இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
இரா. செழியன் (28 ஏப்ரல் 1923 - 6 சூன் 2017) அரசியல்வாதி, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், எழுத்தாளர் எனப் பல தகுதிகளைக் கொண்டவர். பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டம். திருக்கண்ணபுரம் சனநாயக உரிமைகளைப் பேணிக் காப்பதிலும் ஊழலுக்கு எதிரான முயற்சிகளிலும் ஈடுபட்டவர். மறைந்த நாவலர் நெடுஞ்செழியனின் தம்பி ஆவார். சிறுகதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார்.
இரா. செழியன் | |
---|---|
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் (கும்பகோணம் மக்களவைத் தொகுதி) | |
பதவியில் 1967–1977 | |
முன்னையவர் | சி. ஆர். பட்டாபிராமன் |
பின்னவர் | தொகுதி கலைக்கப்பட்டது |
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் (பெரம்பலூர் மக்களவைத் தொகுதி) | |
பதவியில் 1962–1967 | |
பிரதமர் | ஜவகர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி |
முன்னையவர் | எம். பழனியாண்டி |
பின்னவர் | ஏ. துரையரசு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 28 ஏப்ரல் 1923 திருக்கண்ணபுரம், நாகப்பட்டினம் மாவட்டம் |
இறப்பு | 6 சூன் 2017 94) வேலூர் | (அகவை
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | ச. பிரேமா |
உறவுகள் | இரா. நெடுஞ்செழியன் |
தொழில் | அரசியலாளர் |
சமயம் | தமிழ் |
இவர் ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும், 4 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் இரா. நெடுஞ்செழியனின் இளைய சகோதரர் ஆவார்.[1]
பட்டுக்கோட்டையில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.சி.ஆனர்ஸ (கணக்கு) [2]
மாணவர் காலத்திலேயே திராவிட இயக்கத்தில் சேர்ந்தார். திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டபோது அண்ணாதுரையுடன் நெருக்கமாகப் பழகினார். அவரைத் தம் தலைவராகவும் வழிகாட்டியாகவும் கொண்டு அரசியல் வாழ்வை நடத்தினார். 1977 இல் இரா. நெடுஞ்செழியன், இராசாராம் ஆகியோர் உடன் சேர்ந்து 'மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்' எனும் கட்சியைத் உருவாக்கினார்.
இரா. செழியனுக்கும் சென்னை அரசு சம்பளக்கணக்கு துணை அலுவலர் என். சண்முகசுந்தரம் மகள் பிரேமாவிற்கும் கா. ந. அண்ணாதுரை தலைமையில் 26-8-1959ஆம் நாள் சென்னை பூந்தமல்லி சாலையிலிருந்த 495ஆம் கதவெண்கொண்ட "ஆற்காடு வில்லா"வில் திருமணம் நடந்தது.[8]
வேலூரில் தங்கியிருந்த இரா. செழியன் உடல் நலக் குறைவால் தமது 95வது அகவையில், 2017 சூன் 6 அன்று காலமானார்.[9]
Seamless Wikipedia browsing. On steroids.