஸ் டைரேசியஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது. மேலும் பாம்புகள் இணச்சேர்க்கையின் போது இவர் அவற்றை அடித்ததால் கிடைத்த தண்டனையாக ஜூனோ கடவுளால் ஒரு பெண்ணாக அவர் மாற்றப்பட்டதைக் குறிக்கிறது.
காடூசியஸ் பின்னர் ஹெர்ம்ஸ்/ புதன் கோளுக்கான வானியல் குறியீடாகவும் ஹெர்மாஃப்ரோடைட்டுக்கான தாவரவியல் அடையாளத்திற்கும் அடிப்படையாக கொண்டு செல்லப்பட்டது. இந்த அடையாளம் இப்போது சில சமயங்களில் திருநங்கைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
இடைக்கால மற்றும் நவீன காலத்திற்கு முந்தைய காலத்தில் மற்றொரு பொதுவான இருபாலரது அம்சமும் இணைந்த ரெபிஸ் என்ற சின்னம் பயன்படுத்தப்பட்டது இது பெரும்பாலும் சூரியஒளி மற்றும் சந்திர கருக்கள் கொண்டு தோன்றிய ஆண் மற்றும் பெண் உருவம். ஆகும். இன்னொரு சின்னம் சன் கிராஸ் என்று அழைக்கப்படுகிறது, இது ஆணுக்கு சிலுவையையும் பெண்ணுக்கு வட்டக்குறியீட்டை யும் ஒன்றிணைத்த சின்னமாகும்.. [7] இந்த அடையாளம் இப்போது பூமிக் கோளின் வானியல் சின்னமாகும். [8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.