இராணி ஜெத்மலானி
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
இராணி ஜெத்மலானி மகளிர் உரிமைகளுக்காகப் போராடிய செயற்பாட்டாளரும் இந்திய உச்ச நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியவரும் ஆவார். இந்தியாவின் பிரபல வழக்கறிஞரான ராம் ஜெத்மலானியின் மகளாவார். மும்பையில் வசித்துவந்த இவர் வரதட்சணைக் கொடுமைகளுக்கும் மணமகள்கள் எரிக்கப்படுவதற்கும் எதிராக போராடிய ஒரு சமூக சேவகராகவும் அறியப்பட்டார். 1977ஆம் ஆண்டில் ஜனதா கட்சியில் உறுப்பினராக இருந்தவர்[1]. மூன்று முறை மக்களவைக்குப் போட்டியிட்டபோதும் வெற்றி பெறவில்லை. தமது வழக்கறிஞர் பணியைத் தொடங்கும் முன்னர் மும்பையின் கிசன்சந்த் செல்லாராம் கல்லூரியில் சட்ட பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்[1].
குடும்பம்
முன்னாள் இந்திய சட்ட அமைச்சரும் பிரபல உச்சநீதிமன்ற வழக்கறிஞருமாகிய ராம் ஜெத்மலானிக்கும் துர்கா ஜெத்மலானிக்கும் பிறந்தவர். ராணி ஜெத்மலானியின் சகோதரி ஷோபா & சகோதரர்கள் மகேஷ், ஜானக் ஆவர். பல ஆண்டுகளுக்கு முன்னரே தத்து எடுத்து வளர்த்த மகனும் ஓர் வழக்கறிஞர் ஆவார்.
செயற்பாடு
மகளிர் உரிமைகள் குறித்து மிகவும் துடுப்பான செயற்பாட்டாளராக விளங்கினார். மகளிருக்கு எதிரான தீயச்செயல்களுக்கு எதிராக மகிளா தக்சத சமிதி என்ற அமைப்பை நிறுவினார். கமிட்2சேஞ்ச் என்ற அமைப்பின் வாரியக்குழு உறுப்பினராக வரதட்சணை கொடுமைகளுக்கு எதிராகப் போராடினார். குற்ற விசாரணைகளில் பொதுநல வழக்குகள் தொடர்ந்து ஓர் புதிய போக்கை உருவாக்கினார். பெண்களுக்கு எதிரான பழமையான பழக்க வழக்கங்கள் குறித்து ஆயவும் எதிர்க்கவும் WARLAW (மகளிர் செயல் ஆய்வு மற்றும் மகளிருக்கான சட்ட செயல்) என்ற அமைப்பை இணைநிறுவனராக உருவாக்கினார். இந்த அமைப்பு சட்டங்கள் ஆக்கமும் செயற்பாடும் பாலின நடுநிலையாக அமையவும் பாடுபடுகிறது.[1]
மறைவு
1995ஆம் ஆண்டு கல்லீரல் மாற்று சிகிட்சை மேற்கொண்ட இராணி 2002ஆம் ஆண்டில் சிறுநீரக மாற்றமைப்பு சிகிட்சையும் மேற்கொண்டுள்ளார். தொடர்ந்த சிறுநீரக செயலிழப்பால் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி இராணி ஜெத்மலானி காலமானார்.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.