குருதி வகை

From Wikipedia, the free encyclopedia

குருதி வகை

இரத்தத்தில் கலந்திருக்கும் சிகப்பு இரத்த அணுக்களின்(RBCs) Mமேற்பரப்பில் இருக்கும் அல்லது இல்லாதிருக்கும் மரபு உடற் காப்பு ஊக்கிகளை வைத்துக் குருதி வகைப்படுத்தப்படுகிறது.(இதனை, இரத்த பிரிவு என்றும் அழைக்கலாம்) இந்த உடற்காப்பு ஊக்கிகள் , மாவு சத்தாக, இரத்த சர்க்கரை புரதமாக, அல்லது க்ளைகோ லிபிடாக இருக்கலாம். இது ரத்த பிரிவின் அடிப்படையில் ஏற்படக்கூடியது. பல்வேறு திசுக்களில் இருக்கும் வேறு வகையான உயிரணுக்களின் மேற்பரப்பிலும் சில உடற்காப்பு ஊக்கிகள் காணப்படுகின்றன. இரத்த செல்களின் மேற்பரப்பில் காணப்படும் உடற்காப்பு ஊக்கிகளில் பெரும்பாலனவை இரட்டை மரபணுவிலிருந்து (அல்லது நெருக்கமான தொடர்புடைய மரபணுவில் இருந்து)உற்பத்தி ஆகின்றன. இவைகள் அனைத்தும் சேர்ந்து ரத்த பிரிவு அமைப்பை உருவாக்குகின்றன.[1]

சிகப்பு இரத்த அணுக்களில் இருக்கும் ABO இரத்த பிரிவு உடற்காப்பு ஊக்க்கிகள் மூலம் கண்டுபிடிக்கப்படும் இரத்தவகை(அல்லது இரத்த பிரிவு)

இரத்த வகை மரபு வழியாக பெறப்பட்டதாகும்.இது பெற்றோர் இருவரிடமிருந்தும் பெறப்படுகிறது. இன்டர்நேஷனல் சொசைடி ஆப் ப்ளட் ட்ரான்ஸ்ப்யூஷன் (ISBT) மொத்தம் 30 மனித இரத்த பிரிவு அமைப்புகளை அங்கீகரித்து உள்ளது.[2]

பல கர்ப்பிணிப் பெண்கள் வேறுவகையான(தன்வகை இரத்தமல்லாத) இரத்த வகையைக் கொண்ட கருவை சுமக்கிறார்கள். இதனால் தாய்மார்களுக்குள் கருவின் RBC க்களை எதிர்த்து போராடக்கூடிய உடற்காப்பு மூலங்கள் உருவாகின்றன. சில சமயங்களில் இந்த தாய்மார்களிடத்தில் உருவாகும் ஒரு சிறிய தடுப்பாற்றல் புரதமானIgG,கருக்கொடிக்கு சென்று கரு RBCக்களை அழித்து இரத்தச் சிகப்பணு சிதைவை உண்டாக்குகின்றது. இதனால்இரத்தச் சிகப்பணு சிதைவு நோய் பிறந்த குழந்தைக்கும் ஏற்பட நேரிடுகின்றது. இந்த நோய் கருவில் இரத்த அணு குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் ஏற்படுகிறது, இது லேசான வீதத்தில் இருந்து மிக கடுமையான வீதம் வரை வேறுபட்டு இருக்கக்கூடுகிறது.[3]

ஊநீரியல்

தன்னுடைய இரத்த வகை உடற்காப்பு ஊக்கிகள் அன்றி மற்ற வகைகளை ஒருவன் கொண்டிருந்தால், அப்போது அவனது தடுப்பாற்றல் அமைப்பு, உடற் காப்பு மூலங்களை உற்பத்தி செய்கின்றது. இது தனித்து அந்த குறிப்பிட்ட இரத்த வகை உடற் காப்பு ஊக்கியுடன் இணைந்து, அந்த உடற்காப்பு ஊக்கிக்கு எதிராக தடுப்பாற்றல் சக்தியை உருவாக்குகிறது. அந்த தனிப்பட்ட நபரும் அந்த குறிப்பிட்ட இரத்த வகை உடற்காப்பு ஊக்கிக்கு உணர்ச்சிவயப்படுகிறார். உடற்காப்பு ஊக்கிகளின் மேற்பரப்பில் ஏற்றப்பட்டிருக்கும் சிகப்பு இரத்த அணுக்களுடன் (அல்லது மற்ற திசு அணுக்களுடன்) இணைந்து இந்த உடற்காப்பு மூலங்கள், தடுப்பாற்றல் அமைப்பில் இருக்கக்கூடிய சில பொருட்களைக்கொண்டு அணுக்களை அழிக்க நேரிடுகிறது. இந்த IgM உடற்காப்பு மூலங்கள் ஏற்றப்பட்ட அணுக்களுடன் இணையும் போது, ஏற்றப்பட்ட அணுக்கள் தடிமன் ஆகின்றன. இரத்தம் ஏற்றும்போது உடல் ஏற்றுக்கொள்ளும் வகை ஏற்றப்படுகிறதா என்று கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும். உறுப்புகள் மாற்றப்படும் போது ஏற்ற திசுக்கள் இருக்கின்றதா என்று கவனிக்க வேண்டும். சிறிய உடற்காப்பு ஊக்கிகள் அல்லது வலுவிழந்த உடற்காப்பு மூலங்களினால், இரத்தம் ஏற்றப்படும் போது ஏற்படும் எதிர்விளைவுகள் மிக குறைவாகவே இருக்கின்றன. ஆனால் இரத்தம் ஏற்றுக்கொள்ளாத போது, தடுப்பாற்றலுக்கு தீவிரமான கேடுகள் ஏற்பட்டு, பெருமளவில் RBC சிதைவு, குறைவான இரத்த அழுத்தம், சில நேரங்களில் இறப்பு கூட ஏற்படலாம்.

ABO மற்றும் Rh இரத்த பிரிவுகள்

Thumb
சோதனைக் கூடங்களில் இரத்த அணுக்களின் திரட்சி உடற்காப்பு மூலங்களுடன் சேர்த்து இரத்த வகையை கண்டுபிடிக்க சோதனை செய்யப்படுகிறது.மருத்துவத்தில் இந்த வகை திரட்சி மிக முக்கியாமானதாகவும் அரிதான ஒன்றாகவும் கருதப்பட்டது.[4]

ABO இரத்த பிரிவு அமைப்பில் இருக்கும் RBC மேற்பரப்பு உடற்காப்பு ஊக்கிகளில் பொதுவாக இருக்கும் A-வுக்கு எதிரானவை ("ஆண்டி-A"), B-க்கு எதிரானவை ("ஆண்டி-B") போன்ற IgM உடற்காப்பு மூலங்கள், இயற்கையாக உற்பத்தி ஆகின்றன. இந்த உடற்காப்பு மூலங்கள் மற்ற வகை உடற்காப்பு மூலங்கள் போல் குழந்தைப்பருவத்திலேயே உருவாகின்றன. உடற்காப்பு ஊக்கிகள் A மற்றும் B- யை போல் மற்ற உடற்காப்பு ஊக்கிகளும் இயற்கையில் இருந்து அதாவது உணவு பொருட்கள், செடிகள் மற்றும் பாக்டீரியாவில் இருந்து உற்பத்தி ஆகின்றன என்று கோட்பாடுகள் கூறுகின்றன. குழந்தை பிறந்தவுடன் அதனது குடல், A அல்லது B உடற்காப்பு ஊக்கிகளை கொண்டுள்ள சாதாரண செடிவகையுடன் கூடி, சிகப்பு இரத்த அணுக்களிடம் இல்லாத உடற்காப்பு மூலங்களை, இந்த உடற்காப்பு ஊக்கிகளுக்கு ஏற்றவாறு உற்பத்தி செய்கின்றது. A இரத்த வகை உள்ளவரிடம் ஆண்டி-B உடற்காப்பு ஊக்கிகளும், B இரத்த வகை உள்ளவரிடம் ஆண்டி-A உடற்காப்பு ஊக்கிகள் இருக்கின்றன. O இரத்த வகை உள்ளவரிடம் இரு வகை அதாவது A மற்றும் B உடற்காப்பு ஊக்கிகளும், AB இரத்த வகையினரிடம் இரண்டுமே அல்லது ஏதேனுமோ இருக்கின்றன. இந்த உடற்காப்பு மூலங்கள் இயற்கையாகவே உற்பத்தி ஆவதினாலும் இவற்றை பற்றி நமக்கு முன்னதாகவே தெரிந்து கொள்ள முடியும் என்பதினால், இரத்தத்தை ஏற்றும் போது அதனின் இரத்த வகையை கண்டறிந்து ஏற்றுவது நல்லது. இயற்கையாக உண்டாகும் இந்த உடற்காப்பு மூலங்கள் IgM வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றால் இரத்த குழாய்களுக்குள் இருக்கும் சிகப்பு இரத்த அணுக்களை உறைய வைத்து அவற்றை அழிக்கவும் முடிகிறது. இதனால் இறப்புகளும் நேரிடலாம். தடுப்பாற்றலை புகுத்துவதன் மூலம் உற்பத்தியாகும் சிகப்பு இரத்த அணு உடற்காப்பு மூலங்கள் ஏற்கனவே இரத்தம் ஏற்றப்பட்டிருக்கும் போதும் கற்பம் தரிக்கும் போதும் மட்டும் உருவாகுவதினால், வேறு இரத்த பிரிவுகள் இருக்கிறதா என்று நாம் கண்டறிய தேவையில்லை. சிகப்பு இரத்த அணு ஏற்றப்படவேண்டும் என்று இருக்கும் நோயாளிகள் ஆண்டிபாடி ஸ்க்ரீன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இத சோதனை மூலம், தனிப்பட்டு விளங்கும் சிகப்பு இரத்த அணு உடற்காப்பு மூலங்கள் கண்டறியப்படுகின்றன.

ஒரு மனிதனின் இரத்த வகையை அறிய, RhD உடற்காப்பு ஊக்கியும் மிக முக்கியமான ஒன்று. ரீசஸ் அமைப்பில் மற்ற உடற் காப்பு மூலங்களை சார்ந்து அல்லாமல் RhD உடற்காப்பு மூலம் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை பொருத்து இரத்த வகைகள் பாசிடிவ் அல்லது நெகடிவ் என்று குறிக்கப்படுகின்றன. ஆண்டி-எ, ஆண்டி-B உடற்காப்பு மூலங்களை போல் ஆண்டி-RhD இயற்கையாக உண்டாவதில்லை. RhD உடற்காப்பு ஊக்கி எதிர்ப்பாற்றல் ஊக்கி பண்புகளை கொண்டுள்ளதால், அவற்றிற்கு குறுக்கிணைப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும். RhD உடற்காப்பு ஊக்கியிடம் வெளிப்பட்டு இருக்கும் போது, RhD நெகடிவ் வகை மனிதனுள், ஆண்டி-RhD உருவாகுவதில்லை.( இரத்தம் ஏற்றப்படும் போது அல்லது கரு தரித்திருக்கும் போது) ஒரு முறை ஒருவரிடம் RhD உடற்காப்பு ஊக்கிகள் வெளிப்பட்டு இருந்தாலே, அவன் அல்லது அவளது இரத்தம் RhD IgG உடற்காப்பு மூலங்களை கொள்ள நேரிடுகிறது. இதனால், RhD பாசிடிவ் RBC-க்கள் இணைக்கப்பட்டு கருக்குடை வரை செல்ல நேரிடுகிறது.[5]

இரத்த பிரிவு அமைப்புகள்

இன்டர்நேஷனல் சொசைடி ஆப் ப்ளட் ட்ரான்ஸ்ப்யூஷன் (ISBT)என்றசர்வதேசஅமைப்பு இன்று வரை மொத்தம் 30 மனித இரத்த பிரிவு அமைப்புகளைஅங்கீகரித்து உள்ளது.[2] ஒரு முழுமையான இரத்த வகையில் எல்லா அதாவது 30 பொருட்களும் RBC-க்களின் மேற்பரப்பில் இருக்கும். பல இரத்த பிரிவு உடற்காப்பு ஊக்கிகளில் சேரக்கூடியனவாக ஒரு மனிதனின் இரத்த வகை இருக்கிறது. இதுவரை 30 இரத்த பிரிவுகளில் 600 க்கும் மேற்பட்ட வெவ்வேறான இரத்த பிரிவு உடற்காப்பு ஊக்கிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.[6] ஆனால் இவற்றில் பல, மிகவும் அரிய வகையாக இருக்கின்றன. மேலும் ஒரு குறிப்பிட்ட சமுதாய வாழ் மக்களிடம் மட்டும் காணப்படுகின்றன.

ஒருவனது வாழ்க்கை காலம் முழுவதிலும் அவன் பெரும்பாலும் ஒரே இரத்த வகையுடன் தான் உயிர் வாழ்கிறான், ஆனால் சில நேரங்களில், புதிய உடற்காப்பு ஊக்கிகளின் சேர்கையால் அல்லது இருக்கும் ஊக்கிகளின் பண்பு நலன்கள் குறைவதினால் அவனது இரத்த வகை மாற்றம் அடைகின்றது. இது, நோய் தாக்கம், புற்று, அல்லது தன்னுடல் தாங்கு திறன் நோய்மூலம் நடைபெறலாம்.[7][8][9][10] இந்த அறிய நிகழ்வை, ஆஸ்திரேலிய குடிமகனான டெமி-லீ ப்ரேன்னன் மூலமாக நம்மால் காண முடிந்தது. அவரது, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு ப்ரேன்னன்னின் இரத்த வகை மாறி இருந்தது.[11][12] எலும்பு மச்சை மாற்றறுவை மூலமாக கூட மிக எளிதில் இரத்த வகை மாறலாம். இந்த எலும்புமச்சை மாற்றறுவை வெள்ளணு புற்று, லிம்போமாஸ் நோயாளிகளுக்கு செய்யபடுகின்றது. ஒரு மனிதனுக்கு வேறொரு ABO வகை கொண்டிருக்கிற மற்றொருவர் இரத்தம் அளிக்கும் போது, (eg, A வகை நோயாளி O வகை எலும்பு மச்சையை பெற்றுக்கொள்கிறார்), இரத்தம் ஏற்றப்படுபவரின் இரத்த வகை இரத்தம் கொடுப்பவரின் வகையாக நாளடைவில் மாறுகிறது.

சில நோய்களின் பிறப்பால் சிலரது இரத்த வகை மாற்றம் அடைகின்றது; எடுத்துக்காட்டுக்கு, கெல் உடற்காப்பு ஊக்கி சில நேரங்களில் மெக்லியாட் சின்றோமுடன்தொடர்பு கொண்டுள்ளது.[13] ஒரு நோயின் தாக்கம் ஆரம்பிக்கிறது என்பதை அறியும் ஆற்றலை சில இரத்த வகைகள் பாதிக்கின்றன, எடுத்துக்காட்டு: டப்பி உடற்காப்பு ஊக்கி இல்லாதவர்களின் இடத்தில் மலேரியாவை தடுக்கும் ஆற்றல் மிக குறைவு.[14] இயற்கை தேர்வாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு பார்க்கையில் டப்பி உடற்காப்பு ஊக்கி குறைந்து இருக்கும் சில குடியினரிடம் தான் மலேரியா அதிக அளவில் காணப்படுகிறது.[15]

ABO இரத்த பிரிவு அமைப்பு

Thumb
ABO இரத்த பிரிவு அமைப்பு - ABO இரத்த பிரிவை நிர்ணயம் செய்யும் மாவு சத்து சங்கிலியை காட்டும் படம்.

மனித இரத்த ஏற்றங்களில் ABO அமைப்பு இரத்த பிரிவு அமைப்பு மிக முக்கியமான ஒன்று ஆகும். இதில் இருக்கும் ஆண்டி-A உடற்காப்பு மூலங்கள் மற்றும் ஆண்டி-B உடற்காப்பு மூலங்கள் பொதுவாக "தடுப்பாற்றல் புரதம் M", சுருக்கமாக IgM உடற்காப்பு மூலங்களாக இருக்கின்றன. உணவு, பாக்டீரியா, மற்றும் வைரஸ் போன்ற இயற்கை பொருட்களை பொருத்து ஒருவனது ஆயுட்காலத்தின் முதல் பகுதியிலேயே, ABO IgM உடற்காப்பு மூலங்கள் உருவாகின்றன. ABO-இல் இருக்கும் "O" மற்ற மொழிகளில் "0" (பூஜ்ஜியம்/மதிப்பு இல்லை) என்று எடுத்துக்கொள்ளபடுகிறது.[16]

மேலதிகத் தகவல்கள் தோற்றவமைப்பு, மரபணுவமைப்பு ...
மூடு

ரீசஸ் இரத்த பிரிவு அமைப்பு

மனித இரத்த ஏற்றங்களில் இரண்டாவதாக மிக முக்கியமான ஒன்றாக இருப்பது ரீசஸ் அமைப்பு தான். தற்போது இந்த அமைப்பில் 50 உடகாப்பு ஊக்கிகள் உள்ளன. ஐந்து முக்கிய ரீசஸ் உடற்காப்பு ஊக்கிகளில் மிக முக்கிமானதாக உடலின் நோயெதிர்ப்பு அமைப்பில் பிரதான பங்கை வகிக்கும் Rh D உடற்காப்பு ஊக்கி இருக்கிறது. Rh D-நெகடிவ் ஆக இருக்கும் மனிதரிடத்தில் ஆண்டி-Rh D IgG ஆல்லது IgM உடற்காப்பு மூலங்கள் ஆகிய இரண்டுமே இருப்பதில்லை. ஏனென்றால் ஆண்டி-Rh D உடற்காப்பு மூலங்கள் பொதுவாக சுற்றுப்புற பொருட்களுக்கு ஏற்றவாறு உருவாகுவதில்லை. இருப்பினும், Rh D-நெகடிவ் ஆக இருப்பவர்களின் உடல் IgG ஆண்டி-Rh D உடற்காப்பு மூலங்ககளை கிழ்கண்ட ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்கு பிறகு உற்பத்தி செய்ய முடிகிறது: கருதரித்திருக்கும் காலத்தில் கருவில் இருந்து இரத்தம் தாயின் உடலில் கலக்கும் ( பீடோமேடர்னல் இரத்த ஏற்றம்) காலத்தில் நடைபெறுகிறது. சிலசமயங்களில் RhD பாசிடிவ் RBCக்களை கொண்டு இரத்தம் ஏற்றப்படுவதால் இது நடைபெறுகின்றது.[5] Rh நோய் இந்த இந்த நோயாளிகளிடம் உருவாகலாம்.[17]

ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் ABO மற்றும் Rh பங்கீடு

மேலதிகத் தகவல்கள் நாடு, மக்கள் தொகை ...
ஒவ்வொரு நாட்டில் இருக்கும் ABO மற்றும் Rh இரத்த வகை பங்கீடு (குத்துமதிப்பான மக்கள் தொகை)
நாடு மக்கள் தொகை[18]  O  A  B AB+  O  A.  B AB-
ஆஸ்திரேலியா[19] 21262641 40% 31% 8% 2% 9% 7% 2% 1%
ஆஸ்திரியா[20] 8210281 30% 33% 12% 6% 7% 8% 3% 1%
பெல்ஜியம்[21] 10414336 38% 34% 8.5% 4.1% 7% 6% 1.5% 0.8%
பிரேசில்[22] 198739269 36% 34% 8% 2.5% 9% 8% 2% 0.5%
கனடா[23] 33487208 39% 36% 7.6% 2.5% 7% 6% 1.4% 0.5%
டென்மார்க்[24] 5500510 35% 37% 8% 4% 6% 7% 2% 1%
எஸ்டோனியா[25] 1299371 30% 31% 20% 6% 4.5% 4.5% 3% 1%
பின்லாந்து[26] 5250275 27% 38% 15% 7% 4% 6% 2% 1%
பிரான்ஸ்[27] 62150775 36% 37% 9% 3% 6% 7% 1% 1%
ஜெர்மனி[28] 82329758 35% 37% 9% 4% 6% 6% 2% 1%
ஹாங் காங் SAR[29] 7055071 40% 26% 27% 7% 0.31% 0.19% 0.14% 0.05%
ஐஸ்லாந்து[30] 306694 47.6% 26.4% 9.3% 1.6% 8.4% 4.6% 1.7% 0.4%
இந்தியா[31] 1166079217 36.5% 22.1% 30.9% 6.4% 2.0% 0.8% 1.1% ௦0.2%
அயர்லாந்து[32] 4203200 47% 26% 9% 2% 8% 5% 2% 1%
இஸ்ரேயல்[33] 7233701 32% 34% 17% 7% 3% 4% 2% 1%
நியூசிலாந்து[34] 4213418 38% 32% 9% 3% 9% 6% 2% 1%
நோர்வே[35] 4660539 34% 42.5% 6.8% 3.4% 6% 7.5% 1.2% 0.6%
போலாந்து[36] 38482919 31% 32% 15% [7% 6% 6% 2% 1%
போர்டியுகல்[37] 10707924 36.2% 39.8% 6.6% 2.9% 6.0% 6.6% 1.1% 0.5%
சவுதி அரேபியா[38] 28686633 48% 24% 17% 4% 4% 2% 1% 0.23%
தென்னாப்பிரிக்கா[39] 49320000 39% 32% 12% 3% 7% 5% 2% 1%
ஸ்பெயின்[40] 40525002 36% 34% 8% 2.5% 9% 8% 2% 0.5%
ஸ்வீடன்[41] 9059651 32% 37% 10% 5% 6% 7% 2% 1%
நெதர்லாண்ட்ஸ்[42] 16715999 39.5% 35% 6.7% 2.5% 7.5% 7% 1.3% 0.5%
துருக்கி[43] 76805524 29.8% 37.8% 14.2% 7.2% 3.9% 4.7% 1.6% 0.8%
யுனைடட் கிங்டம் [44] 61113205 37% 35% 8% 3% 7% 7% 2% 1%
யுனைடட் ஸ்டேட்ஸ் [45] 307212123 37.4% 35.7% 8.5% 3.4% 6.6% 6.3% 1.5% 0.6%
.
சராசரி மக்கள் தொகை (மொத்த மக்கள் தொகை = 2261025244) 36.44% 28.27% 20.59% 5.06% 4.33% 3.52% 1.39% 0.45%
மூடு
மேலதிகத் தகவல்கள் Racial & Ethnic Distribution of ABO (Rh இல்லாமல்) இரத்த வகைகள் (இந்த அட்டவணை மேலுள்ள அட்டவணையைக் காட்டிலும் அதிக உள்ளீட்டைக் கொண்டுள்ளது ஆனால் Rh வகைகளில் எந்த வேறுபாடும் இல்லை.) ...
மூடு

B இரத்த பிரிவு அதிக அளவில் வட இந்தியா மற்றும் அருகில் இருக்கும் மத்திய ஆசியாவில் இருக்கும் மக்களிடத்தில் காணப்படுகிறது. இந்த பிரிவு வகை கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் குறைந்தே காணப்படுகிறது, முக்கியமாக ஸ்பெயின் போன்ற நாடுகளில் இந்த இரத்த வகையின் விகிதம் மிகக் குறைந்தே காணப்படுகிறது.[47][48] பழங்குடி வாழ் அமெரிக்கர் மற்றும் ஆஸ்திரேலிய அபோரிஜின் மக்கள் போன்றோரிடம், ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்னர், சுத்தமாகவே இந்த வகை இரத்த பிரிவு இருக்கவில்லை என்று நம்பப்டுகின்றது.[48][49]

இரத்த பிரிவு A அதிக அளவில் ஐரோப்பாவில் காணப்படுகிறது, குறிப்பாக ஸ்கான்டிநேவியா, மத்திய ஐரோப்பாவில் காணப்படுகிறது. ஆஸ்திரேலிய ஆபார்ஜினி மக்களிடமும் மோன்டானாவில் இருக்கும் ப்ளாக்புட் இந்தியர்களிடமும் இந்த வகை இரத்தம் அதிகமாக காணப்படுகிறது.[50][51]

மற்ற இரத்த பிரிவு அமைப்புகள்

தற்போது இன்டர்நேஷனல் சொசைடி ஆப் ப்ளட் ட்ரான்ஸ்பியூஷன் 30 இரத்த பிரிவுகளை அங்கீகரித்து உள்ளது.( ABO மற்றும் Rh அமைப்புகளும் சேர்த்து).[2] இவ்வாறாக, RBC மேற்பரப்பு படலத்தில் ABO, ரீசஸ் உடற்காப்பு ஊக்கிகளுடன் மற்ற வகை உடற்காப்பு ஊக்கிகளும் இருக்கின்றன. எடுத்துக்காட்டு: ஒருவன் AB RhD பாசிடிவ் இரத்த வகை கொண்டிருக்கலாம், அவனது இரத்தம் M மற்றும் N பாசிடிவ் (MNS அமைப்புப்படி) ஆக கூட இருக்கலாம். அது K பாசிடிவ் (கெல் அமைப்பு), Lea அல்லது Leb நெகடிவ் (லூவிஸ் அமைப்பு) ஆக இருக்கலாம். ஒவ்வொரு இரத்த பிரிவு அமைப்பு உடற்காப்பு ஊக்கியை பொருத்து பாசிடிவ் அல்லது நெகடிவ்வாக மாறி இருக்கிறது. இந்த உடற்காப்பு ஊக்கிகள் முதல் முதலில் எந்த நோயாளியிடம் காணப்படுகிறதோ, அந்த நோயாளியின் பெயரிலேயே அந்த இரத்த பிரிவு அமைப்புகள் அழைக்கப்படுகின்றன.

மருத்துவச் சிறப்பு

குருதி மாற்றீடு

இரத்த பிரிவுகளின் படிப்பு, ஒரு இரத்த வங்கி இரத்தம் ஏற்றுவதற்கு எவ்வாறு உதவி செய்கிறது ஆகியவற்றுடன் தொடர்பு கொண்ட இரத்தம் ஏற்றல் மருத்துவம் இரத்தவியலின் ஒரு பிரிவாகும். உலகமெங்கும், மற்ற மருந்துகள் போல இரத்தத்துடன் சம்மந்தம் கொண்டுள்ள பொருட்கள் யாவும் மருத்துவரால் (அங்கீகரிக்கப்பட்ட மருந்து மருத்துவர் அல்லது அறுவை சிகிச்சையாளர்) பரிந்துரைக்கப்பட்டிருக்க வேண்டும். USA இல் இரத்தம் சம்மந்தப்பட்ட பொருட்கள் யாவும் U.S. புட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்டிரேஷனால்நிர்வகிக்கப்படுகின்றது.

Thumb
இரத்தம் பொருத்தமில்லாததால் ஏற்படும் அக்யூட் ஹெமாளிடிக் ரியாக்ஷனின் முக்கிய அறிகுறிகள்.[52][53]

ஒரு இரத்த வங்கிதானம் செய்பவர்களிடமிருந்து பெரும் இரத்தத்தையும் அதனை பெற்றுக்கொள்பவரின் இரத்தத்தையும் சோதனை செய்கிறது. இது பாதுகாப்புக்காக செய்யப்படுகின்றது. ஒரு யூனிட் இரத்தம் தேவைப்படுபவருக்கு தானம் செய்பவரிடம் இருந்து மாற்றி ஏற்றினால் கூட தீவிரமான அக்யூட் ஹெமொலிடிக் ரியாக்ஷன்,ஹெமாலிசிஸ்(RBC அழிவு) உடன் ஏற்படுகின்றது. சிறுநீரக கோளாறு, அதிர்ச்சி ஆகியவற்றுடன் சில நேரங்களில் இறப்பும் ஏற்படலாம். உடற்காப்பு ஊக்கிகளால் மிக தீவிரமாக செயல்பட்டு RBC க்களை அழிக்க முடிகிறது. சமயங்களில், இவற்றால் அருகில் இருக்கும் அமைப்புகளில் இருக்கும் பொருட்களுடன் இணைந்து ஏற்றப்பட்டுள்ள இரத்தத்தில் ஹெமாலிசிஸ் நோயை ஏற்படுத்த முடிகிறது.

இரத்தம் ஏற்றும்போது ஏற்படும் எதிர்விளைவுகள் அபாயகரமாக இல்லாமல் தடுக்க நோயாளிகளுக்கு முதன் முதலில் அவர்களது இரத்தம் அல்லது அவர்களது தனிப்பட்ட இரத்த பொருட்கள் மற்றும் தான் ஏற்றப்பட வேண்டும். இரத்தத்தை குருக்கிணை செய்வதன் மூலம் அபாயங்கள் தவிர்க்கப்படலாம். ஆனால், இரத்தம் அவசரமாக தேவைப்படும் போது இதனை மேற்கொள்ள முடியாமல் போகிறது. இரத்தம் பெறுபவரின் இரத்தத்தில் இருந்து எடுக்கப்படும் ஊநீரின் மாதிரியுடன் தானம் கொடுப்பவரின் இரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஊநீரின் மாதிரியுடன் குருக்கினைப்பு செய்து பார்ப்பதினால் அந்த இரத்தம் திரளுகிறதா அல்லது கட்டி தட்டுகிறதா என்று அறிய முடிகிறது. நமது கண்ணிற்கு இரத்தம் திரளுதல் தெரியவில்லை என்றால், இரத்தம் திரள்கிறதா என்று இரத்த வங்கி சோதனையாளர்கள் நுண்ணோக்கி மூலம் கண்டறிகிறார்கள் . இரத்தம் திரண்டால் அந்த தானியிடம் இருந்த எடுத்த இரத்தத்தை நோயாளிக்கு ஏற்ற முடியாது என்று உறுதி செய்து கொள்ளலாம். இரத்த வங்கியில் எல்லா இரத்த மாதிரிகளும் சரியாக கண்டுபிடிக்கப்பட்டு குறிக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்காக ISBT 128 அமைப்பு படி பார் கோட்களை அமைத்து இரத்தம் குரியிடப்படுகின்றது.

இரத்த பிரிவுகள் குரி அடையாள அட்டைகள்மூலம் போர் வீரர்கள் அணிந்திருக்கு பச்சை குத்துகள் மூலம், அவசர தேவை இருக்கும் போது அடையாளம் காணப்படுகின்றன. பிரோன்ட்லைன் ஜெர்மன், [[வாப்பேன்-SS உலகப்போர் II|வாப்பேன்-SS உலகப்போர் II]] இன் பொழுது இரத்த வகையை பச்சை குத்தி வைத்திருந்தார்.

அரிதாக இருக்கும் இரத்த வகைகளினால் இரத்த வங்கிகளிலும் மருத்துவமனைகளிலும் நெருக்கடிகள் ஏற்படலாம். எடுத்துக்காட்டு : ஆப்பிரிக்காவின் பழங்குடி இனத்தினரிடம்[54] மிக சாதாரணமாகக் காணப்படும் டப்பி-நெகடிவ் இரத்தம், உலகின் மற்ற இடங்களில் மிக அரிதாக இருக்கிறது. இதனால் மற்ற பகுதிகளில் இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை தரும்போது இரத்தம் தட்டுப்பாடு ஆகிர்டஹு. RhD நெகடிவ் இரத்தத்தை கொண்டுள்ள மனிதர்களால் உலகின் எல்லா இடங்களுக்கும் செல்ல முடியாது. ஏனென்றால் இந்த இரத்த வகை மிகவும் அரிதான ஒன்றாகும், அதிலும் கிழக்கு ஆசியா போன்ற இடங்களில் இது கிடைப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இங்கு மேற்கத்தியர்கள் இரத்தத்தை தானம் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்s.[55]

புதிதாய் பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய் (HDN)

கருவுற்றிருக்கும்பெண் தனது கரு தான் கொண்டிராத உடற்காப்பு ஊக்கிகளை கொண்டிருக்கு என்று அறியவரும் போது அவள் IgG இரத்த பிரிவு உடற்காப்பு ஊக்கிகளை உட்கொள்ளலாம். இது கருவில் இருக்கும் இரத்த அணுக்கள் தாயின் இரத்தத்துடன் கலக்கும் போது இது ஏற்படலாம். (எ.கா. தாய் வயிற்றில் இருக்கும் கருவில் இருந்து குழந்தை பிறக்கும் சமயத்தில் ஒரு சிறிய இரத்த கசிவு ஏற்பட்டால் அல்லது ஈன்றெடுக்கும் போது தடைகள் ஏற்பட்டால்), சில நேரங்களில் மருத்துவ ரீதியான இரத்த ஏற்றம்செய்வதினாலும் ஏற்படுகின்றது. இதனால் Rh நோய்அல்லது மற்ற வகையான பிறந்த குழந்தையில் ஏற்படுகின்ற ஹெமாளிடிக் நோய்கள் (HDN) தற்சமயம் நடக்கும் பிரசவத்தில் அல்லது அடுத்த பிரசவத்தில் ஏற்படலாம். கருவுற்றிருக்கும் பெண் ஆண்டி-RhD உடற்காப்பு ஊக்கிகளை கொண்டிருந்தால் அப்போது அவளது கரு RhD இரத்த வகையை கொண்டிருக்கிறதா என்று சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இது தாயின் ஊநீரில் இருந்து எடுக்கப்படும் கருவில் இருக்கும் DNA- பரிசோதனை செய்வதன் மூலம் குழந்தைக்கு இந்த Rh வருமா அல்லது வராதா என்று கண்டறியமுடிகிறது[56] இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த முன்னேற்றம் என்னவென்றால் இந்த நோயை தடுக்கும் மருந்து என்றே கூறலாம். இது RhD நெகடிவ் தாய்மார்களிடம் ஆண்டி-RhD உடற்காப்பு ஊக்கிகள் உருவாவதை தவிர்க்கின்றன. இது கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு Rho(D) தடுப்பாற்றல் புரத மருந்தை ஊசி போட்டு செலுத்துவதன் மூலம் செய்ய முடிந்தது..[57][58] மற்ற இரத்த வகைகளுடன் தொடர்பு கொண்டிருக்கும் உடற்காப்பு ஊக்கிகளாலும் தீவிரமான HDN ஏற்படலாம். மற்றவையால் குறைந்த அளவு HDN ஏற்பட காரணமாக இருக்கின்றன.சிலவற்றால் HDN ஏற்படுவதில்லை.[3]

பொருத்தம்

இரத்த பொருட்கள்

ஒவ்வொரு இரத்ததானத்தில் இருந்தும் அதிகமான பலன்களை பெறவும் அதன் வாழ்நாளை நீடிக்கவும், இரத்த வங்கிகள் முழுமையாக இருக்கும் இரத்தத்தை சிறு சிறு பகுதிப்பொருட்களாகப் பிரிக்கின்றன . இவற்றில் மிகவும் பொதுவாக கிடைக்க கூடிய பொருட்கள்- RBCக்கள், பிளாஸ்மா, இரத்த வட்டுகள், உறைந்த பிளாஸ்மா, புத்துணர்வுடன் இருக்கும் உறைந்த பிளாஸ்மா (FFP)ஆகியவை பொட்டலமாக கிடைக்கின்றன. V மற்றும் VIIIஇல் இருக்கும் உறையும் தன்மையை நீட்டித்து வைப்பதற்கு FFP உடனடி-குளிர்பதனம் செய்யப்படுகிறது. இவை இரத்தம் உறைவதில் பிரச்சனை இருக்கும் நோயாளிகளுக்கு ஊசி மூலம் செலுத்தப்படுகின்றன. இந்த பிரச்சனைகள், கல்லீரல் நோய், இரத்தம் உறையாமல் இருக்க கொடுக்கும் மருந்தை அதிக அளவில் கொடுத்தல், அல்லது இரத்தகுழாய்களுக்குள் பரவலான உறைதல்(DIC) ஆகியவற்றால் நிகழ்கின்றன.

முழுமையாக இருக்கும் இரத்த யூனிட்களில் இருந்து எந்த எவ்வளவு அளவு நீக்க முடியுமா, அவ்வளவு அளவு பிளாஸ்மாவை நீக்கி, சிகப்பு அணுக்கள் எடுக்கப்பட்டு பொட்டலமாக கட்டப்படுகின்றன.

நவீன மீண்டினைப்பு முறைகளை கொண்டு, உறையும் உறையவைக்கும் பொருட்கள் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டு ஹீமொபீளியாவை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் சேகரிக்கப்பட்ட இரத்தத்தில் இருந்து எடுக்கப்படும் பொருட்கள் பழுதடைவதனால் ஏற்படும் அபாயங்களை குறைக்க முடிகிறது.

சிகப்பு இரத்த அணு பொருத்தம்

  • RBC-க்களின் மேற்பரப்பில் AB இரத்த பிரிவினருக்கு A மற்றும் B உடற்காப்பு ஊக்கிகள் இருக்கின்றன. இந்த A மற்றும் B உடற்காப்பு ஊக்கிகளுக்கு எதிராக அவர்களது இரத்த ஊநீர் எதுவும் புரிவதில்லை. இதன் விளைவாக, AB இரத்த பிரிவை கொண்ட ஒருவர் அதே இரத்த பிரிவினரிடம் இருந்தும் இரத்தத்தை பெற்றுக்கொள்ளலாம்.(AB க்கு முதலில் முக்கியத்துவம் கொடுத்துவிட்டு). ஆனால் இந்த பிரிவினரால் கொடுக்கப்பட்ட இரத்தம் இதே பிரிவு, அதாவது AB இரத்த பிரிவு கொண்ட ஒருவருக்கு தான் செலுத்த பட வேண்டும்.
  • A இரத்த பிரிவு கொண்ட மனிதர்களின் RBC மேற்பரப்பில் A உடற்காப்பு ஊக்கி இருக்கிறது. இந்த பிரிவின் இரத்த ஊநீர் IgM உடற்காப்பு மூலங்களை B உடற்காப்பு ஊக்கிகளுக்கு எதிராக கொண்டுள்ளது. இதனால் A இரத்த பிரிவை கொண்டுள்ள ஒரு நபர் A அல்லது O பிரிவினரிடம் இருந்து தான் இரத்தம் பெற முடியும்.( A வகைக்கு முக்கியத்துவம் தரவேண்டும்). இவர்களால் A மற்றும் AB பிரிவினருக்கு இரத்தம் தானம் செய்ய முடியும்.
  • B இரத்த பிரிவு கொண்டிருக்கும் நபர்களின் RBC மேற்பரப்பில் B உடற்காப்பு ஊக்கிகள் இருக்கின்றன. இவர்களில் ஊநீர், A உடற்காப்பு ஊக்கிக்கு எதிரான IgM உடற்காப்பு மூலங்களை கொண்டுள்ளது. இதனால், B பிரிவு இரத்தத்தை கொண்டுள்ள ஒருவர் B அல்லது O பிரிவினரிடம் இருந்து இரத்தம் பெற்றுக்கொள்ளலாம்.(B வகைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்). அதே சமயத்தில் இவர்களால் B மற்றும் AB பிரிவனருக்கு இரத்தம் கொடுக்க முடிகிறது.
  • O இரத்த பிரிவு (அல்லது சில நாடுகளில் அழைக்கும் படி இரத்த பிரிவு பூஜ்ஜியம்) கொண்டிருக்கும் நபர்கள் தங்களது RBC மேற்பரப்பில் A மற்றும் B உடற்காப்பு ஊக்கிகளை கொண்டிருப்பதில்லை. ஆனால் இவர்களின் இரத்த ஊநீர் A மற்றும் B இரத்த பிரிவு உடற்காப்பு ஊக்கிகளுக்கு எதிராக IgM ஆண்டி-A மற்றும் ஆண்டி-B உடற்காப்பு மூலங்களை கொண்டு உள்ளது. இதன் காரணத்தால் ஒரு O பிரிவு இரத்தத்தை கொண்டுள்ள ஒருவர், மற்றொரு O பிற ஈனரிடம் இருந்துதான் இரத்தத்தை தானமாக பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இவர்களால் எல்லா வகை இரத்த பிரிவினருக்கும் தங்களது இரத்தத்தை தானமாக கொடுக்க முடியும்.(அதாவது A, B, O or AB). மிக அத்தியாவசியமான காலகட்டங்களில் எவருக்காவது இரத்தம் தேவைப்படுமானால், அந்த சமயங்களில் இரத்தம் பெற்றுக்கொள்பவரின் பிரிவு என்னவென்று கண்டு பிடிக்க நேரம் அதிகம் ஆகும் பொது, அப்பொழுது O நெகடிவ் பிரிவை நாம் பயன் படுத்திக்கொள்ளலாம்.
Thumb
RBC பொருத்தம் அட்டவணை. அதே இரத்த பிரிவுக்கு தானம் அளிப்பதுடன், O இரத்த வகை தானிகள் A, B மற்றும் AB வகையினருக்கும் தரலாம். A மற்றும் B வகைகொண்டுள்ள இரத்த தானிகள் AB வகையினருக்கு தரலாம்.
மேலதிகத் தகவல்கள் குருதி பெறுபவர்[1], குருதி அளிப்பவர்[1] ...
சிகப்பு இரத்த அணு பொருத்தத்தின் வாய்ப்பாடு
[59][60]
குருதி பெறுபவர்[1] குருதி அளிப்பவர்[1]
O− O+ A− A+ B− B+ AB− AB+
O− Green tickY Red XN Red XN Red XN Red XN Red XN Red XN Red XN
O+ Green tickY Green tickY Red XN Red XN Red XN Red XN Red XN Red XN
A− Green tickY Red XN Green tickY Red XN Red XN Red XN Red XN Red XN
A+ Green tickY Green tickY Green tickY Green tickY Red XN Red XN Red XN Red XN
B− Green tickY Red XN Red XN Red XN Green tickY Red XN Red XN Red XN
B+ Green tickY Green tickY Red XN Red XN Green tickY Green tickY Red XN Red XN
AB− Green tickY Red XN Green tickY Red XN Green tickY Red XN Green tickY Red XN
AB+ Green tickY Green tickY Green tickY Green tickY Green tickY Green tickY Green tickY Green tickY
மூடு

வாய்ப்பாடு குறிப்பு
1. குருக்கினை முறை படி தேர்ந்தெடுக்கும் இரத்தத்தில், சில வித்தியாசமான உடற்காப்பு மூலங்கள் இல்லாததால் அந்த இரத்தம் தானம் கொடுப்பவருக்கும் அதனை பெற்றுக்கொள்பவரின் இரத்தத்திற்கும் பொருத்தம் இல்லாமல் போகச் செய்கிறது.

RhD-நெகடிவ் பிரிவு இரத்தத்தை கொண்டு இருக்கும் ஒரு நோயாளியிடம் ஆண்டி-RhD உடற்காப்பு மூலங்கள் இருப்பதில்லை.(இதற்குமுன்னால் RhD-பாசிடிவ் RBC-க்களுக்கு வெளிபடுத்தபடுவதில்லை) இவர்களால் RhD-பாசிடிவ் இரத்தத்தை ஒரே ஒரு மோரி பெற்றுக்கொள்ள முடியும், ஆனால் RhD உடற்காப்பு மூலங்களுக்கு வெளிப்படுத்தப்படும் ஒரு பெண் நோயாளிக்கு இதனால் ஆபாயங்கள் உண்டாகலாம். அவர் கருத்தரிக்கும் போது அவருக்கு பிறக்கும் குழந்தைக்கு ஹெமாளிடிக் நோய் ஏற்படுகிறது. RhD-நெகடிவ் நோயாளியின் உடலில் ஆண்டி-RhD உடற்காப்பு மூலங்கள் உறபத்தியானால், அதன் பிறகு RhD-பாசிடிவ் இரத்தத்திற்கு வெளிப்பட்டு இருக்கும் பொழுது இரத்தம் ஏற்றுவதினால் ஏற்படும் விளைவுகள் ஆபத்தானவையாக இருக்கும். கருத்தரிக்கும் வயதில் இருக்கும் RhD-நெகடிவ் இரத்தத்தை கொண்டுள்ள பெண்களுக்கு கண்டிப்பாக RhD-பாசிடிவ் இரத்தத்தை தரக்கூடாது. அதே போல் RhD உடற்காப்பு மூலங்களை கொண்டுள்ள நோயாளிகளுக்கும் இந்த இரத்தத்தை ஏற்றக்கூடாது. இந்த ஒரு காரணத்திற்காக இரத்த வங்கிகள் பிரத்தியேகமாக ரீசஸ்-நெகடிவ் வகை இரத்தத்தை சேர்த்து பாதுகாத்து வைத்து கொள்ள வேண்டும். அத்தியாவசியமான நேரங்களில், இரத்த வங்கிகளில் RhD-நெகடிவ் வகை இரத்தம் மிகவும் குறைந்து இருக்கும் சமயங்களில் குழந்தை பிறக்கும் காலகட்டத்தை தாண்டிய RhD-நெகடிவ் இரத்த பிரிவை கொண்டுள்ள பெண்களுக்கும் Rh-நெகடிவ் இரத்த பிரிவை கொண்டுள்ள ஆண்களுக்கும் RhD பாசிடிவ் இரத்தம் ஏற்றப்படலாம். ஆனால் இந்த ஆண்களுக்கு ஆண்டி-RhD உடற்காப்பு மூலங்கள் இருக்ககூட்டாது. இவ்வாறு செய்வதன் மூலம் இரத்த வங்கிகளில் குறைவாக இருக்கும் RhD-நெகடிவ் வகை இரத்தத்தை சேமித்துகொள்ளலாம். இதன் மருதலைக்கு இது பொருந்தாது; RhD-நெகடிவ் இரத்தத்திற்கு RhD பாசிடிவ் நோயாளிகள் எந்த வித எதிர்விளைவுகளையும் காட்டுவதில்லை.

ஊநீர் பொருத்தப்பாடு்

ஒரே இரத்த வகையில் இருக்கும் ஊநீர்களை இரத்தம் பெறுபவர்கள் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இரத்த ஊநீரில், தானம் தருபவர்-பெறுபவர் பொருத்தப்பாடு் RBC க்களுக்கு எதிர்மறையாக இருக்கின்றது: AB இரத்தத்தில் இருந்து எடுக்கப்படும் ஊநீர், எந்த வகை இரத்த பிரிவினருக்கும் செலுத்தப்படலாம். O இரத்த பிரிவினர் எந்த இரத்த பிரிவு ஊநீரையும் பெற்றுக்கொள்ளலாம்.ஆனால் O ஊநீர் வகை O இரத்த வகையினருக்கு மட்டுமே செலுத்தப்படவேண்டும்.

மேலதிகத் தகவல்கள் இரத்தம் பெறுபவர், தானம் கொடுப்பவர் [1] ...
ஊநீர் பொருத்த வாய்ப்பாடு
[60] இரத்தம் பெறுபவர் தானம் கொடுப்பவர் [1]
மூடு

! style="width:3em" | O ! style="width:3em" | A ! style="width:3em" | B ! style="width:3em" | AB |- ! O | Green tickY | Green tickY | Green tickY | Green tickY |- ! A | | Green tickY | | Green tickY |- ! B | | | Green tickY | Green tickY |- ! AB | | | | Green tickY

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.