இரண்டாம் கனிஷ்கன்
குசான மன்னன் From Wikipedia, the free encyclopedia
குசான மன்னன் From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் கனிஷ்கன் ( Kanishka II ) சுமார் 225-245 பொ.ச. வரை ஆட்சி செய்த குசானப் பேரரசன் ஆவார். இவர் கடைசி பெரிய குசானப் பேரரசராகக் கருதப்படும் முதலாம் வாசுதேவனுக்குப் பிறகு பதவியேற்றார்.
இரண்டாம் கனிஷ்கன் | |
---|---|
குசானப் பேரரசன் | |
இரண்டாம் கனிஷ்கனின் சித்தரிப்பு கொண்ட நாணயம். | |
ஆட்சிக்காலம் | 200–222 பொ.ச. |
முன்னையவர் | முதலாம் வாசுதேவன் |
பின்னையவர் | வசிஷ்கன் |
இவர் வட இந்தியாவில் குசான ஆட்சியை நிலைநிறுத்தியபோது, இவரது பேரரசின் மேற்குப் பகுதியை, அதாவது பாக்திரியாவை சாசானிய அரசன் முதலாம் சாபிரிடம் (பொ.ச. 240-272) இழந்திருக்கலாம். [1] சாபுரின், நக்ஷ்-இ ரோஸ்டம் பகுதியில் காணப்படும் அவரது கல்வெட்டுகளில், அவர் குசானர்களின் "புருஷபுரம்" ( பெசாவர் ) வரையிலான ஆட்சியைக் கட்டுப்படுத்தியதாகக் கூறுகிறது. குசானர்களை அவர் இந்து குஷ்க்கு அப்பால் கூட விரிவாக்கியிருக்கலாம் என்று கூறுகிறது . [1] ராக்-இ-பிபியில் உள்ள பாறைக் கல்வெட்டு இந்தக் கருத்தை மேலும் ஆதரிக்கிறது. [1]
இரண்டாம் கனிஷ்கனின் நாணயங்கள் மீது குசான-சாசானியரன முதலாம் பெரோஸ் குசான்ஷாவின் பல தாக்கங்கள் அறியப்படுகின்றன. மேலும் பெரோஸின் காலத்திலிருந்தே முதல் குசான-சாசானிய நாணயங்கள் இந்து-குஷுக்கு தெற்கே வெளியிடப்பட்டன. [2]
இவர் ஒரு கட்டத்தில் காந்தாரத்தின் கட்டுப்பாட்டையும், அதே போல் கபிஷாவையும் மீண்டும் கைப்பற்றியிருக்கலாம். மேலும் இந்த வெற்றிகளைத் தொடர்ந்து இவர் அசல் ஒன்றின் நூறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் கனிஷ்கரின் இரண்டாவது சகாப்தத்தை உருவாக்கியிருக்கலாம் என்ற கருத்துக்கள் உள்ளன. [1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.