கொழும்பு சர்வதேச விமான நிலையம், இரத்மலானை (Colombo International Airport, Ratmalana, කොළඹ ජාත්යන්තර ගුවන්තොටුපළ, රත්මලාන) இலங்கை யின் பன்னாட்டு வானூர்தி சேவைகளுக்காகவும் மற்றும் இராணுவத் தேவைகளுக்காகவும் பாவிக்கப்படும் ஒரு வானூர்தி நிலையம் ஆகும். இது முன்னர் இலங்கையின் ஒரேயொரு பன்னாட்டு விமான நிலையமாக இருந்தது. இவ்வானூர்தி நிலையம் இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகரான இரத்மலானையில் அமைந்திருக்கிறது.
கொழும்பு பன்னாட்டு வானூர்தி நிலையம், இரத்மலானை | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது / இராணுவம் | ||||||||||
உரிமையாளர் | இலங்கை அரசு | ||||||||||
இயக்குனர் | AASL[1] | ||||||||||
சேவை புரிவது | கொழும்பு | ||||||||||
அமைவிடம் | இரத்மலானை, இலங்கை | ||||||||||
மையம் |
| ||||||||||
உயரம் AMSL | 16 ft / 5 m | ||||||||||
ஆள்கூறுகள் | 6°49′19.18″N 79°53′10.35″E | ||||||||||
இணையத்தளம் | Official website | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் (2016) | |||||||||||
|
1934ஆம் ஆண்டில் அன்றைய இலங்கை அரசாங்க சபை இரத்மலானையில் வானூர்தி நிலையம் கட்டுவதற்கு முடிவெடுத்தது. நவம்பர் 27, 1935 அன்று முதலாவது வானூர்தி மதராசில் இருந்து வந்திறங்கியது.
இரண்டாம் உலகப் போரின் போது இது பிரித்தானியாவின் ரோயல் வான்படையினரின் தளமாகப் பயன்பட்டது. ஜப்பானிய வானூர்திகளுக்கெதிரான பல தாக்குதல்களுக்கு இவ்விமான நிலையம் பயன்பட்டது. மேற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகரான பேர்த்தில் இருந்து இடைத்தங்கல் இல்லாமல் வானூர்திகள் இங்கு வந்து போயின. போரின் பின்னரும் பேர்த்தில் இருந்தான பயணம் நடைபெற்று வந்தது. 1946 சூன் 1 இல் இந்நிலையம் மீண்டும் பொது மக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது.[6]
இதன் ஓடுபாதை 1833 மீட்டர் நீளமானது.
விபத்துகளும் நிகழ்வுகளும்
- 1961 நவம்பர் 15: இந்தியன் ஏர்லைன்சின் விக்கர்ஸ் விஸ்கவுன்ட் விடி-டிஐஎச் இணை விமானி தரையிறங்கும் போது தரையிறங்கு அமைப்பைத் திரும்பப் பெற்றபோது வானூர்தி பொருளாதாரப் பழுதுபார்ப்புக்கு அப்பால் சேதமடைந்தது.[7]
- 1978 செப்டம்பர் 7 - ஏர் சிலோன் நிறுவனத்தின் ஓக்கர் சிட்லி எச்.எஸ் 748 வானூர்தி இரத்மலானை வானூர்தி நிலையத்தில் தரித்து நிற்கும் போது, வானூர்தி நிலைய சரக்கு ஏற்றும் துறையில் குண்டு வெடித்ததில், வானூர்தி தீப்பிடித்து சேதமடைந்தது.[8]
- 1998 செப்டம்பர் 29 - பலாலி விமான நிலையத்தில் இருந்து இரத்மலானை நோக்கிப் புறப்பட்ட அன்டோனொவ் ஏஎன்-ஆர்வி லயன் ஏர் 602 பயணிகள் வானூர்தி, வட-மேற்குக் கரையில் கடலில் வீழ்ந்தது. அதில் பயணம் செய்த அனைத்து 55 பயணிகளும், பணியாளர்களும் கொல்லப்பட்டனர்.
- 2014 திசம்பர் 11 - பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து புறப்பட்ட அன்டனோவ் ஏஎன்-32 படைத்துறை விமானம் அத்துருகிரிய என்ற இடத்தில் வீழ்ந்தது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.