From Wikipedia, the free encyclopedia
இரா. சாரங்கபாணி (செப்டம்பர் 18, 1925 - ஆகத்து 23, 2010) தமிழ்ப் பேராசிரியரும், தமிழறிஞரும் ஆவார். காரைக்குடி அழகப்பா கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் தமிழ்ப்பேராசிரியராகவும், ஆய்வறிஞராகவும் பணிபுரிந்தவர்.
இரா.சாரங்கபாணியார் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள தேவங்குடி ஊரில் பொ. இராசகோபால் மழவராயர், சனமாலிகை அம்மையார் ஆகியோருக்குப் பிறந்தவர். தேவங்குடியில் தொடக்கக் கல்வியையும், புவனகிரி கழக உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும், சிதம்பரம் பச்சையப்பன் பள்ளியில் ஆறாம்படிவம் வரையிலும் பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயின்று 1947 இல் புலவர் பட்டமும், 1949 இல் பி.ஓ.எல் பட்டமும் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1955 இல் முதுகலைப் பட்டமும், 1962 இல் எம்.லிட் பட்டமும், 1969 இல் முனைவர் பட்டமும் பெற்றார்.
சாரங்கபாணியாருக்கு ஆசிரியர்களாக இருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் கா. சுப்பிரமணிய பிள்ளை, தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, அ. சிதம்பரநாதன் செட்டியார், ஆ. பூவராகம் பிள்ளை, மு.அருணாசலம் பிள்ளை, க.வெள்ளைவாரணனார், ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை, வ. சுப. மாணிக்கம் ஆகியோராவர்.
1949 இல் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்த் துறையில் விரிவுரையாளராகச் செர்ந்தார். பின்னர் பேராசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் ஆனார். 1979 முதல் மூன்றாண்டுகள் உயராய்வு நடுவத்தின் இயக்குநராகவும் இருந்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.