இராசராட்டிரப் பாண்டியர்கள் (பொ.பி. 436-463) என்பவர்கள் களப்பிரர்கள் அரசர்களின் ஆதிக்கம் தமிழகத்தில் இருந்த போது பாண்டியர் மரபிலிருந்து இலங்கைக்கு சென்று அரசாண்ட பாண்டிய வேந்தர்களாவர். இவர்களைப் பற்றி இலங்கையின் வரலாற்று நூலான சூல வம்சம் குறிப்பிடுகிறது. இவர்கள் ஆண்ட பகுதியின் பெயர் இராசராட்டிரம் என்பதால் இவர்கள் வரலாற்று ஆசிரியர்களால் இராசராட்டிரப் பாண்டியர்கள் எனப்பட்டனர். முதலில் இவ்வரசை நிறுவிய பாண்டு என்னும் பாண்டிய மன்னன் அதற்கு முன் அநுராதபுரத்தை ஆண்ட மித்தசேனன் என்னும் மன்னனை தோற்கடித்து அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இராசராட்டிர ஆட்சியை தொடங்கி வைத்தான். இவனுக்குப் பிறகு ஐந்து பாண்டியர்கள் வட இலங்கையை ஆண்டார்கள். தாதுசேனன் என்ற இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்தைச் சேர்ந்தவன் ஆறு இராசராட்டிர பாண்டியர் மன்னர் ஆட்சியிலும் இராசராட்டிரம் மீது படையெடுத்தான். அனைத்து படையெடுப்பிலும் பாண்டிய மன்னர்களுக்கே வெற்றி கிட்டினாலும் திரிதரன் மற்றும் தாட்டியன் போன்ற இராசராட்டிரப் பாண்டியர்கள் இவனால் கொல்லப்பட்டனர். முடிவாக ஆறாம் இராசராட்டிரப் பாண்டிய மன்னனான பிட்டியன் ஆட்சியில் அவனைக்கொன்று இலங்கையைக் கைப்பற்றினான். அதிலிருந்து இராசராடிரப் பாண்டியர் ஆட்சி முடிவு பெற்றது.
இராசராட்டிரம் | |
---|---|
வம்சம் | பாண்டியர் |
நாடு | இராசராட்டிரம் |
எல்லை | மகாவலி கங்கை ஆறு (தெற்கெல்லை) மற்ற திசைகளில் கடல் |
தலைநகரம் | அநுராதபுரம் |
இராசராட்டிரப் பாண்டியர்களின் பட்டியல் | |
பாண்டு (பாண்டியன்) | பொ.பி. 436 - 441 |
பரிந்தன் | பொ.பி. 441 - 444 |
இளம் பரிந்தன் | பொ.பி. 444 - 460 |
திரிதரன் | பொ.பி. 460 |
தாட்டியன் | பொ.பி. 460 - 463 |
பிட்டியன் | பொ.பி. 463 |
உச்ச நிலை
உரோகணம் நாட்டிலுள்ள கதிர்காமம் என்ற முருகன் படைவீட்டில் தாட்டியன் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அதனால் இவனது ஆட்சியில் இராசராட்டிரம் அரசு இலங்கை முழுதும் பரவியிருந்ததை அறிய முடிகிறது. அக்கல்வெட்டின் படி இவன் புத்த சமயத்தை சேர்ந்தவன் என்றும் கிரிவிகாரை என்னும் புத்தமடத்திற்கு தானம் அளித்தான் என்றும் உரோகணம் நாட்டில் சில காலம் தங்கியிருந்தான் எனவும் தெரிகிறது.[1]
மூலநூல்
- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
- சூல வம்சம்
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.